October 17, 2014

14. ஈமானுக்கான உழைப்புக்கான - அமைப்புகள்



பதிநான்காவது பாடம்
ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் எமது வாழ்வில் உண்டாகுவற்கான - ஈமானுக்கான உழைப்புக்கான - அமைப்புகள்

(A) முன்னைய பாடங்களின் சுருக்கம்

v  "தீனுல் இஸ்லாம்" ஈருலக வெற்றிக்கு (நல் வாழ்வுக்கு) ஒரே வழி
உலக மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் சவால்களாகிய இம்மையின் வெற்றியை (நல் வாழ்வை)யும் மறுமையின் வெற்றியை (நல் வாழ்வை)யும் அல்லாஹு தஆலா உயர்தர மார்க்கமாகிய தீனுல் இஸ்லாத்தினைப் பின்பற்றுவதிலே வைத்துள்ளான்.

தீனுல் இஸ்லாதின் அம்சங்களை பின்வருமாறு இரண்டு பிரதான பிரிவுகளாக பிரிக்கப் படும்.
1.       ஈமான் (நம்பிக்கை)
2.       ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்)

இது பற்றி முன்னால் பாடம் (04) இல் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

v  ஈமானுக்கான உழைப்பு என்றால் என்ன?
ஒருவரது வாழ்வில் ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்) வருவதற்கு ஈமான் முன் நிபந்தனையாகும். அதாவது எந்தளவு ஈமான் (நம்பிக்கை)  உறுதியடையுமோ, வலுப் பெறுமோ, சிறப்புறுமோ அந்தளவே ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்) உறுதியடையும்; வலுப் பெறும்; சிறப்புறும்.

எனவே, அவர் முதலில் ஈமானை (நம்பிக்கையை) சீர்திருத்தம் செய்ய வேண்டும். பின்னர், தானாகவே ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்) வளர்ந்து சிறப்புறும். இதற்கான முயற்சியே ஈமானுக்கான உழைப்பு எனப்படும்.

v  ஈமானுக்கான உழைப்பின் 5 படிநிலைகள்
1.      நேரம் ஒதுக்குதல்
2.      ஒன்று சேர்தல் (ஈமானுக்கான சபைகள் அமைத்தல்)
3.      ஈமானுடைய முதாகரா செய்தல்
4.      சிந்தனை செய்தல்
5.      நல்வழியைக் கடைபிடித்தல்
இது பற்றி முன்னால் பாடம் (09) இல் விரிவாக விளக்கப் பட்டுள்ளது.

v  ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் எமது வாழ்வில் உண்டாகுவற்கான ஈமானுடைய முதாகராவின் 3 படிநிலைகள்
1.       அல்லாஹ்வைப் பற்றிப் பேசுதல்
2.       ஸாலிஹான அமல்களின் (நற் செயல்களின்) சிறப்புகளைப் பற்றிப் பேசுதல்
3.       மறுமையைப் பற்றிப் பேசுதல்

ஈமானுடைய முதாகரா பற்றி முன்னால் பாடம் (10), (11), (12), (13) ஆகியவற்றில் விரிவாக விளக்கப் பட்டுள்ளது.

(B) ஈமானுக்கான உழைப்புக்கான அமைப்புகளில் "தப்லீக் ஜமாஅத்" தனித்துவமானது.
உலகிலுள்ள ஒவ்வொரு தனி மனிதனது வாழ்விலும் ஈமான் (நம்பிக்கை) மற்றும் ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்) வர வேண்டும்; ஒவ்வொரு தனி மனிதனும், இம்மையின் வெற்றியை (நல் வாழ்வை)யும் மறுமையின் வெற்றியை (நல் வாழ்வை)யும் அடைய வேண்டும்; அல்லாஹு தஆலாவின் திருப் பொருத்தத்தைப் பெற்று, சுவனத்துக்குத் தகுதியானவனாக மாற வேண்டும் எனும் ஒரு தூய, உயர்ந்த, உன்னதமான நோக்கத்தில் செயற்படும் பல தஃவா அமைப்புகள் அல்லது இயக்கங்கள் இன்று உலகலாவிய ரீதியில் செயற்பட்டு வருகின்றன.

அவை அனைத்தும் பாராட்டுக்கும் வரவேற்புக்கும் உரியனவே. ஏனெனில், அவை அனைத்தும் ஒரு தூய, உயர்ந்த, உன்னதமான நோக்கத்திற்காகவே முயல்கின்றன; அல்லாஹு தஆலா ஒருவனிடமே அதற்கான பிரதிபலன்களையும், கூலிகளையும் எதிர்பார்க்கின்றன.

