பன்னிரெண்டாவது பாடம்
ஈமான் மற்றும்
ஸாலிஹான அமல்கள் எமது வாழ்வில் உண்டாகுவற்கான ஈமானுடைய முதாகராவின் இரண்டாவது
படிநிலை - (ii)
(A) அல்லாஹ்வே ''ரப்''
- நாம் அவனது ''அடிமைகள்'' என செயல் முறையில் வெளிப் படுத்தும் ஒரு தலையான ஸாலிஹான
அமலே (இபாதத்தே) - தொழுகை ஆகும்.
தௌஹீதுடைய கலிமாவாகிய ''லாஇலாஹ
இல்லல்லாஹ்'' வை நேரடியாக வெளிப்படுத்தும் செயல் வடிவமே ''தொழுகை'' ஆகும். அதாவது, ஒருவரது
உள்ளத்தில் ஈமான் இருப்பதன் பிரதான
அடையாளமே ''தொழுகை'' ஆகும்.
மேலும், ஸாலிஹான அமல்களில் ("இபாதத்"களில்)
அனைத்தையும் விட உயர்ந்த, மிகவும் பிரதானமான, தலையான அம்சம் - "தொழுகை" ஆகும்.
இதை விட படித் தரத்தில் உயர்ந்த,
சிறந்த வேறெந்த ஸாலிஹான அமலும் (இபாதத்தும்) கிடையாது.
இதனாலேயே அல்லாஹு தஆலா,
அவனை நினைவு படுத்தும் பொருட்டு, தினமும் ஐந்து வேளை தொழுமாறு நமக்கு ஏவுகிறான்.
v
அல்லாஹ்வை நினைவு
படுத்தும் (திக்ர்
- இறை
சிந்தனை செய்யும்) பொருட்டு
தொழுவீராக.
· 20:14 'epr;rakhf ehd;;jhd; my;yh`;! vd;idj; jtpu NtW ehad; ,y;iy.
MfNt> vd;idNa ePH tzq;Fk;. vd;id epidT gLj;Jk; (திக்ர் - இறை சிந்தனை செய்யும்) nghUl;L
njhOifia epiyepWj;JtPuhf.
إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي
(B) அல்லாஹ்விடம் உதவி
தேடும் (''இஸ்திஆனத்'' செய்யும்) ஒரு மிகச் சிறந்த
சாதனமே - தொழுகை ஆகும்.
அல்லாஹ்விடம் உதவி தேடுவது (''இஸ்திஆனத்'' செய்வது) எவ்வாறு எனக்
கூறும் பின்வரும் அல் - குர்ஆன் வசனத்தையும் அதற்கான அல் - குர்ஆன்
விளக்கவுரையையும் கவனிப்போம்.
·
2:153 நம்பிக்கை கொண்டோரே! ''ஸbப்ர்'' (எனும் பொறுமை)யைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம் ''இஸ்திஆனத்'' செய்யுங்கள்)
உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (''ஸாbபிரூன்'' எனும்) பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
இந்த வசனத்தில், அல்லாஹு
தஆலா அவனிடம் உதவி தேடும் (''இஸ்திஆனத்'' செய்யும்) அழகான ஒரு வழிமுறையாக "ஸbப்ர்"
எனும் பொறுமையையும், தொழுகையையும் எங்களுக்கு ஏவுகிறான்.
இங்கே குறிப்பிடப் படும் பொறுமையைப் பற்றி முன்னால் பாடம் (11) பகுதி (D) இல் விரிவாக விளக்கப் பட்டுள்ளது. அதன் சுருக்கமாவது:
v
பொறுமை எவ்வாறு
அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு வரும்?
அல் - குர்ஆன் மற்றும் அல் - ஹதீஸின் ஒளியில் ''ஸbப்ர்'' என்னும் ''பொறுமை'' மூன்று வகைப்படும். அதில் ஒரு வகை: அல்லாஹ்வின் ஏவல்களை, அவை நமது மனதுக்கு பாரமானவைகளாக
இருந்தாலும், அவற்றை
முழு மனதுடன் எடுத்து நடப்பதில் உள்ள கஷ்டங்களைப் பொறுமை செய்தல் ஆகும்.
"பொறுமை"
இபாதத் (வணக்க -
வழிபாடுகள்) மூலம்
அல்லாஹ்விடம்
இஸ்திஆனத் செய்தல் (உதவி தேடுதல்)
அதாவது, ஸாலிஹான அமல்கள்
(நற் செயல்கள்) மூலம்
அல்லாஹ்விடம்
இஸ்திஆனத் செய்தல் (உதவி தேடுதல்)
அல்லாஹ்வின் உதவி வரும்.
ஈருலக வெற்றி (நல்வாழ்வு) உண்டாகும்.
அல்லாஹு
தஆலாவிடம் உதவி தேடும் ("இஸ்திஆனத்'' செய்யும்) அழகான அடுத்த வழிமுறையான தொழுகையைப் பற்றி
இப்பொழுது பார்ப்போம்.
v
தொழுகை எவ்வாறு அல்லாஹ்வின்
உதவியைக் கொண்டு வரும்?
Ø முதலாவது வழிமுறை: ஸாலிஹான அமல்களில் (நற் செயல்களில்) விசேடமானது,
சிறந்தது - ''தொழுகை'' என்பதனால்
பொறுமையின் மூலம் (அதாவது, இபாதத் - ஸாலிஹான அமல்களின்
மூலம்) அல்லாஹ்விடம் இஸ்திஆனத் செய்தல் (உதவி தேடுதல்) பற்றி மேலே குறிப்பிட்ட
வகையில், அனைத்தையும் விட உயர்ந்த, மிகவும் பிரதானமான, தலையான அம்சம் - ''தொழுகை'' ஆகும்; இதை விட படித் தரத்தில் உயர்ந்த,
சிறந்த வேறெந்த ஸாலிஹான அமலும் (இபாதத்தும்) கிடையாது என்கிற படியால்,
இங்கே அல்லாஹு தஆலா பொறுமையுடன் தொழுகையை விஷேடாக வேறுபடுத்திக் கூறுகிறான்.
·
2:153 நம்பிக்கை கொண்டோரே! ''ஸbப்ர்'' (எனும் பொறுமை)யைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம் ''இஸ்திஆனத்'' செய்யுங்கள்)
உதவி தேடுங்கள்.
Ø இரண்டாவது வழிமுறை: "தொழுகை" - வெளி வாழ்க்கையைச்
சீர்படுத்தும் என்பதனால்
பாவம் செய்தால் இம்மையிலும்
மறுமையிலும் தோல்வியே (நெருக்கடியான வாழ்வே) உண்டாகும் என முன்னால் பாடம் (5) இல்
விரிவாக விளக்கப் பட்டுள்ளது.
ஒரு மனிதன் பாவத்தில் இருந்து தவிர்ந்து
இருப்பதற்கும், அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்குவதற்கும் மிகவும் சிறந்த ஒரு பயிற்சி
- ''தொழுகையே'' ஆகும்.
·
29:45 நிச்சயமாக, தொழுகையானது, (மனிதனை) மானக் கேடானவற்றையும் பாவத்தையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (நினைவு) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்.
اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ ۖ إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ ۗ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ ۗ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ
எனவே, மனிதன் தொழுகையின் மூலம், பாவத்திலிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொண்டு, தனது வெளி வாழ்க்கையை சீராக, அழகாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அல்லாஹ்வின்
உதவிகளை அடைய முனைகிறான்.
"பொறுமை"
இபாதத் (வணக்க -
வழிபாடுகள்) மூலம்
அல்லாஹ்விடம்
இஸ்திஆனத் செய்தல் (உதவி தேடுதல்)
அதாவது, ஸாலிஹான அமல்கள்
(நற் செயல்கள்) மூலம்
அல்லாஹ்விடம்
இஸ்திஆனத் செய்தல் (உதவி தேடுதல்)
ஸாலிஹான அமல்களில் (நற் செயல்களில்) விசேடமானது,
சிறந்தது: அத்துடன், நமது செயல்களை மானக் கேடானவற்றிலிருந்தும்
பாவத்திலிருந்தும் தடுத்து ஸாலிஹானதாக அமைக்கக் கூடியது:
''தொழுகை'' ஆகும்.
அல்லாஹ்வின் உதவி வரும்.
ஈருலக வெற்றி (நல்வாழ்வு) உண்டாகும்.
v அல்லாஹ்விடம் உதவி தேடுவதில் நபியவர்கள் கடைபிடித்த வழிமுறை
·
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு ஒரு பிரட்சினையால் துயரம் ஏற்பட்டால், உடனே தொழுகைக்கு விரைந்து செல்வார்கள்.
(அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி); நூல்: அபூதாவுத், முஸ்னத் அஹ்மத்; பார்க்க: தப்ஸீர் இப்னு கசீர் 2:45)
· bபத்ருப் போரின் (முந்தைய) இரவில், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களைத் தவிர மற்ற அனைவரும் உறங்கிக்
கொண்டிருந்தனர். அவர்கள் மட்டும்
விடியும் வரை தொழுது கொண்டும், பிரார்த்தித்துக் கொண்டும் இருந்தார்கள்.
(அறிவிப்பவர்: அலி (ரலி); பார்க்க: தப்ஸீர் இப்னு கசீர் 2:45)
v
தொழுகை உள்ளச்சம்
உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவே இருக்கும்.
"தொழுகை" என
மேலே தரப்பட்ட வசனங்களில் குறிப்பிடப் பட்டிருப்பது, சுன்னத்தான, fபர்ளான அனைத்து
வகையான தொழுகைகளையும் உள்ளடக்கும். அத்துடன் இத் தொழுகையானது, உள்ளச்சம்
உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவே இருக்கும் என்றும் அல்லாஹு தஆலா
குறிப்பிடுகிறான்.
· 2:45 ''ஸbப்ர்'' (எனும் பொறுமை)யைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம் ''இஸ்திஆனத்'' செய்யுங்கள்)
உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக (தொழுகையான) அது உள்ளச்சம் உடையோர்க்கன்றி
மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவே இருக்கும்.
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ
(C) தொழுகை வெளி
வாழ்க்கையை சீர்படுத்தும்.
v
தொழுகையானது, (மனிதனை) மானக் கேடானவற்றையும் பாவத்தையும் விட்டு
விலக்கும்.
ஒரு மனிதன் மானக் கேடானவற்றிலிருந்தும் பாவத்திலிருந்தும் தன்னைத் தற்காத்துக்
கொண்டு, தனது வெளி
வாழ்க்கையை சீராக, அழகாக ஆக்கிக்
கொள்வதன் மூலம், அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கி,
அவனது உதவிகளை அடைய மிகவும் சிறந்த ஒரு
இபாதத் - ஸாலிஹான அமல் - ''தொழுகையே'' ஆகும்.
·
29:45 நிச்சயமாக, தொழுகையானது, (மனிதனை) மானக் கேடானவற்றையும் பாவத்தையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (நினைவு) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்.
· ஒரு மனிதர்
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் வந்து, ''இன்ன மனிதர் இரவில் தொழுகிறார். ஆனால், காலையில் திருடுகிறார்" எனக் கூறினார். அதற்கு நபியவர்கள் "நீங்கள் கூறுவது (அதாவது, தொழுகை) அவர் அவ்வாறு செய்வதை (திருடுவதை) விட்டும் அவரைத் தடுக்கும்" எனக் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்னத் அஹ்மத்; பார்க்க: தப்ஸீர் இப்னு கசீர் 29:45)
· "நிச்சயமாக, தொழுகையானது, (மனிதனை) மானக் கேடானவற்றையும் பாவத்தையும் விட்டு விலக்கும்" எனும் வசனத்தின் கருத்து பற்றி
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்ட போது, "எவரது தொழுகை, அவரைப் பாவங்களிலிருந்தும் தடுக்கவில்லையோ, அவரது தொழுகை தொழுகையே அல்ல" என பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி); நூல்: தப்ரானி, இப்னு அபீஹாதம்; பார்க்க: மஆரிfபுல் குர்ஆன்)
v வெளி வாழ்க்கையை சீர்படுத்த இரண்டு வகையான திக்ருகள் (இறை சிந்தனைகள்)
·
29:45 (egpNa!) ,t; Ntjj;jpypUe;J
ckf;F mwptpf;fg; gl;lij ePH vLj;NjhJtPuhf. ,d;Dk;> njhOifia
epiy epWj;JtPuhf. நிச்சயமாக, தொழுகையானது, (மனிதனை) மானக் கேடானவற்றையும் பாவத்தையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (நினைவு) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்.
اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ ۖ إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ ۗ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ ۗ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ
வல்ல நாயன் அல்லாஹு தஆலா, மேலே குறிப்பிட்ட வசனத்தில்
நபியவர்களுக்கும் விசுவாசிகளுக்கும் இரண்டு விடயங்களை ஏவுகிறான்.
1. இறை வேதமாகிய அல் - குர்ஆனை ஒதுமாறு ஏவுகிறான்.
2.
தொழுகையை
நிலைநிறுத்துமாறு ("இகாமத்" செய்யுமாறு) ஏவுகிறான்.
v
தொழுகையை
நிலைநிறுத்துவோம் ("இகாமத்" செய்வோம்).
"தொழுகையை நிலைநிறுத்துதல்" ("இகாமத்" செய்தல்) என்பதன் பொருளாவது, தொழுகையின் புற
நிலைகளையும் அக நிலைகளையும் நபியவர்கள் எவ்வாறு கருத்தோட்டம் மிக்கதாக அமைத்துக்
கொண்டார்களோ அவ்வாறு அமைத்துக் கொள்வதாகும்.
தொழுகையின் புற நிலைகள்:
·
உடல், உடை, இடம் அனைத்தும்
சுத்தமானதாக இருத்தல்
·
fபர்ளுத் தொழுகைகளை கூட்டாக (ஜமாஅத்தாக) தொழுதல்
· ஒவ்வொரு அசைவுகளையும் நபிவழிப்படி அமைத்துக் கொள்ளல்
தொழுகையின் அக நிலைகள்:
·
இஃலாஸ் - அல்லாஹு தஆலாவுக்காக மட்டுமே தொழுகிறேன்
என்ற மனத் தூய்மை
·
உள்ளச்சம்
·
அல்லாஹ்வின் திக்ர் (இறை சிந்தனை): அல் - குர்ஆன் ஒதுதல், திக்ருகள், துஆக்கள் போன்றன
v
அல்லாஹ்வை நினைவு படுத்தும் (திக்ர் - இறை சிந்தனை செய்யும்) பொருட்டு
தொழுவீராக.
தொழுகையானது, வெறுமனே உடல் உறுப்புகளின் அசைவுகளாக
இருக்காமல், ஒவ்வொரு அசைவுகளும், உள்ளத்தோடு தொடர்பு பட்டதாக வெளியாக
வேண்டும்.
அத்துடன், தொழுகையில் நாம் ஓதும் குர்ஆனும், ஒவ்வொரு இருப்பிலும் நாம் மொழியும் திக்ருகள், துஆக்கள் போன்றனவும் வெறுமனே நமது நாவிலிருந்து மட்டும் வராமல், அவை உள்ளத்திலிருந்து உதிக்க வேண்டும். அதாவது, அதன் கருத்துகளை விளங்கி மொழிய வேண்டும். இதனையே அல்லாஹு தஆலா பின் வருமாறு
கூறுகிறான்.
· 20:14 vd;id epidT gLj;Jk; (திக்ர் - இறை சிந்தனை செய்யும்) nghUl;L
njhOifia epiyepWj;JtPuhf.
إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي
இத்தகைய தொழுகை, நிச்சயமாக, மனிதனை மானக் கேடானவற்றையும் பாவத்தையும்
விட்டு விலக்கி, வெளி வாழ்க்கையை
சீராக்கும் என்பதில் எவ் வித சந்தேகமும் இல்லை.
v தொழுகையில் அல் - குர்ஆன் ஒதுதல்
தொழுகையில் அல்லாஹ்வை திக்ரு (இறை சிந்தனை) செய்வதில் மிகவும் சிறந்தது அல் - குர்ஆன் ஒதுவதாகும். அல்- குர்ஆன் வசனங்களை வெறுமனே ஓதுவது
மட்டுமல்லாமல், அதன் கருத்துகளை
விளங்கி, அதன் பாடங்களை
மனதிற்குள் புகுத்தி, வாழ்வில் கடை பிடிக்க முயற்சிக்க வேண்டும்.
அல்- குர்ஆனை விளங்கி ஓதும் பொழுது, அது எமது ஈமானை அதிகரிக்கச் செய்கிறது. அதன் மூலம், எமது வாழ்வில் அதனது ஏவல்களை எடுத்தும், விலக்கல்களைத் தவிர்ந்தும் வாழ்வது
இலகுவாக இருக்கும்.
Ø தொழுகையில் ஸூறா அல் -
fபாதிஹா
அல் - குர்ஆன் ஒதுவதில் மிகவும் பிரதானமானது: ஸூறா அல் -
fபாதிஹா ஆகும். ஸூறா அல் - பாதிஹாவானது முழுக் குர்ஆனின் அர்த்தத்தையும்
உள்ளடக்கியுள்ளது. எனவேதான், அது ''உம்முல் குர்ஆன்'' (அல் - குர்ஆனின்
தாய்) என அழைக்கப்படுகிறது.
இந்த ஸூறாவை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தொழுகையிலும், ஒவ்வொரு ரகஅத்திலும்
ஓதுவது fபர்ளு ஆகும். அவ்வாறு ஒதாவிட்டால் தொழுகையே செல்லாது. இதிலிருந்தே இந்த
ஸூறாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாமல்லவா?
·
''குர்ஆனின்
தோற்றுவாய்'' (எனப்படும் அல் - fபாதிஹா அத்தியாயத்தை) ஒதாதவருக்குத் தொழுகையே
இல்லை. (ஸஹீஹுல் புகாரி - 756; ஸஹீஹ் முஸ்லிம் - 651)
இந்த ஸூறா அல் - fபாதிஹாவானது ஒரு துஆ (பிரார்த்தனை) ஆகும்.
நமது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான, மிகவும் பிரதானமான ஒன்று ஹிதாயத்
(நேர்வழி) ஆகும். இதனை நாம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தொழுகையிலும், ஒவ்வொரு
ரகஅத்திலும் கேட்கும் முகமாக அல்லாஹு தஆலா இந்த ஸூறா அல் - fபாதிஹாவை நமக்கு
அருளினான்.
ஸூறா அல் - fபாதிஹா பற்றி முன்னால் பாடம் (10) பகுதி (F) இல்
விபரிக்கப்பட்டுள்ளது.
v தொழுகை எவ்வாறு வெளி வாழ்க்கையைச் சீர்படுத்துகிறது?
Ø தொழுகையானது நான் ஒரு அடிமை எனும் உணர்வை உண்டாக்குகிறது.
அல்லாஹ்வே ''ரப்'' - நாம் அவனது ''அடிமைகள்'' என செயல் முறையில் வெளிப்
படுத்தும் ஒரு தலையான ஸாலிஹான அமலே (இபாதத்தே) - தொழுகை ஆகும்.
நாம் அல்லாஹ்வின் அடிமை; அவனுக்கு அடிபணிந்து, வணங்கி - வழிபடுவதற்காகவே நாம் படைக்கப்
பட்டுள்ளோம் எனும் உண்மையை நமக்கு நினைவு படுத்தும் முகமாகவே ஒரு நாளைக்கு ஐவேளை
தொழுமாறு ஏவப் பட்டுள்ளது.
Ø தொழுகையானது அல்லாஹு தஆலா விதித்துள்ள கடமைகளை நினைவுறுத்துகிறது.
இரவு பகல் 24 மணி நேரத்தில், அல்லாஹு தஆலா விதித்திருக்கும் ஆயிரக்
கணக்கான கட்டளைகளை, ஒரு மனிதன் உணர
வேண்டுமானால், அடிப்படைக்
கடமையாகிய "தொழுகை" அதற்கான ஒரு பயிற்சியாக அமைகிறது.
Ø தொழுகையானது அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதற்கான ஒரு பயிற்சியை
வழங்குகிறது.
நாளொன்றுக்கு ஐந்து தடவை, ஒரு அடியான், பாங்கொலி கேட்டதும், அல்லாஹ்வை நோக்கி ஓடி வருகிறான் என்றால்
அது அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதற்கான ஒரு பயிற்சி எனலாம்.
Ø தொழுகையானது தக்வாவை (இறையச்சத்தை)த் தோற்றுவிக்கிறது.
இரவு பகல் 24 மணி நேரத்தில், அல்லாஹு தஆலா விதித்திருக்கும் ஆயிரக்
கணக்கான கட்டளைகளை, ஒரு மனிதன் நிறைவேற்ற
வேண்டுமானால், அவனுக்கு தக்வா (இறையச்சம்) அவசியமாகும். அடிப்படைக் கடமையாகிய "தொழுகை" தக்வா (இறையச்சம்) வருவதற்கான ஒரு மூலமாக அமைகிறது.
Ø தொழுகையானது இறை சட்டங்களை அறிய உதவுகிறது.
தொழுகையில் குர்ஆனை, அதன் கருத்துகளை விளங்கி ஓதும் பொழுது, இறை சட்டங்களை அறியும் வாய்ப்பு
ஏற்படுகிறது. அத்துடன் கூட்டுத்
தொழுகை, ஜும்ஆத் தொழுகை
என்பன படித்தவர்களும் பாமரர்களும் ஒன்று சேர்வதற்கும், இதன் மூலம் கற்றல் - கற்பித்தலுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை
வழங்குகிறது.
Ø தொழுகையானது கூட்டு வாழ்க்கைக்கான ஒரு பயிற்சியை வழங்குகிறது.
முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று பட்டு, உறுதி வாய்ந்த ஒரு சமுதாயமாக வாழ வேண்டும். இந்த சமுதாயச் சக்தியைத் திரட்டும்
வழியில் மற்ற அனைத்தையும் விட முக்கியத்துவம் வாய்ந்திருப்பது தொழுகையே ஆகும்.
(பார்க்க: தப்ஸீர் இப்னு கசீர், மஆரிfபுல் குர்ஆன், தfப்ஹீமுல் குர்ஆன்;
தொழுகை: 29:45)
v
தொழுகையைப் பேணிப் பாதுகாத்து ஈருலக வெற்றியை
(நல்வாழ்வை) அடைவோம்.
·
20:132 (egpNa!) ck;
FLk;gj;jpdiuj; njhOJ tUkhW ePH VTtPuhf! (njhOifapd; kPJ) ePH nghWikAk;>
cWjpAk; nfhz;bUg;gPuhf! ehk; ck;kplk; tho;f;ifj; Njitfisf; Nfl;ftpy;iy. Mdhy;
ckf;F tho;f;ifj; Njitfis ehk; nfhLf;fpNwhk;. ,Wjpahfr; rpwe;j epiy gagf;jp (AilNahU)f;Fj;jhd;.
وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا ۖ لَا نَسْأَلُكَ رِزْقًا ۖ نَحْنُ نَرْزُقُكَ ۗ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَىٰ
·
23:1-2 <khd;
nfhz;ltHfs; epr;rakhf ntw;wp ngw;W tpl;ldH. mtHfs; vj;jifaNahnud;why;> jq;fs;
njhOifapy; cs;sr;rj;NjhL ,Ug;ghHfs;.
Þ قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ
Þ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
·
23:9-11 NkYk; mtHfs;
jk; njhOiffis(f; Fwpj;j fhyj;jpy; KiwNahL) NgZthHfs;. ,j;jifNahH jhk;
(RtHf;fj;jpd;) thhpR jhuHfs;. ,tHfs; /gpHjt;]; (vd;Dk; Rtdgjpia) mde;juq;
nfhz;L mjpy; ,tHfs; vd;nwd;Wk; jq;fpapUg;ghHfs;.
Þ وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ
Þ أُولَٰئِكَ هُمُ الْوَارِثُونَ
Þ الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ
v
தொழுகையில் கவனமற்று, சோம்பல் காட்டுபவர்களுக்கு ஈருலகிலும் கேடுதான்.
·
107:4-6 ,d;Dk;>
(ftdkw;w) njhOifahspfSf;Ff; NfLjhd;. mtHfs; vj;jifNahH vd;why; jk;
njhOifapy; guhKfkhf(Tk;> mrpuj;ijahf)Tk; ,Ug;NghH. mtHfs;
gpwUf;Ff; fhz;gpf;(fNt jhd; njhO)fpwhHfs;.
Þ فَوَيْلٌ لِلْمُصَلِّينَ
Þ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ
Þ
الَّذِينَ هُمْ يُرَاءُونَ
(D) ஈமானுடைய முதாகராவின் இரண்டாவது படிநிலையின் முடிவுரை
ஸாலிஹான அமல்களின் (நற் செயல்களின்) சிறப்புகளைப்
பற்றிப் பேசிப் பேசி ''முஹம்மதுர் றஸூலுல்லாஹ்'' வின் யகீனை அடைவோம்.
ஒருவர் அல்லாஹ்வைப் பற்றி அதிகமாகப் பேசிப் பேசி, தனது உள்ளத்தில் லாஇலாஹ
இல்லல்லாஹ்வுடைய ஈமான் - யகீனை அடைய முயற்சிப்பதன் மூலம் ஈமானை (நம்பிக்கையை) சீர்திருத்தம்
செய்ய வேண்டும். பின்னர் தானாகவே ''இபாதத்'' (வணக்க -
வழிபாடு) மற்றும் ''இஸ்திஆனத்'' (உதவி தேடுதல்)
ஆகிய இரு தன்மைகளையும் தன் வாழ்வில் கடைபிடிக்க முற்படுகிறார் என முன்னால் பாடம் (10) இல் - ''ஈமானுடைய முதாகராவின் முதலாவது படிநிலை''
எனும் தலைப்பில் தெளிவுபடுத்தினோம்.
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், எவ்வாறு அல்லாஹ்வை ''இபாதத்'' (வணக்க -
வழிபாடு) மற்றும் ''இஸ்திஆனத்'' (உதவி தேடுதல்)
செய்வது எனக் காட்டித் தந்தார்களோ அவ் வழிமுறையிலேயே (சுன்னாவின்படியே) அவர் இந்த இரு
தன்மைகளையும் தன் வாழ்வில் கடைபிடித்து ஒழுக வேண்டும்.
இம்மையின் வெற்றியை
(நல் வாழ்வை)யும் மறுமையின் வெற்றியை (நல் வாழ்வை)யும் அல்லாஹு
தஆலா நபிவழிப்படி (சுன்னாவின்படி) வாழ்வதிலேயே
வைத்துள்ளான் என்பதன் மீதான உறுதியான ஈமான் (நம்பிக்கை) - ''முஹம்மதுர்
றஸூலுல்லாஹ்'' வின் யகீன் எனப்படும்.
''முஹம்மதுர்
றஸூலுல்லாஹ்'' வின் யகீன் வருவதற்கு ஸாலிஹான அமல்களின் சிறப்புகளைப் பற்றி அதிகமாகப் பேசுதல் வேண்டும்.
''முஹம்மதுர் றஸூலுல்லாஹ்'' வின் யகீன் வந்ததன் அடையாளம்:
நபிவழியை (சுன்னாவை)ப் பின்பற்றுவதன் மூலம், எமது
செயல்களை (அமல்களை) ஸாலிஹானதாக (நல்லதாக) ஆக்கி அல்லாஹ்விடமே உதவி
தேடுதல் (இஸ்திஆனத் செய்தல்) ஆகும் என முன்னால் பாடம் (11) இல் - ''ஈமானுடைய முதாகராவின் இரண்டாவது படிநிலை
(i)'' எனும் தலைப்பில் தெளிவுபடுத்தினோம்.
ஸாலிஹான அமல்களில் (''இபாதத்''களில்) அனைத்தையும் விட
உயர்ந்த, மிகவும்
பிரதானமான, தலையான அம்சம் - ''தொழுகை'' ஆகும். இதை விட படித் தரத்தில் உயர்ந்த,
சிறந்த அல்லாஹ்விடமிருந்து உதவி
தேடக் கூடிய வேறெந்த ஸாலிஹான அமலும் (இபாதத்தும்) கிடையாது என முன்னால் இப் பாடத்தில் - ''ஈமானுடைய முதாகராவின் இரண்டாவது படிநிலை (ii)'' எனும் தலைப்பில் தெளிவுபடுத்தினோம்.
ஒவ்வொரு வகையான ஸாலிஹான அமல்களுக்கும் (நற் செயல்களுக்கும்) இரண்டு வகையான
சிறப்புகள் உள்ளன.
1. இம்மையில் கிடைக்கும் சிறப்புகள்
2. மறுமையில் கிடைக்கும் சிறப்புகள்
இம்மையின் சுகம்
அற்பமானது; அழிந்து விடக்
கூடியது. மறுமையின் இன்பங்களோ மகத்தானது; நிரந்தரமனது. எனவே, மறுமையைப் பற்றிப் பேசிப் பேசி தற்காலிகமான அற்ப துன்யாவின் (உலகின்)
பக்கமிருந்து ஈடற்ற நிரந்தர ஆகிராவின் (மறுமையின்) பக்கம் திரும்புவது
அவசியமாகும்.
இதனைப் பற்றியே ஈமானுடைய முதாகராவின் மூன்றாவது படிநிலையாகிய
''மறுமையைப் பற்றிப் பேசிப் பேசி மறுமையின் யகீனை அடைவோம்'' எனும் அடுத்த தலைப்பில் (இ.அ.) நோக்குவோம்.
No comments:
Post a Comment