இத்தகைய முயற்சிகளில் மாபெரும் புரட்சியைத் தோற்றுவித்த, தோற்றுவித்துக் கொண்டிருக்கிற ஒரு தனித்துவமான அமைப்புதான் - "தப்லீக் ஜமாஅத்" ஆகும்.

v  "தப்லீக் ஜமாஅத்" - ஒரு அறிமுகம்
இது மாபெரும் சிந்தனையாளரும், சீர்திருத்த வாதியுமான, வட இந்தியாவைச் சேர்ந்த, இமாம் இல்யாஸ் காந்தலவி (ரஹ்) (1885 - 1944) எனும் பெரியாரினால் 1920 களில் தோற்றுவிக்கப் பட்டது. இன்று இவ் அமைப்பானது உலகலாவிய ரீதியில் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மேலோங்கியிருக்கிறது.

உலகிலுள்ள ஒவ்வொரு தனி மனிதனது வாழ்விலும் ஈமான் (நம்பிக்கை) மற்றும் ஸாலிஹான அமல்கள் (நற் செயல்கள்) வருவதற்காக "தீனுடைய ஆறு அம்சங்கள்" எனும் ஒரு திட்டத்தின் அடிப்படையில் இந்த முயற்சியை அவர்கள் கொண்டு வந்தார்கள்.

v  தப்லீக் ஜமாஅத்தின் இன்றைய நிலைப்பாடு

          *தப்லீக் ஜமாஅத்தின் 25 சிறப்பியல்புகள்*
**************************************************************

*(I) ஜமாஅத்தின் அமைப்பு*
"""""""""""""""""""""""""""""""""""""""""""
1. ஒரே ஜமாஅத்; ஒரே தலைமை. (1)

2. உலகின் மிகப் பெரிய முஸ்லிம் அமைப்பு:
▪ முழு உலகிலும் 150க்கு மேற்பட்ட நாடுகளில்.
▪10 - 15 கோடி மக்களால் செயல்படுத்தப்படுகிறது. (2)

3. உமூமிய்யத்:
▪ஏழை - பணக்காரர்
▪பாமரர் - படித்தவர்
▪சிறியோர் - பெரியோர்
போன்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவர். (3)

4. அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தின் சகல கொள்கைக் காரர்களும் ஒன்றாக இணைந்து செயற்படும் வகையில் சட்டதிட்டங்கள் போன்ற கருத்து வேறுபாடுகள் தவிர்க்கப்படுகின்றன. (4)

5. வாக்குரிமையைப் பயன்படுத்துவதைத் தவிர அரசியலில் வேறு எவ்வித ஈடுபாடும் இல்லை. (5)

*(II) நோக்கங்கள்*
""""""""""""""""""""""""""""
1. முதன்மையான நோக்கம்:
தனது சீர்திருத்தம். (6)

2. இரண்டாவது நோக்கம்:
முழு உம்மத்திடமும் தீன் வர வேண்டும். (7)

*(III) செய்ய வேண்டிய ஒழுங்குமுறை*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
1. உசூல்கள் - ஒழுங்குமுறைகளை தெளிவுபடுத்துவதற்காக எழுதப்பட்ட புத்தகமே "ஹயாதுஸ் ஸஹாபா". (8)

*(IV) செய்ய வேண்டிய தியாகங்கள்*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
1. தனது உடல்:
ஒவ்வொருவரும் அழைப்பாளரே. (9)

2. தனது பொருள்:
கூலியோ, பிரதிபலனோ மக்களிடம் நாடப்படமாட்டாது. (10)

3. தனது நேரம்:
▪குறைந்தது பத்தில் ஒன்று, கூடியது மூன்றில் ஒன்று என்ற அடிப்படையில்.
     > நாளாந்தம் இரண்டரை - எட்டு மணி நேரம்.
     > மாதாந்தம் மூன்று - பத்து நாட்கள்.
     > வருடாந்தம் நாற்பது நாட்கள் - நான்கு மாதங்கள்.
     > ஆயுளில் குறைந்தது ஒரு "நான்கு மாதம்". (11)

4. நfபீர் - வெளியாகுதல். (12)

*(V) வெளியாகி செய்ய வேண்டிய அமல்கள்*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
1. அமீருக்கு கட்டுப்பட்டு ஜமாஅத்தாக வேலை செய்தல். (13)

2. மஸ்ஜிதையே மையமாக வைத்து
▪தஃலீம் - தஅல்லும் (கற்பித்தல் - கற்றல்)
▪தஃவத் - தப்லீக்
▪இபாதத் - தஸ்கியா
▪ஹித்மத் போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். (14)

*தஃலீம் - தஅல்லும்*
--------------------------------------
1. முதலாம் வகை - கிதாபு தஃலீம்:
ரியாழுஸ் ஸாலிஹீன், அல்-அஹாதீஸுல் முன்தகபஹ், அமல்களின் சிறப்புகள் போன்ற கிதாபுகள் மூலம் கற்பித்தல் - கற்றல். (15)

2. இரண்டாம் வகை - ஆறு ஸிபாத் முதாகரா:
▪கலிமா தய்யிபா, தொழுகை, இல்ம் - திக்ர், இக்ராமுல் முஸ்லிமீன், இஃலாஸுன் நிய்யஹ், தஃவத் - தப்லீக் ஆகிய ஆறு ஸிபத்துக்களின்
▪நோக்கம், சிறப்பு, முயற்சி அடிப்படையில் செய்யப்படும் ஈமானுக்கான முதாகரா மூலம் கற்பித்தல் - கற்றல். (16)

3. மூன்றாம் வகை - ஸுஹ்பத்:
தீனுடையவர்களுடைய மாஹோலை உருவாக்கி, கற்பவர்களை அதில் கலந்திருக்கச் செய்வதன் மூலம், தீனுடையவர்களுடைய அமல்களின் மூலம் தீனை செயல் ரூபமாக கற்பித்தல் - கற்றல். (17)

*தஃவத் - தப்லீக்*
--------------------------------
1. ஊடகம் இல்லை:
நபிமார்கள் எவ்வாறு எவ்வித ஊடகமும் இன்றி, மக்களின் காலடிக்கே சென்று தஃவத் கொடுத்தார்களோ அவ்வாறே தஃவத் கொடுக்கப்படும். (18)

2. முக்கியத்துவம் கூடியவற்றுக்கே முதலிடம்:
 ஆறு ஸிபத்துக்களின் அடிப்படையிலேயே தஃவத் கொடுக்கப்படும். (19)

3. தஷ்கீல் (தயார்படுத்துதல்):
▪அமல்கள் சீராக வேண்டுமானால் ஈமான் சீராக வேண்டும்.
▪ ஈமான் சீராகுவதற்கான மிகவும் இலகுவான வழி ஜமாஅத்தில் வெளியாகுவதாகும்.
▪எனவே, ஒரு ஜமாஅத் ஒரு ஊருக்குப் போனால் மக்களுக்கு தஃவத் கொடுத்து, மக்களை ஜமாஅத்தில் வெளியாக தயார்படுத்தி, இன்னொரு ஜமாஅத்தை வெளியாக்கும்.
▪இவ்வாறு இந்த தஷ்கீல் சங்கிலித் தொடர்பில் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். (20)

*(VI) ஊருக்கு திரும்பியதும் செய்ய வேண்டிய அமல்கள்*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
1. மஸ்ஜித்வாரி ஐந்து அமல்கள்:
▪நாளாந்தம்:
     > மஹல்லா மஷூரா
     > மஸ்ஜித் தஃலீம், வீட்டுத் தஃலீம்
     > இரண்டரை - எட்டு மணி நேர உழைப்பு.
▪வாராந்தம்:
     > மஹல்லா வேலை, பக்கத்து மஹல்லா வேலை.
▪மாதாந்தம்:
     > மூன்று - பத்து நாட்கள் ஜமாஅத்தில் வெளியாகுதல். (21)

2. இஜ்திமா:
▪வாராந்தம்: ஜும்மே ராத், இஃதிகாப்.
▪மாதாந்த ஜோடு போன்றன. (22)

3. கார்குசாரி, மஷூரா, தர்ஃகீப்:
▪நாளாந்தம்: மஹல்லா மஷூரா
▪வாராந்தம்: ஹல்கா மஷூரா
▪மாதாந்தம்: ஏரியா மஷூரா
▪Zone  மஷூரா
▪உள்நாட்டு மர்கஸ் மஷூரா
▪டில்லி மஷூரா (23)

*(VII) பெண்களின் ஈடுபாடு*
""""""""""""""""""""""""""""""""""""""""""""
▪நாளாந்தம் வீட்டில் ஐந்து அமல்கள்:
     > தஃலீம்
     > தஜ்வீத் ஹல்கா
     > ஆறு ஸிபாத் முதாகரா
     > தஷ்கீல்
     > மஷூரா
▪வாராந்த பெண்கள் நிகழ்ச்சி.
▪நிபந்தனைகளுடன் வெளியாகுதல். (24)

25. இந்த உழைப்பின் மூலமாக உண்டாகும் மாற்றங்கள் கண்கூடாக அனுபவிக்கவும், அவதானிக்கவும் கூடியதாக இருக்கிறது. (25)
____________________________________________________________________________
_தொகுப்பு: Dr. A.A.M. YASIR (AASIR) (MBBS), +94776470252, 2019.12.21_

1 comment: