June 12, 2026

"Healing & protective verses" called "Manzil" "மன்ஸில்" என அழைக்கப்படும் "குணப்படுத்தும் மற்றும் பாதுகாப்பு வழங்கக் கூடிய வசனங்கள்"

"Healing & protective verses" called "Manzil" consists of specific verses selected from various chapters of the Holy Quran. These verses protects from & eliminate the effects of sorcery & evil eye, provide a sturdy fortress against shayateen (devils), and ward off thieves and harmful beasts.

"மன்ஸில்" என்று அழைக்கப்படும் இந்த "குணப்படுத்தும் மற்றும் பாதுகாப்பு வழங்கக் கூடிய வசனங்கள்", புனித குர்ஆனின் பல்வேறு அத்தியாயங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட வசனங்களைக் கொண்டதாகும். இந்த வசனங்கள் சூனியம் மற்றும் கண் திருஷ்டியின் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதோடு அவற்றின் விளைவுகளையும் நீக்குகின்றன; ஷைத்தான்களுக்கு எதிராக ஒரு பலத்த கோட்டையாக விளங்குகின்றன; மேலும் திருடர்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் விலங்குகளிடமிருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றன.

The compilation is widely known through Shaykh al-Hadith Maulana Muhammad Zakariyya Kandhlawi who compiled it into a formalized booklet.

இத் தொகுப்பு, ஷைகுல் ஹதீஸ் மௌலானா முஹம்மத் ஜகரிய்யா காந்தலவி அவர்களால் முறையாக ஒரு சிறு நூலாகத் தொகுக்கப்பட்டதன் மூலம் பரவலாக அறியப்படுகிறது.

■ Evidences and Scholar Footprints
■ ஆதாரங்களும் அறிஞர்களின் பங்களிப்புகளும்

The practice of grouping these specific verses as an antidote is rooted in historical Ruqyah (spiritual healing) methods documented by prominent scholars long before Maulana Zakariyya.

இந்தக் குறிப்பிட்ட வசனங்களை ஒன்றாகத் தொகுத்து நிவாரணம் அளிக்கும் வழிமுறையாகப் பயன்படுத்தும் நடைமுறை, மௌலானா ஜகரிய்யா அவர்களுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே புகழ்பெற்ற அறிஞர்களால் பதிவு செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ருக்யா (ஆன்மீக சிகிச்சை) முறைகளில் வேரூன்றியுள்ளது.

● Shah Waliullah Dehlawi

It is said that:

"The primary baseline authorization for this specific structure comes from the master Islamic scholar Shah Waliullah Dehlawi (1703–1762 CE).
In his authoritative treatise on spiritual remedies and Sufi practices, Al-Qawl al-Jameel, he explicitly documents these verses.
He notes that these verses eliminate the effects of sorcery, provide a sturdy fortress against shayateen (devils), and ward off thieves and harmful beasts."

ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி

இவ்வாறு கூறப்படுகிறது:

"இந்தக் குறிப்பிட்ட அமைப்பில் வசனங்களைத் தொகுத்துப் பயன்படுத்துவதற்கான அடிப்படை ஆதாரம், தலைசிறந்த இஸ்லாமிய அறிஞரான ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி (1703–1762 கி.பி.) அவர்களிடமிருந்து வருகிறது.
ஆன்மீக சிகிச்சைகள் மற்றும் சூஃபி நடைமுறைகள் குறித்த அவருடைய அதிகாரப்பூர்வ நூலான அல் கௌலுல் ஜமீலில், இந்த வசனங்கள் வெளிப்படையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வசனங்கள் சூனியத்தின் தாக்கங்களை நீக்குகின்றன; சைத்தான்களிற்கு எதிராக வலுவான அரணாக அமைகின்றன; மேலும் திருடர்களையும் தீங்கு விளைவிக்கும் மிருகங்களையும் தடுக்கின்றன என்று அவர் குறிப்பிடுகிறார்."

● General Hadith Principles on Ruqyah
From a primary source perspective, the individual components of the Manzil are supported heavily by the Sunnah. The Prophet ﷺ authenticated the recitation of specific chapters for protection:

• Surah Al-Fatihah:
Described in Sahih al-Bukhari as a foundational Ruqyah when a companion used it to heal a tribal chief from a scorpion sting.

• Ayat al-Kursi (2:255):
Validated in Sahih al-Bukhari (the narration of Abu Hurayrah) as a nightly protection that prevents any devil from approaching until morning.

• The Last Verses of Surah Al-Baqarah (2:284-286):
The Prophet ﷺ stated, "Whoever recites the last two verses of Surah Al-Baqarah at night, it will suffice him" (Sahih al-Bukhari).

• The Mu'awwidhatayn (Surah Al-Falaq & Surah Al-Nas):
Specifically revealed to dismantle the complex black magic targeted at the Prophet ﷺ himself by Labid ibnul A'sam.

ருக்யா தொடர்பான பொதுவான ஹதீஸ் ஆதாரங்கள்
முதன்மை ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, மன்ஸிலின் தனித்தனி பகுதிகள் ஸுன்னாவில் வலுவாக ஆதரிக்கப்படுகின்றன. பாதுகாப்பிற்காக சில குறிப்பிட்ட சூராக்களை ஓதுவதை நபி ﷺ அங்கீகரித்துள்ளார்கள்.

• ஸூரத்துல் ஃபாத்திஹா:
ஸஹீஹுல் புகாரியில், ஒரு ஸஹாபி தேள் கடியால் பாதிக்கப்பட்ட ஒரு கோத்திரத் தலைவரை குணப் படுத்துவதற்காக இதை ஓதியபோது, அது அடிப்படையான ருக்யாவாக விவரிக்கப்பட்டுள்ளது.

• ஆயத்துல் குர்ஸி (2:255):
ஸஹீஹுல் புகாரியில் (அபூ ஹுரைரா رضي الله عنه அவர்களின் அறிவிப்பில்), இதை இரவில் ஓதுபவரை காலை வரை எந்த ஷைத்தானும் நெருங்க முடியாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

• ஸூரத்துல் பகராவின் இறுதி வசனங்கள் (2:284–286):
நபி ﷺ கூறினார்கள்: “யார் இரவில் ஸூரத்துல் பகராவின் கடைசி இரண்டு வசனங்களை ஓதுகிறாரோ, அவை அவருக்குப் போதுமானதாக இருக்கும்.” (ஸஹீஹுல் புகாரி)

• அல்-முஅவ்விததைன் (ஸூரத்துல் ஃபலக் மற்றும் ஸூரத்துன் நாஸ்):
லபீத் இப்னுல் அஃஸம் நபி ﷺ அவர்களை இலக்காகக் கொண்டு செய்த சிக்கலான சூனியத்தை நீக்குவதற்காக இவ்விரு சூராக்களும் குறிப்பாக அருளப்பெற்றன.

● Family Tradition and Modern Booklet Form
Maulana Muhammad Zakariyya mentions in his introduction that these verses were heavily practiced as an everyday domestic litany (wazifa) by the elders of his family. To ensure that children could easily read them and that laypeople didn't have to keep flipping through the entire Quran to find the specific protection verses, he organized them into a single, cohesive booklet layout.

குடும்ப மரபும் நவீன சிறுநூல் வடிவமும்
மௌலானா முஹம்மத் ஸகரிய்யா அவர்கள் தமது முன்னுரையில், இந்த வசனங்கள் அவருடைய குடும்பத்தின் மூத்தோர்களால் அன்றாட வீட்டுப் வழீஃபாவாக அதிகமாகக் கடைப்பிடிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். குழந்தைகள் இவற்றை எளிதாக ஓதுவதற்கும், பொதுமக்கள் பாதுகாப்பு வசனங்களைத் தேடி முழுக் குர்ஆனை அடிக்கடி புரட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் இருப்பதற்கும், அவர் அவற்றை ஒரே ஒழுங்கமைக்கப்பட்ட சிறுநூல் வடிவத்தில் தொகுத்தார்.

Reciting these exact verses is completely permissible and highly recommended under the general category of Ruqyah Shari'ah (using the Word of Allah for healing).

இந்த குறிப்பிட்ட வசனங்களை ஓதுவது முற்றிலும் அனுமதிக்கப்பட்டதும், அல்லாஹ்வின் வார்த்தைகளின் மூலம் நிவாரணத்தையும் பாதுகாப்பையும் நாடும் ஷரீஅத் அடிப்படையிலான ருக்யாவின் பொதுப் பிரிவின் கீழ் மிகவும் பரிந்துரைக்கப்பட்டதுமாகும்.

The Foundational Hadith (The Source of the Verses)
■ அடிப்படை ஹதீஸ் (இந்த வசனங்களின் மூல ஆதாரம்)
The core structure of the Manzil is derived from the following hadith:
மன்ஸிலின் மைய அமைப்பு பின்வரும் ஹதீஸிலிருந்து பெறப்பட்டது:

Ubayy bin Ka'b reported:
"I was with the Prophet ﷺ when a Bedouin came and said, 'O Prophet of Allah, I have a brother who is suffering from an illness.' He said, 'What is his illness?' He replied, 'He has lamam (a form of possession or affliction).' The Prophet ﷺ said, 'Bring him to me.'

So he brought him, and the Prophet ﷺ seated him before him and recited ruqyah over him with
Surah Al-Fatihah,
the first four verses of Surah Al-Baqarah,
these two verses: 'And your God is One God' (2:163),
Ayat al-Kursi,
the last three verses of Surah Al-Baqarah,
the verse from Surah Aali 'Imran: 'Allah bears witness that there is no deity except Him' (3:18),
the verse from Surah Al-A'raf: 'Indeed, your Lord is Allah, who created the heavens and the earth' (7:54),
the end of Surah Al-Mu'minun: 'So exalted is Allah, the Sovereign, the Truth' (23:116),
the verse from Surah Al-Jinn: 'And exalted is the majesty of our Lord; He has not taken a wife or a son' (72:3),
the first ten verses of Surah As-Saffat,
the last three verses of Surah Al-Hashr,
Surah Al-Ikhlas,
Surah Al-Falaq, and
Surah An-Nas.
Then the man stood up as though he had never suffered from any illness at all."

● Recorded by:
Al-Hakim in Al-Mustadrak 'ala al-Sahihayn (8489) and said:
"The two Sheikhs (Al-Bukhari and Muslim), may Allah be pleased with them, relied on all the narrators of this hadith from first to last, except for Abi Janab al-Kalbi. The hadith is preserved and authentic, though they did not record it."
Ibn Majah (3549)
Abdullah ibn Ahmad in Zawa'id al-Musnad (21174)
Al-Tabarani in Al-Du'a (1080)
Abu Ya'la (1594)
Ibn al-Sunni in Amal al-Yawm wa al-Laylah (632)
Ibn al-A'rabi in Al-Mu'jam (584)
Al-Bayhaqi in Al-Da'awat al-Kabir (595) with slight variations in wording.

உபய் இப்னு கஅப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் நபி ﷺ அவர்களிடம் இருந்தபோது ஒரு கிராமவாசி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார்; அவருக்கு ஒரு நோய் உள்ளது” என்றார்.
நபி ﷺ, “அவருக்கு என்ன நோய்?” என்று கேட்டார்கள்.
அவர், “அவருக்கு லமம் (மனநோய் போன்ற ஒரு பாதிப்பு) உள்ளது” என்றார்.
நபி ﷺ, “அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றார்கள்.
அவர் அவரை அழைத்து வந்தார். நபி ﷺ அவரைத் தமது முன்னால் அமர வைத்துவிட்டு பின்வரும் வசனங்களைக் கொண்டு ருக்யா செய்தார்கள்:
ஸூரத்துல் ஃபாதிஹா
ஸூரத்துல் பகராவின் முதல் நான்கு வசனங்கள்
• “உங்களுடைய இறைவன் ஒரே இறைவனே” (2:163)
ஆயத்துல் குர்ஸி
ஸூரத்துல் பகராவின் இறுதி மூன்று வசனங்கள்
ஸூரத்து ஆலி இம்ரானில்: “அல்லாஹ் சாட்சி கூறுகிறான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை” (3:18)
ஸூரத்துல் அஃராஃபில்: “உங்களுடைய இறைவன் அல்லாஹ்வே; அவன்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான்” (7:54)
ஸூரத்துல் முஃமினூனின் இறுதி வசனங்கள்: “உண்மையான அரசனாகிய அல்லாஹ் மிக உயர்ந்தவன்” (23:116)
ஸூரத்துல் ஜின்னில்: “எங்கள் இறைவனின் மகிமை மிக உயர்ந்தது; அவன் மனைவியையோ பிள்ளையையோ எடுத்துக் கொள்ளவில்லை” (72:3)
ஸூரத்துஸ் ஸாஃப்பாத் முதல் பத்து வசனங்கள்
ஸூரத்துல் ஹஷ்ரின் இறுதி மூன்று வசனங்கள்
ஸூரத்துல் இக்லாஸ்
• முஅவ்விததைன் (ஸூரத்துல் ஃபலக் மற்றும் ஸூரத்துன் நாஸ்)
அதன் பின்னர் அந்த மனிதர், தமக்கு எந்த நோயும் இருந்ததே இல்லை என்பது போல் எழுந்து நின்றார்.

ஆதார நூற்கள்:
அல்-ஹாகிம் அல்-முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைனில் (8489) இதை அறிவித்துள்ளார்.
அவர் கூறுகிறார்: "இமாம் அல்-புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய இருவரும் அபூ ஜனாப் அல்-கல்பியைத் தவிர இந்த ஹதீஸின் அனைத்து அறிவிப்பாளர்களையும் ஆதாரமாக எடுத்துள்ளனர். மேலும், இந்த ஹதீஸ் محفوظ (பாதுகாக்கப்பட்ட) மற்றும் صحيح (சரியானது) ஆகும். ஆனால் இருவரும் தங்கள் நூல்களில் இதை பதிவு செய்யவில்லை."
இப்னு மாஜா (3549)
அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் அவர்களின் ஸவாயிதுல் முஸ்னத் (21174)
அல்-தபரானி அவர்களின் அத்-துஆ (1080)
அபூ யஅலா (1594)
இப்னுஸ்-ஸுன்னி அவர்களின் அமலுல் யவ்மி வல்-லைலா (632)
இப்னுல்-அஃராபி அவர்களின் அல்-முஃஜம் (584)
அல்-பைஹகி அவர்களின் அத்-தஅவாத்துல் கபீர் (595) ஆகிய நூல்களில் சிறிய சொல் வேறுபாடுகளுடன் அறிவிக்கப் பட்டுள்ளது.

عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رضي الله عنه قَالَ
كُنتُ عِندَ النَّبيِّ ﷺ فجاء أعرابيٌّ، فقال: يا نبيَّ اللهِ، إنَّ لي أخًا وبه وجَعٌ، قال: وما وَجَعُه؟ قال: به لَمَمٌ، قال: فأْتِني به، فأتاهُ به فوضَعَه بيْن يَدَيه، فعوَّذَه النَّبيُّ ﷺ
بفاتحةِ الكتابِ
وأربعِ آياتٍ مِن سُورةِ البقرةِ
وهاتينِ الآيتينِ: ﴿وَإِلَهُكُمْ إِلَهٌ واحِدٌ﴾ [البقرة: ١٦٣]
وآيةِ الكُرْسيِّ
وثلاثِ آياتٍ مِن آخِرِ سُورةِ البقَرةِ
وآيةٍ مِن آلِ عِمرانَ: ﴿شَهِدَ اللَّهُ أَنَّهُ لا إِلَهَ إِلّا هُوَ﴾ [آل عمران: ١٨]
وآيةِ الأعرافِ: ﴿إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّماواتِ والْأَرْضَ﴾ [الأعراف: ٥٤]
وآخِرِ سُورةِ المُؤمنينَ: ﴿فَتَعالى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ﴾ [المؤمنون: ١١٦]
وآيةٍ مِن سُورةِ الجنِّ: ﴿وَأَنَّهُ تَعالى جَدُّ رَبِّنا ما اتَّخَذَ صاحِبَةً وَلا وَلَدًا﴾ [الجن: ٣]
وعَشرِ آياتٍ مِن أوَّلِ الصّافّاتِ
وثلاثِ آياتٍ مِن آخِرِ سُورةِ الحشرِ
و﴿قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
والمعوِّذَتَينِ
فقام الرَّجلُ كأنَّه لم يَشْكُ شَيئًا قطُّ

أخرجه
الحاكم في المستدرك على الصحيحين (٨٤٨٩) وقال: احتج الشيخان رضي الله عنهما برواة هذا الحديث كلهم عن آخرهم غير أبي جناب الكلبي والحديث محفوظ صحيح، ولم يخرجاه
وابن ماجه (٣٥٤٩)
وعبدالله بن أحمد في ((زوائد المسند)) (٢١١٧٤)
والطبراني في ((الدعاء)) (١٠٨٠)
وأبو يعلى (١٥٩٤)
وابن السني في ((عمل اليوم والليلة)) (٦٣٢)
وابن الأعرابي في ((المعجم)) (٥٨٤)
والبيهقي في ((الدعوات الكبير)) (٥٩٥) باختلاف يسير

■ Contents of "Manzil"
• Surah Al-Fatihah (Chapter 1): Verses 1 to 7
• Surah Al-Baqarah (Chapter 2): Verses 1 to 5, Verse 163, Verse 255 (Ayat al-Kursi), Verses 256 to 257, and Verses 284 to 286
• Surah Al-Imran (Chapter 3): Verse 18, and Verses 26 to 27
• Surah Al-A'raf (Chapter 7): Verses 54 to 56
• Surah Al-Isra (Chapter 17): Verses 110 to 111
• Surah Al-Mu'minun (Chapter 23): Verses 115 to 118
• Surah As-Saffat (Chapter 37): Verses 1 to 11
• Surah Al-Ar-Rahman (Chapter 55): Verses 33 to 40
• Surah Al-Hashr (Chapter 59): Verses 21 to 24
• Surah Al-Jinn (Chapter 72): Verses 1 to 4
• Surah Al-Kafirun (Chapter 109): Verses 1 to 6
• Surah Al-Ikhlas (Chapter 112): Verses 1 to 4
• Surah Al-Falaq (Chapter 113): Verses 1 to 5
• Surah Al-Nas (Chapter 114): Verses 1 to 6
{total 79 verses}

What the Manzil includes and its evidences from this hadith:
مَا يَشْتَمِلُ عَلَيْهِ الْمَنْزِلُ وَأَدِلَّتُهُ مِنْ هَذَا الْحَدِيثِ
سُورة الفاتحة (1: 1-7) (الحاكم/ ابن ماجه/ مصباح/ الفتوحات)
سُورة البقرة (2: 1-4) (الحاكم/ ابن ماجه/ مصباح/ الفتوحات)
سُورة البقرة (2: 5)
وَإِلَهُكُمْ إِلَهٌ واحِدٌ (2:163) (الحاكم/ ابن ماجه/ مصباح/ الفتوحات)
آيةِ الكُرْسيِّ (2:255) (الحاكم/ ابن ماجه/ مصباح/ الفتوحات)
لَاۤ إِكۡرَاهَ فِی ٱلدِّینِ (2:256)
ٱللَّهُ وَلِیُّ ٱلَّذِینَ ءَامَنُوا۟ (2:257)
لِّلَّهِ مَا فِی ٱلسَّمَـٰوَ ٰ⁠تِ (2:284) (الحاكم/ ابن ماجه/ مصباح/ الفتوحات)
ءَامَنَ ٱلرَّسُولُ (2:285) (الحاكم/ ابن ماجه/ مصباح/ الفتوحات)
لَا یُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا (2:286) (الحاكم/ ابن ماجه/ مصباح/ الفتوحات)
شَهِدَ ٱللَّهُ أَنَّهُۥ (3:18) (الحاكم/ ابن ماجه/ مصباح/ الفتوحات)
قُلِ ٱللَّهُمَّ مَـٰلِكَ ٱلۡمُلۡكِ (3:26)
تُولِجُ ٱلَّیۡلَ فِی ٱلنَّهَارِ (3:27)
إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِی (7:54) (الحاكم/ ابن ماجه/ مصباح/ الفتوحات)
ٱدۡعُوا۟ رَبَّكُمۡ تَضَرُّعࣰا (7:55)
وَلَا تُفۡسِدُوا۟ فِی ٱلۡأَرۡضِ (7:56)
قُلِ ٱدۡعُوا۟ ٱللَّهَ (17:110)
وَقُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِی (17:111)
أَفَحَسِبۡتُمۡ أَنَّمَا (23:115)
فَتَعَـٰلَى ٱللَّهُ ٱلۡمَلِكُ ٱلۡحَقُّۖ (23:116) (الحاكم/ الفتوحات)
وَمَن یَدۡعُ مَعَ ٱللَّهِ (23:117) (ابن ماجه/ مصباح)
وَقُل رَّبِّ ٱغۡفِرۡ وَٱرۡحَمۡ (23:118)
وَٱلصَّـٰۤفَّـٰتِ صَفࣰّا (37: 1-10) (الحاكم/ ابن ماجه/ مصباح/ الفتوحات)
فَٱسۡتَفۡتِهِمۡ أَهُمۡ (37: 11)
یَـٰمَعۡشَرَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ (55: 33-40)
لَوۡ أَنزَلۡنَا هَـٰذَا ٱلۡقُرۡءَانَ (59:21)
هُوَ ٱللَّهُ ٱلَّذِی لَاۤ إِلَـٰهَ إِلَّا هُوَۖ عَـٰلِمُ (59: 22-24) (الحاكم/ ابن ماجه/ مصباح/ الفتوحات)
قُلۡ أُوحِیَ إِلَیَّ أَنَّهُ ٱسۡتَمَعَ (72:1)
یَهۡدِیۤ إِلَى ٱلرُّشۡدِ (72:2)
وَأَنَّهُۥ تَعَـٰلَىٰ جَدُّ رَبِّنَا (72:3) (الحاكم/ ابن ماجه/ مصباح/ الفتوحات)
وَأَنَّهُۥ كَانَ یَقُولُ سَفِیهُنَا (72:4)
قُلۡ یَـٰۤأَیُّهَا ٱلۡكَـٰفِرُونَ (109: 1-6)
قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ (112: 1-4) (الحاكم/ ابن ماجه/ مصباح/ الفتوحات)
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ (113: 1-5) (الحاكم/ ابن ماجه/ مصباح/ الفتوحات)
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ (114: 1-6) (الحاكم/ ابن ماجه/ مصباح/ الفتوحات)
المَجْمُوع في منزل: 79 آيات

□ الحاكم ، المستدرك على الصحيحين
□ الألباني، ضعيف ابن ماجه
□ البوصيري، مصباح الزجاجة
□ ابن حجر العسقلاني، الفتوحات الربانية

مَا لَا يَشْتَمِلُ عَلَيْهِ الْمَنْزِلُ
إِنَّ فِی خَلۡقِ ٱلسَّمَـٰوَ ٰ⁠تِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَـٰفِ ٱلَّیۡلِ وَٱلنَّهَارِ وَٱلۡفُلۡكِ ٱلَّتِی تَجۡرِی (2:164) (الفتوحات)

أحاديثٌ أُخْرَى
كنتُ جالِسًا عندَ النَّبيِّ ﷺ إذ جاءَهُ أعرابيٌّ، فقالَ: إنَّ لي أخًا وجِعًا، قالَ: ما وجعُ أخيكَ؟ قالَ: لَممٌ، قالَ: اذهب فأتني بِهِ. قالَ: فذَهَبَ فجاءَ بِهِ، فأجلسَهُ بينَ يديهِ، فسَمِعْتُهُ عوَّذَهُ بفاتحةِ الكتابِ، وأربعِ آياتٍ من أوَّلِ البقرةِ، وآيتينِ من وسطِها، (وَإِلَهُكُمْ إِلَهٌ واحِدٌ)، وآيةِ الكرسيِّ، وثلاثِ آياتٍ مِن خاتمتِها، وآيةٍ من آلِ عِمرانَ أحسبُهُ قالَ: شَهِدَ اللَّهُ أَنَّهُ لا إِلَهَ إِلّا هُوَ وآيةٍ منَ الأعرافِ: إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ الآيةَ، وآيةٍ منَ المؤمنينَ، وَمَنْ يَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ لا بُرْهانَ لَهُ بِهِ، وآيةٍ منَ الجنِّ، (وَأَنَّهُ تَعالى جَدُّ رَبِّنا ما اتَّخَذَ صاحِبَةً وَلا وَلَدًا)، وعشرِ آياتٍ من أوَّلِ الصّافّاتِ، وثلاثِ آياتٍ من آخرِ الحشرِ، وَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، والمعوِّذتينِ، فقامَ الأعرابيُّ، قد برأَ ليسَ بِهِ بأسٌ

الألباني، ضعيف ابن ماجه (٧١٥) • منكر • أخرجه ابن ماجه (٣٥٤٩)، وابن الأعرابي في ((المعجم)) (٥٨٤)، والطبراني في ((الدعاء)) (١٠٨٠) جميعهم بلفظه

جاء رجلٌ إلى النبيِّ ﷺ فقال إنَّ أخي وَجِعٌ قال ما وَجَعُ أخيك قال به لَمَمٌ قال فابعثْ إلي به قال فجاءه فجلس بينَ يدَيه قال فقرأ عليه رسولُ اللهِ ﷺ فاتحةَ الكتابِ وأربعَ آياتٍ من أولِ سورةِ البقرةِ وآيةً من وسطِها وَإِلَهُكُمْ إِلَهٌ واحِدٌ لا إِلَهَ إِلّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ إِنَّ فِي خَلْقِ السَّماواتِ والْأَرْضِ حتى فرغ من الآيةِ فذكر الحديثَ بنحوِه وقال عشرَ آياتٍ من سورةِ الصفِّ ولم يقلْ من أولِها وقال وثلاثَ آياتٍ من آخرِ سورةِ الحشرِ
أبي جناب الكلبي

الهيثمي، مجمع الزوائد (٥/١١٨) • فيه من لم يسم وأبو جناب وهو ضعيف لتدليسه ووثقه ابن حبان • أخرجه أبو يعلى (١٥٩٤)، وابن السني في ((عمل اليوم والليلة)) (٦٣٢)

كنتُ جالسًا عندَ النَّبيِّ ﷺ إذ جاءَهُ أعرابيٌّ فقالَ: إنَّ لي أخًا وجِعًا، قالَ: ما وجعُ أخيكَ؟ قالَ: بِهِ لَممٌ، قالَ: اذهَب فأتِني بِهِ. قالَ: فذَهَبَ فجاءَ بِهِ، فأجلسَهُ بينَ يديهِ، فسَمِعْتُهُ عوَّذَهُ بفاتحةِ الكتابِ، وأربعِ آياتٍ من أوَّلِ البقرةِ، وآيتينِ من وسطِها، وَإِلَهُكُمْ إلَهٌ واحِدٌ وآيةِ الكرسيِّ، وثلاثِ آياتٍ مِن خاتمتِها، وآيةٍ من آلِ عمرانَ أحسبُهُ قالَ: شَهِدَ اللَّهُ أنَّهُ لا إلَهَ إلّا هُوَ وآيةٍ منَ الأعرافِ: إنَّ ربَّكمُ اللَّهُ الَّذِي خَلَقَ الآيةَ، وآيةٍ منَ المؤمنينَ، وَمَنْ يَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ لا بُرْهانَ لَهُ بِهِ وآيةٍ منَ الجنِّ، وَأَنَّهُ تَعالى جَدُّ رَبِّنا ما اتَّخَذَ صاحِبَةً وَلا وَلَدًا وعشرِ آياتٍ من أوَّلِ الصّافّاتِ، وثلاثِ آياتٍ من آخرِ الحشرِ، وَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، والمعوِّذتينِ، فقامَ الأعرابيُّ، قد برأَ ليسَ بِهِ بأسٌ

البوصيري، مصباح الزجاجة (٤/٨٠) • [في] إسناده أبو جناب الكلبي وهو ضعيف ومدلس • أخرجه ابن ماجه (٣٥٤٩)، وابن الأعرابي في ((المعجم)) (٥٨٤)، والطبراني في ((الدعاء)) (١٠٨٠) جميعهم بلفظه

جاء رجُلٌ إلى النبيِّ ﷺ فقال: إنَّ أخي وجِعٌ. فقال: وما وجَعُ أخيكَ؟ قال: به لَمَمٌ. قال: فابعَثْ به إليَّ، فجلَسَ بينَ يدَيْه، فقرَأَ عليه النبيُّ ﷺ فاتحةَ الكتابِ، وأربعَ آياتٍ مِن أوَّلِ سورةِ البقرةِ، وآيتَينِ مِن وسَطِها: ﴿وَإِلَهُكُمْ إِلَهٌ واحِدٌ لا إِلَهَ إِلّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ (١٦٣) إِنَّ فِي خَلْقِ السَّمَواتِ والْأَرْضِ...﴾ [البقرة: ١٦٣-١٦٤]، حتى فرَغَ مِن الآيةِ، وآيةَ الكُرسيِّ، وثلاثَ آياتٍ مِن آخِرِ سورةِ البقرةِ، وآيةً مِن أوَّلِ سورةِ آلَ عِمرانَ، و﴿شَهِدَ اللهُ أَنَّهُ لا إِلَهَ إِلّا هُوَ ..﴾ [آل عمران: ١٨] إلى آخِرِ الآيةِ، وآيةً مِن سورةِ الأعرافِ: ﴿إِنَّ رَبَّكُمُ اللهُ الَّذِي خَلَقَ السَّمَواتِ والْأَرْضَ...﴾ [الأعراف: ٥٤]، وآيةً مِن سورةِ المؤمنينَ: ﴿فَتَعالى اللهُ الْمَلِكُ الْحَقُّ لا إِلَهَ إِلّا هُوَ رَبُّ الْعَرْشِ الْكَرِيمِ﴾ [المؤمنون: ١١٦]، وآيةً مِن سورةِ الجنِّ: ﴿وَأَنَّهُ تَعالى جَدُّ رَبِّنا ما اتَّخَذَ صاحِبَةً وَلا وَلَدًا﴾ [الجن: ٣]، وعشْرَ آياتٍ مِن سورةِ الصافّاتِ مِن أوَّلِها، وثلاثًا مِن آخِرِ سورةِ الحشرِ، و: ﴿قُلْ هُوَ اللهُ أَحَدٌ...﴾ [سورة الإخلاص]، والمعوِّذتينِ

ابن حجر العسقلاني، الفتوحات الربانية (٤/٤٢) • غريب • أخرجه أبو يعلى (١٥٩٤)، وابن السني في ((عمل اليوم والليلة)) (٦٣٢)

قال ابن الجوزي في العلل المتناهية (٢/٨٨٢) • [فيه] أبو جناب اسمه يحيى بن أبي حية كان يحيى القطان يقول لا أستحل أن أروي عنه وقال الفلاس متروك الحديث وأما عبد الله بن عيسى فغاية في الضعف • أخرجه عبدالله بن أحمد في ((زوائد المسند)) (٢١١٧٤)، والحاكم (٨٤٨٩)، والبيهقي في ((الدعوات الكبير)) (٥٩٥) باختلاف يسير

الراوي أبو جناب الكلبي اسمه يحيى بن أبي حية
قال الهيثمي، مجمع الزوائد: فيه من لم يسم وأبو جناب وهو ضعيف لتدليسه ووثقه ابن حبان
قال البوصيري، مصباح الزجاجة: [في] إسناده أبو جناب الكلبي وهو ضعيف ومدلس
قال ابن الجوزي، العلل المتناهية: [فيه] أبو جناب اسمه يحيى بن أبي حية كان يحيى القطان يقول لا أستحل أن أروي عنه وقال الفلاس متروك الحديث وأما عبد الله بن عيسى فغاية في الضعف

جاء في تهذيب الكمال في أسماء الرجال (المزي - جمال الدين أبو الحجاج المزي)
عن يحيى بن أبي حية ، أبو جناب الكلبي الكوفي، واسم أبي حية حي

ذكره محمد بن سعد في الطبقة الخامسة من أهل الكوفة ، وقال : كان ضعيفا في الحديث
وقال علي ابن المديني : كان يحيى يعني : القطان يتكلم في أبي جناب ، وفي أبيه أبي حية
وقال البخاري : كان يحيى القطان يضعفه
وقال أبو حاتم : كان يحيى القطان يضعف أبا جناب الكلبي

وقال محمد بن يحيى الذهلي : سمعت يزيد بن هارون ، وذكر أبا جناب فقال : كان صدوقا ، ولكن كان يدلس
وقال الغلابي : قال أبو نعيم : لم يكن بأبي جناب بأس ، إلا أنه كان يدلس
وقال أحمد بن سليمان الرهاوي : سمعت أبا نعيم وذكر أبا جناب الكلبي ، فقال : ما كان به بأس ، إلا أنه كان يدلس ، وما سمعت منه شيئا إلا شيئا قال فيه : حدثنا

وقال عبد الله بن أحمد بن حنبل : سمعت أبي يقول : أبو جناب اسمه يحيى بن أبي حية . قال أبو نعيم : كان ثقة ، وكان يدلس قال أبي : أحاديثه أحاديث مناكير

وقال عبد الله بن أحمد بن إبراهيم الدورقي ، عن يحيى بن معين : ليس به بأس إلا أنه كان يدلس . قال يحيى : قال أبو نعيم : لم يكن بأبي جناب بأس إلا أنه كان يدلس .
وقال عباس الدوري ، عن يحيى بن معين : ليس به بأس
وقال عثمان بن سعيد الدارمي ، عن يحيى بن معين : صدوق .
قال عثمان بن سعيد : هو ضعيف
وقال أبو بكر بن أبي خيثمة ، والغلابي وإبراهيم بن عبد الله بن الجنيد ، عن يحيى بن معين : ضعيف
وقال محمد بن عبد الله بن نمير : صدوق ، كان صاحب تدليس ، أفسد حديثه بالتدليس ، كان يحدث بما لم يسمع
وقال العجلي : كوفي ضعيف الحديث ، يكتب حديثه ، وفيه ضعف
وقال أبو زرعة : صدوق ، غير أنه كان يدلس
وقال عبد الرحمن بن يوسف بن خراش : كان صدوقا ، وكان يدلس ، وفي حديثه نكرة
وقال عمرو بن علي : متروك الحديث
وقال إبراهيم بن يعقوب الجوزجاني : يضعف حديثه
وقال يعقوب بن سفيان : ضعيف ، وكان يدلس وقال عبد الرحمن بن أبي حاتم : سألت أبي عن أبي جناب الكلبي ، فقلت : هو أحب إليك أو يحيى البكاء ؟ فقال : لا هذا ولا هذا
قلت : فإذا لم يكن في الباب غيرهما أيهما أكتب ؟ قال : لا يكتب منه شيء ليس بالقوي
وقال أبو عبيد الآجري : سمعت أبا داود يقول : أبو جناب ليس بذاك ، كان أبو نعيم يقول : ثقة يدلس
وقال النسائي : ليس بالقوي
وقال في موضع آخر : ليس بثقة ، يدلس
وذكره ابن حبان في كتاب " الثقات "
قال الغلابي ، عن يحيى بن معين : مات سنة سبع وأربعين ومائة
روى له أبو داود ، والترمذي ، وابن ماجه

June 05, 2026

யோனியிலிருந்து வெளியேறும் திரவம் அசுத்தமா? அது வுழூவை முறிக்குமா? Is vaginal discharge impure? Does it break ablution?

https://seekersguidance.org/answers/shafii-fiqh/what-is-the-ruling-on-normal-vaginal-discharge-in-the-shafii-school/
Question
I have seen conflicting opinions about normal discharge breaking wudu. No matter how thoroughly I wipe the area, the organ is always somewhat damp. Does that dampness (clear/watery) and not related to arousal or such nullify wudu?

நான் சாதாரண வெளியேறும் திரவம் வுழூவை முறிக்குமா என்பதைப் பற்றி முரண்பட்ட கருத்துகளைப் பார்த்துள்ளேன். நான் எவ்வளவு கவனமாக அந்த பகுதியைத் துடைத்தாலும், அந்த இடம் எப்போதும் சற்று ஈரமாகவே இருக்கும். அந்த ஈரம் (தெளிவானது/தண்ணீரைப் போன்றது) மற்றும் அது பாலியல் கிளர்ச்சியுடன் தொடர்பில்லாதது — அது வுழூவை முறிக்குமா?
Answer
In the Shafi’i school, this is the breakdown.
As for normal healthy discharge (rutubat al-farj), it is white or clear and regularly exits from a woman, is visible when squatting. This area is washed when cleaning oneself after using the bathroom (istinja’). Some scholars say this is like the sweating of the vaginal walls. This discharge does not nullify the ritual ablution (wudu) and is pure.

சாதாரண ஆரோக்கியமான பெண்ணுறுப்பிலிருந்து வெளியேறும் திரவம் (ருதூபத் அல்-ஃபர்ஜ்) பற்றிய ஷாஃபிஈ மத்ஹபின் விளக்கம் பின்வருமாறு:
இது பொதுவாக வெள்ளை அல்லது தெளிவான நிறமுடைய திரவமாகும். இது பெண்களிடம் வழக்கமாக வெளிவரும்; உட்கார்ந்து குனியும்போது காணப்படக்கூடியதாக இருக்கும்.
கழிவறை பயன்படுத்திய பிறகு தன்னைச் சுத்தம் செய்யும் போது (இஸ்திஞ்ஜா) இந்த பகுதி கழுவப்படுகிறது.
சில அறிஞர்கள், இந்த ஈரப்பதம் யோனிச் சுவர்களின் வியர்வையைப் போன்றது என்று கூறியுள்ளனர்.
இந்த வகையான சாதாரண பெண்ணுறுப்பிலிருந்து வெளியேறும் திரவம் வுழூவை முறிக்காது; மேலும் அது தூய்மையானதாகும்.

There is another regular, healthy, clear, white discharge (rutubat al-farj) that exits from a little deeper in the vagina. This area is not obligatory to wash when using the bathroom, and the male private part reaches this area. This discharge is also pure, but when it exits, it nullifies ritual purity (wudu). [Ibn Hajar] 
Imam al-Ramli considers this impure but excused.

மேலும், யோனியின் சற்று ஆழமான பகுதியில் இருந்து வெளிவரும் மற்றொரு வகையான வழக்கமான, ஆரோக்கியமான, தெளிவான அல்லது வெண்மையான வெளியேறும் திரவம் (ருதூபத் அல்-ஃபர்ஜ்) உள்ளது. இந்த பகுதியை கழிவறை பயன்படுத்திய பிறகு கழுவுவது கட்டாயமல்ல. ஆணுறுப்பு உடலுறவின்போது இந்த இடத்தை அடைகிறது. இந்த வெளியேறும் திரவமும் தூய்மையானதே. ஆனால் அது வெளியே வந்தால், சடங்குரீதியான தூய்மை (வுழூ) முறியும். [இப்னு ஹஜர்]

இமாம் அர்-ரம்லீயின் கருத்துப்படி, இந்த வெளியேறும் திரவம் அசுத்தமானது; எனினும் அது மன்னிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

Another discharge exits from deeper within (i.e., not reached by the male private part); it is considered impure (najis), and when it exits, its nullifies ritual purity (wudu). [Tuhfa al-Muhtaj, p.45]

மற்றொரு வகை வெளியேறும் திரவம் இன்னும் ஆழமான பகுதியிலிருந்து வெளிவருகிறது (அதாவது, ஆணுறுப்பு அடையாத பகுதியிலிருந்து). இது அசுத்தமானதாக (நஜிஸ்) கருதப்படுகிறது. அது வெளியே வந்தால், வுழூ முறியும். — துஹ்ஃபத் அல்-முஹ்தாஜ், பக். 45

This is usually more sticky and clumpy.
If one doubts what kind of discharge she has, she assumes that it’s pure. [Imam al-Ramli] 

இது பொதுவாக அதிக ஒட்டும் தன்மையுடனும், கட்டியாகவும் இருக்கும்.
ஒரு பெண்ணுக்கு தன்னிடம் உள்ள வெளியேறும் திரவம் எந்த வகையைச் சேர்ந்தது என்று சந்தேகம் ஏற்பட்டால், அது தூய்மையானது என்று கருத வேண்டும். [இமாம் அர்-ரம்லீ]

Because of her doubt, it is more religiously precautionary to perform a new ablution instead of praying on the ablution from the previous prayer. With this doubt, there is no need to purify her clothes before praying.

ஆனால் இந்த சந்தேகத்தின் காரணமாக, முந்தைய தொழுகைக்காக செய்த வுழூவையே நம்பி தொழுவதற்குப் பதிலாக, புதியதாக வுழூ செய்து தொழுவது மார்க்க ரீதியாக அதிக முன்னெச்சரிக்கையானதாகும்.
இந்த சந்தேகம் இருக்கும் நிலையில், தொழுகைக்கு முன் ஆடைகளைச் சுத்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

[Ustadha] Shazia Ahmad
உஸ்தாதா ஷாஸியா அஹ்மத்.

شرح المحلي:
“ஷர்ஹ் அல்-மஹல்லீ”

(وَلَيْسَتْ الْعَلَقَةُ وَالْمُضْغَةُ ورطوبة الْفَرْجِ) مِنْ الْآدَمِيِّ (بِنَجَسٍ فِي الْأَصَحِّ) لِأَنَّ الْأَوَّلَيْنِ أَصْلُ الْآدَمِيِّ كَالْمَنِيِّ، وَالثَّالِثُ كَعَرَقِهِ.


அலகஹ், முழ்கா மற்றும் மனிதனின் மறைவிட ஈரப்பதம் ஆகியவை, மிகச் சரியான கருத்துப்படி அசுத்தமானவை அல்ல. ஏனெனில் முதல் இரண்டு (அலகஹ், முழ்கா) மனிதனின் அடிப்படை உருவாக்கத்தின் பகுதிகள்; அவை மனித விந்து போலவே (ஆதாரப் பொருள்) ஆகும். மூன்றாவது (வகை) என்பது அவரது வியர்வையைப் போல ஆகும்.

وَالْقَائِلُ بِالنَّجَاسَةِ يَقُولُ الثَّالِثُ مُتَوَلَّدٌ مِنْ مَحَلِّهَا يُنَجِّسُ ذَكَرَ الْمُجَامِعِ، وَيُلْحِقُ الْأَوَّلَيْنِ بِالدَّمِ إذْ الْعَلَقَةُ دَمٌ غَلِيظٌ، وَالْمُضْغَةُ عَلَقَةٌ جَمَدَتْ فَصَارَتْ كَقِطْعَةِ لَحْمٍ قَدْرَ مَا يُمْضَغُ

அதை அசுத்தமானது (நஜிஸ்) என்று கூறுபவர் கூறுவது: மூன்றாவது (வகை) அது வெளிவரும் இடத்திலிருந்தே உருவாகிறது; ஆகவே அது உடலுறவு கொள்பவரின் ஆணுறுப்பை அசுத்தமாக்குகிறது. முதல் இரண்டு வகைகளையும் அவர் இரத்தத்துடன் ஒப்பிடுகிறார். ஏனெனில் ‘அலக்’ என்பது தடித்த இரத்தமாகும்; ‘முத்கா’ என்பது உறைந்த அலக் ஆகும், அது மென்று சாப்பிடக்கூடிய அளவிலான ஒரு சிறிய இறைச்சித் துண்டாக மாறுகிறது.


المجموع شرح المهذب:
“அல்-மஜ்மூ‘ ஷர்ஹ் அல்-முஹத்தப்” (மதிப்பு வாய்ந்த ஷாஃபிஈ ஃபிக்ஹ் நூல்)

قَالَ الْمُصَنِّفُ رَحِمَهُ اللَّهُ تَعَالَى
[ وَأَمَّا رطوبة فرج المرأة فالمنصوص أنها نجسة لانها رطوبة متولدة في محل النجاسة فكانت نجسة ومن اصحابنا من قال هي طاهرة كسائر رطوبات البدن]

ஆசிரியர் (அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக) கூறுகிறார்:
“பெண்ணின் மறைவிடத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்தவரை, இமாம் ஷாஃபிஈயின் தெளிவான கருத்துப்படி அது அசுத்தமானதாகும். ஏனெனில் அது அசுத்தம் உள்ள இடத்தில் உருவாகும் ஈரப்பதமாக இருப்பதால் அசுத்தமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் எங்கள் அறிஞர்களில் சிலர், உடலின் பிற ஈரப்பதங்களைப் போலவே அது தூய்மையானது என்று கூறியுள்ளனர்.”

[ الشَّرْحُ]
رُطُوبَةُ الفرج مَاءٌ أَبْيَضُ مُتَرَدِّدٌ بَيْنَ الْمَذْيِ وَالْعَرَقِ فَلِهَذَا اُخْتُلِفَ فِيهَا ثُمَّ إنَّ الْمُصَنِّفَ رَحِمَهُ اللَّهُ رَجَّحَ هُنَا وَفِي التَّنْبِيهِ النَّجَاسَةَ وَرَجَّحَهُ أَيْضًا الْبَنْدَنِيجِيُّ:

விளக்கம்:
மறைவிடத்தின் ஈரப்பதம் என்பது மதீ மற்றும் வியர்வை ஆகியவற்றுக்கு இடைப்பட்ட தன்மையுடைய வெண்மையான ஒரு திரவமாகும். இதன் காரணமாகவே அதைப் பற்றிய கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
பின்னர், ஆசிரியர் (அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக) இங்கேயும், அத்-தன்பீஹ் என்னும் நூலிலும், அது அசுத்தமானது என்ற கருத்தை முன்னுரிமை அளித்துள்ளார். இதே கருத்தை அல்-பந்தனீஜியும் முன்னுரிமை அளித்துள்ளார்.

وَقَالَ الْبَغَوِيّ وَالرَّافِعِيُّ وَغَيْرُهُمَا الْأَصَحُّ الطَّهَارَةُ وَقَالَ صَاحِبُ الْحَاوِي فِي بَابِ مَا يُوجِبُ الْغُسْلَ نَصَّ الشَّافِعِيُّ رَحِمَهُ اللَّهُ فِي بَعْضِ كُتُبِهِ عَلَى طَهَارَةِ رُطُوبَةِ الْفَرْجِ

ஆனால் அல்-பகவீ, அர்-ராஃபிஈ மற்றும் பிற அறிஞர்கள், அதிகச் சரியான கருத்து அது தூய்மையானது என்பதாகக் கூறியுள்ளனர். அல்-ஹாவி நூலாசிரியர், குளிப்பு கட்டாயமாகும் விஷயங்கள் பற்றிய பகுதியில் கூறுகிறார்: இமாம் ஷாஃபிஈ (அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக) தனது சில நூல்களில் மறைவிடத்தின் ஈரப்பதம் தூய்மையானது என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

وَحُكِيَ التَّنْجِيسُ عَنْ ابْنِ سُرَيْجٍ فَحَصَلَ فِي الْمَسْأَلَةِ قَوْلَانِ مَنْصُوصَانِ لِلشَّافِعِيِّ أَحَدُهُمَا مَا نَقَلَهُ الْمُصَنِّفُ وَالْآخَرُ نَقَلَهُ صَاحِبُ الْحَاوِي

அது அசுத்தமானது என்ற கருத்து இப்னு ஸுரைஜிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த விஷயத்தில் இமாம் ஷாஃபிஈயிடமிருந்து நேரடியாக அறிவிக்கப்பட்ட இரண்டு கருத்துகள் உள்ளன:
• ஒன்று ஆசிரியர் குறிப்பிட்டது (அது அசுத்தமானது).
• மற்றொன்று அல்-ஹாவி நூலாசிரியர் குறிப்பிட்டது (அது தூய்மையானது).

وَالْأَصَحُّ طهارتها ويستدل للنجاسة أَيْضًا بِحَدِيثِ زَيْدِ بْنِ خَالِدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَأَلَ عُثْمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ

இவற்றில் அதிகச் சரியான கருத்து அது தூய்மையானது என்பதே ஆகும்.
அது அசுத்தமானது என்ற கருத்திற்கும் ஒரு ஆதாரமாக, ஸைத் இப்னு காலித் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள், உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்டதாக வரும் ஹதீஸ் குறிப்பிடப்படுகிறது.

(أَرَأَيْتَ إذَا جَامَعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَلَمْ يُمْنِ قَالَ عُثْمَانُ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلَاةِ وَيَغْسِلُ ذَكَرَهُ قَالَ عُثْمَانُ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) رَوَاهُ الْبُخَارِيُّ وَمُسْلِمٌ

“ஒரு மனிதர் தனது மனைவியுடன் உடலுறவு கொண்டாலும் விந்து வெளிவரவில்லை என்றால் என்ன?” என்று கேட்டபோது, உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்:
“தொழுகைக்காக வுழூ செய்வதைப் போல வுழூ செய்ய வேண்டும்; மேலும் தனது ஆணுறுப்பைக் கழுவ வேண்டும்.”
பின்னர் உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்:
“இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து கேட்டேன்.”
இந்த ஹதீஸை இமாம் புகாரி மற்றும் இமாம் முஸ்லிம் அறிவித்துள்ளனர்.

زَادَ الْبُخَارِيُّ فَسَأَلَ عَلِيَّ بن أبى طالب والزبير ابن الْعَوَّامِ وَطَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ وَأُبَيَّ بْنَ كَعْبٍ فَأَمَرُوهُ بِذَلِكَ:

இமாம் புகாரியின் அறிவிப்பில் மேலும் வருகிறது:
“நான் அலி இப்னு அபீ தாலிப், அஸ்-ஸுபைர் இப்னு அல்-அவ்வாம், தல்ஹா இப்னு உபைதில்லாஹ் மற்றும் உபய் இப்னு கஅப் ஆகியோரிடமும் கேட்டேன்; அவர்களும் இதையே செய்யுமாறு கூறினார்கள்.”

وَعَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّهُ قَالَ (يَا رَسُولَ اللَّهِ إذَا جَامَعَ الرَّجُلُ المرأة فَلَمْ يُنْزِلْ قَالَ يَغْسِلُ مَا مَسَّ الْمَرْأَةَ مِنْهُ ثُمَّ يَتَوَضَّأُ وَيُصَلِّي) رَوَاهُ الْبُخَارِيُّ وَمُسْلِمٌ

மேலும் உபய் இப்னு கஅப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது:
“அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டாலும் விந்து வெளிவரவில்லை என்றால்?”
அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
“அவன் பெண்ணைத் தொட்ட தனது உறுப்பின் பகுதியைக் கழுவ வேண்டும்; பின்னர் வுழூ செய்து தொழ வேண்டும்.”
இந்த ஹதீஸையும் இமாம் புகாரி மற்றும் இமாம் முஸ்லிம் அறிவித்துள்ளனர்.

وَهَذَانِ الْحَدِيثَانِ فِي جَوَازِ الصَّلَاةِ بِالْوُضُوءِ بِلَا غُسْلٍ مَنْسُوخَانِ كَمَا سَبَقَ فِي بَابِ مَا يُوجِبُ الْغُسْلَ وَأَمَّا الْأَمْرُ بِغَسْلِ الذَّكَرِ وَمَا أَصَابَهُ مِنْهَا فَثَابِتٌ غَيْرُ مَنْسُوخٍ وَهُوَ ظَاهِرٌ فِي الْحُكْمِ بنجاسة رطوبة الفرج

இந்த இரண்டு ஹதீஸ்களிலும், குளிப்பு செய்யாமல் வெறும் வுழூவுடன் தொழலாம் என்று கூறப்பட்டிருப்பது, குளிப்பை கட்டாயமாக்கும் பின்னர் வந்த சட்டத்தால் நீக்கப்பட்டதாகும் (மன்ஸூக்), இது முன்பே “குளிப்பு கட்டாயமாகும் விஷயங்கள்” என்ற பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆணுறுப்பையும் அதில் பெண்ணிடமிருந்து பட்டதைவும் கழுவுமாறு வந்த கட்டளை நிலையானது; அது ரத்து (மன்ஸூக்) செய்யப்படவில்லை. இது, மறைவிடத்தின் ஈரப்பதம் அசுத்தமானது என்ற தீர்ப்பிற்கு வெளிப்படையான ஆதாரமாகும்.

والقائل الآخر يحمله عَلَى الِاسْتِحْبَابِ لَكِنْ مُطْلَقُ الْأَمْرِ لِلْوُجُوبِ عِنْدَ جُمْهُورِ الْفُقَهَاءِ وَاَللَّهُ أَعْلَمُ:

மற்ற கருத்தைக் கொண்டவர்கள், இந்தக் கழுவும் கட்டளையை கட்டாயமாக அல்ல, விரும்பத்தக்கதாக (முஸ்தஹப்) எடுத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் பெரும்பாலான ஃபிக்ஹ் அறிஞர்களின் கருத்துப்படி, எந்தக் கட்டளையும் தனிப்பட்ட ஆதாரம் இல்லாத வரை கட்டாயத்தையே குறிக்கிறது.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

وَقَوْلُ الْمُصَنِّفِ رُطُوبَةُ فرج الْمَرْأَةِ فِيهِ نَقْصٌ وَالْأَحْسَنُ رُطُوبَةُ الْفَرْجِ فَإِنَّهُ لَا فَرْقَ بَيْنَ رُطُوبَةِ فَرْجِ الْمِرْأَةِ وَغَيْرِهَا مِنْ الْحَيَوَانِ الطَّاهِرِ كَمَا سَبَقَ وَاَللَّهُ أعلم

மேலும், ஆசிரியர் “பெண்ணின் மறைவிடத்தின் ஈரப்பதம்” என்று கூறியதில் ஒரு குறை உள்ளது. “மறைவிடத்தின் ஈரப்பதம்” என்று பொதுவாகக் கூறியிருப்பது சிறந்ததாக இருந்திருக்கும். ஏனெனில், பெண்ணின் மறைவிடத்தின் ஈரப்பதத்திற்கும், தூய்மையான விலங்குகளின் மறைவிடத்தின் ஈரப்பதத்திற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை; இது முன்பே விளக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.


April 01, 2026

​முகம் மூடுதல் (நிஃகாப்) கடமை என்பதற்கான ஆதாரங்கள்


திருக்குர்ஆனிலிருந்து ஆதாரங்கள்

1. அல்குர்ஆன் 24:31

"நம்பிக்கையுள்ள பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தங்கள் கற்பைக் காத்துக் கொள்ளட்டும்; தங்கள் அழகில் வெளியாரத் தெரியக்கூடியதைத் தவிர (மற்றவற்றை) வெளிப்படுத்த வேண்டாம். தங்கள் முக்காடுகளைத் தங்கள் மார்புகளின் மேல் போட்டுக் கொள்ளட்டும்..."

  • விளக்கம்: கற்பைப் பேணுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். ஒரு பெண்ணின் அழகின் மையமாக விளங்கும் முகத்தைத் திறந்து வைப்பது அந்நிய ஆடவர்களின் பார்வையை ஈர்க்கும். "கண்கள் விபச்சாரம் செய்கின்றன, அவற்றின் விபச்சாரம் (தடுக்கப்பட்டவற்றைப்) பார்ப்பதாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே, கற்பைப் பாதுகாக்க முகம் மூடுதல் அவசியமாகிறது.

2. முக்காடு போடுதல் (ஜுயூபிஹின்ன):

ஜய்ப் என்பது சட்டையின் கழுத்துப்பகுதியைக் குறிக்கும். முக்காட்டை தலை முதல் மார்பு வரை தொங்கவிடுமாறு அல்லாஹ் கூறுகிறான். கழுத்து மற்றும் மார்பை மறைப்பது கடமை என்றால், அழகின் இருப்பிடமான முகத்தை மறைப்பது இன்னும் மேலான கடமையாகும்.

3. வெளிப்படையான அலங்காரத்தைத் தவிர:

இப்னு மஸ்ஊத் (ரலி) போன்ற அறிஞர்கள் "வெளிப்படையான அலங்காரம்" என்பது ஒரு பெண்ணின் மேலாடை அல்லது புர்காவைக் குறிக்கும் என்று விளக்குகிறார்கள். முகமானது "உட்புற அலங்காரத்தில்" அடங்கும், அதை அந்நியர்களுக்குக் காட்ட அனுமதி இல்லை.

4. முதிய பெண்களுக்கான சலுகை (அல்குர்ஆன் 24:60):

திருமண ஆசை இல்லாத முதிய பெண்கள் தங்கள் மேலாடையைக் களைந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது இளம் பெண்களுக்கு அத்தகைய அனுமதி இல்லை என்பதைக் காட்டுகிறது.

5. ஜில்பாப் அணிதல் (அல்குர்ஆன் 33:59):

"நபியே! உம் மனைவிகளுக்கும், உம் புதல்விகளுக்கும், நம்பிக்கையுள்ளவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் மேலாடைகளை (ஜில்பாப்) தங்கள் மேல் தொங்கவிட்டுக் கொள்ளுமாறு கூறுவீராக..."

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதற்கு விளக்கம் அளிக்கும்போது: "பெண்கள் வெளியே செல்லும்போது தங்கள் மேலாடையால் தலை முதல் முகம் வரை மறைத்து, ஒரு கண்ணை மட்டும் வழி தெரிவதற்காக திறந்து வைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்கள்.

​ஸுன்னாவிலிருந்து (நபிகளாரின் போதனைகள்) ஆதாரங்கள்

  1. திருமணப் பேச்சுவார்த்தை: ஒருவர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய நாடினால், அவளைப் பார்ப்பதில் குற்றமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சாதாரணச் சூழலில் முகம் மறைக்கப்பட்டிருப்பதால்தான், திருமணத்திற்காகப் பார்க்கும்போது மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது.
  2. ஜில்பாப் இல்லாத நிலை: ஈத் தொழுகைக்கு பெண்கள் வரும்போது, ஒரு பெண்ணிடம் ஜில்பாப் இல்லையென்றால், அவளுடைய சகோதரி தனது ஜில்பாப்களில் ஒன்றைக் கொடுத்து அவளை மறைக்கச் செய்ய வேண்டும் என நபி (ஸல்) கூறினார்கள்.
  3. அடையாளம் காண முடியாத நிலை: ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: "நம்பிக்கையுள்ள பெண்கள் நபி (ஸல்) அவர்களுடன் பஜ்ர் தொழுகையில் கலந்து கொள்வார்கள். அவர்கள் போர்த்தியிருந்த மேலாடைகளால் இருட்டில் அவர்களை எவராலும் அடையாளம் காண முடியாது."
  4. பாதங்களை மறைத்தல்: பெண்கள் தங்கள் பாதங்களை மறைக்குமாறு கட்டளையிடப் பட்டுள்ளனர். பாதங்களை விட முகம் அதிக அழகும் ஈர்ப்பும் கொண்டது. பாதங்களை மறைப்பது கடமை எனில், முகத்தை மறைப்பது மிக முக்கியமான கடமையாகும்.
  5. இஹ்ராம் நிலை: ஹஜ்ஜின் போது பெண்கள் முகத்திரை (நிஃகாப்) அணியத் தடை விதிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், அந்நிய ஆடவர்கள் கடந்து செல்லும்போது ஆயிஷா (ரலி) உள்ளிட்ட நபித்தோழியர் தங்கள் மேலாடையைத் தலைப்பகுதியிலிருந்து முகத்திற்கு மேலாகத் தொங்கவிட்டு மறைத்துக் கொள்வார்கள்.

​பகுத்தறிவு மற்றும் சமூக நலன் சார்ந்த காரணங்கள்

​முகத்தைத் திறந்து வைப்பதால் ஏற்படும் தீமைகள்:

  • ஃபித்னா (குழப்பம்): பெண்கள் தங்கள் முகத்தை மேலும் அழகாக்கிக் காட்ட முயற்சிப்பார்கள், இது தீய செயல்களுக்கு வழிவகுக்கும்.
  • வெட்கம் குறைதல்: பெண்களின் இயற்கை பண்பான வெட்கம் மற்றும் நாணம் குறையத் தொடங்கும்.
  • ஆடவர்களின் சலனம்: அழகான பெண்களைப் பார்க்கும்போது ஆண்கள் தவறான எண்ணங்களுக்கு ஆளாக வாய்ப்புண்டு.
  • ஆண்-பெண் கலப்பு: முகம் திறந்திருக்கும் போது ஆண்கள் மற்றும் பெண்களிடையே தேவையற்ற உரையாடல்களும் நெருக்கமும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

முடிவு: ஷேக் முஹம்மது இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்களின் "ரிஸாலத் அல்-ஹிஜாப்" நூலிலிருந்து சுருக்கப்பட்ட இந்த ஆதாரங்கள், ஒரு பெண் அந்நிய ஆடவர்களுக்கு முன்னால் தன் முகத்தை மறைப்பது இஸ்லாமிய சட்டப்படி கடமை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

See:

https://islamqa.info/en/answers/11774/is-covering-the-face-obligatory

March 21, 2026

மாதவிடாய் பற்றிய பாடம் (ஷாபிஈ மத்ஹப்)

شرح المحلي على منهاج الطالبين
ஷர்ஹுல் மஹல்லி அலா மின்ஹாஜித் தாலிபீன்

(بَابُ الْحَيْضِ) وَمَا يُذْكَرُ مَعَهُ مِنْ الِاسْتِحَاضَةِ وَالنِّفَاسِ
மாதவிடாய் பற்றிய பாடம்; அதனுடன் குறிப்பிடப்படும் இஸ்திஹாளா மற்றும் நிஃபாஸ் பற்றியும். (ஷாபிஈ மத்ஹப்)

(أَقَلُّ سِنِّهِ تِسْعُ سِنِينَ) قَمَرِيَّةٍ تَقْرِيبًا، فَلَوْ رَأَتْ الدَّمَ قَبْلَ تَمَامِ التِّسْعِ بِمَا لَا يَسَعُ حَيْضًا وَطُهْرًا فَهُوَ حَيْضٌ، أَوْ بِمَا يَسَعُهُمَا فَلَا
மாதவிடாய் ஆரம்பிக்கும் குறைந்தபட்ச வயது சுமார் ஒன்பது சந்திர ஆண்டுகள். ஒன்பது ஆண்டுகள் முழுமையாக முடிவதற்கு முன் இரத்தம் காணப்பட்டால், அது மாதவிடாய்க்கும் தூய்மைக்கும் போதாத அளவு காலத்தில் இருந்தால் அது மாதவிடாய் ஆகும். ஆனால் மாதவிடாய் மற்றும் தூய்மை இரண்டுக்கும் போதுமான காலம் இருந்தால் அது மாதவிடாய் அல்ல
(وَأَقَلُّهُ) زَمَنًا (يَوْمٌ وَلَيْلَةٌ) أَيْ قَدْرُ ذَلِكَ مُتَّصِلًا كَمَا يُؤْخَذُ ذَلِكَ مِنْ مَسْأَلَةٍ تَأْتِي آخِرَ الْبَابِ
மாதவிடாயின் குறைந்தபட்ச காலம் ஒரு நாள் மற்றும் ஒரு இரவு (அதாவது அந்த அளவு நேரம் தொடர்ந்து). இந்த விஷயம் அத்தியாயத்தின் முடிவில் வரும் ஒரு விவகாரத்திலிருந்து புரிந்துகொள்ளப்படுகிறது
(وَأَكْثَرُهُ خَمْسَةَ عَشَرَ) يَوْمًا (بِلَيَالِيِهَا) وَإِنْ لَمْ يَتَّصِلْ أَخْذًا مِنْ الْمَسْأَلَةِ الْآتِيَةِ، وَغَالِبُهُ سِتَّةٌ أَوْ سَبْعَةٌ كُلُّ ذَلِكَ بِالِاسْتِقْرَاءِ مِنْ الْإِمَامِ الشَّافِعِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ
மாதவிடாயின் அதிகபட்ச காலம் பதினைந்து நாட்கள் அதன் இரவுகளுடன். அது தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் சரி. இது பின்னர் வரும் விவகாரத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. பொதுவாக மாதவிடாய் ஆறு அல்லது ஏழு நாட்கள் இருக்கும். இவை அனைத்தும் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் ஆய்வின் அடிப்படையில் கூறப்பட்டவை
(وَأَقَلُّ طُهْرٍ بَيْنَ الْحَيْضَتَيْنِ) زَمَنًا (خَمْسَةَ عَشَرَ) يَوْمًا لِأَنَّ الشَّهْرَ لَا يَخْلُو عَادَةً عَنْ حَيْضٍ وَطُهْرٍ، وَإِذَا كَانَ أَكْثَرُ الْحَيْضِ خَمْسَةَ عَشَرَ يَوْمًا لَزِمَ أَنْ يَكُونَ أَقَلُّ الطُّهْرِ كَذَلِكَ
இரண்டு மாதவிடாய்களுக்கு இடையில் இருக்கும் குறைந்தபட்ச தூய்மை காலம் பதினைந்து நாட்கள். ஏனெனில் ஒரு மாதத்தில் பொதுவாக மாதவிடாய் மற்றும் தூய்மை இரண்டும் இருக்கும். மாதவிடாயின் அதிகபட்சம் பதினைந்து நாட்கள் என்றால், தூய்மையின் குறைந்தபட்சமும் அதே அளவு இருக்க வேண்டும்
وَاحْتُرِزَ بِقَوْلِهِ: بَيْنَ الْحَيْضَتَيْنِ عَنْ الطُّهْرِ بَيْنَ الْحَيْضِ وَالنِّفَاسِ، فَإِنَّهُ يَجُوزُ أَنْ يَكُونَ أَقَلَّ مِنْ خَمْسَةَ عَشَرَ يَوْمًا تَقَدَّمَ الْحَيْضُ كَمَا سَيَأْتِي آخِرَ الْبَابِ أَوْ تَأَخَّرَ بِأَنْ
رَأَتْ النُّفَسَاءُ أَكْثَرَ النِّفَاسِ وَانْقَطَعَ الدَّمُ ثُمَّ عَادَ قَبْلَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا؛ ذَكَرَهُ فِي شَرْحِ الْمُهَذَّبِ
இரண்டு மாதவிடாய்களுக்கு இடைப்பட்ட காலம் என்று (நூலாசிரியர்) கூறியதன் மூலம், மாதவிடாய்க்கும் நிஃபாஸிற்கும் இடைப்பட்ட தூய்மையான காலத்திற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஏனெனில், இந்த இடைப்பட்ட தூய்மையான காலம் பதினைந்து நாட்களை விடக் குறைவாக இருக்க முடியும். மாதவிடாய் முந்தி வந்தாலும் சரியே (இது குறித்த விளக்கம் இப்பகுதியின் இறுதியில் வரும்), அல்லது மாதவிடாய் பிந்தி வந்தாலும் சரியே. அதாவது, ஒரு பெண் தனது பிரசவ கால இரத்தத்தின் (நிஃபாஸ்) அதிகபட்ச காலத்தைக் கண்டு, இரத்தம் நின்ற பிறகு, பதினைந்து நாட்கள் முடிவதற்கு முன்பே மீண்டும் இரத்தம் வர ஆரம்பித்தால் (அது மாதவிடாயாகக் கருதப்படும்). இதனை இமாம் நவவி அவர்கள் 'ஷரஹுல் முஹத்தப்' நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்
(وَلَا حَدَّ لِأَكْثَرِهِ) أَيْ الطُّهْرِ، وَغَالِبُهُ بَقِيَّةُ الشَّهْرِ بَعْدَ غَالِبِ الْحَيْضِ
தூய்மைக்கு அதிகபட்ச வரம்பு இல்லை. பொதுவாக அது மாதவிடாயின் பொதுவான காலத்தை கழித்த பிறகு மாதத்தின் மீதமுள்ள காலமாக இருக்கும்

(وَيَحْرُمُ بِهِ) أَيْ بِالْحَيْضِ (مَا حَرُمَ بِالْجَنَابَةِ) مِنْ الصَّلَاةِ وَغَيْرِهَا
மாதவிடாய் ஏற்படுவதால், ஜனாபத் நிலையில் இருப்பவருக்கு எவையெல்லாம் விலக்கப்பட்டவையோ அவையனைத்தும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணிற்கும் விலக்கப்படும் - தொழுகை முதலியவை
(وَعَبُورُ الْمَسْجِدِ إنْ خَافَتْ تَلْوِيثَهُ) بِالْمُثَلَّثَةِ بِالدَّمِ لِغَلَبَتِهِ أَوْ عَدَمِ إحْكَامِهَا الشَّدَّ، فَإِنْ أَمِنَتْ جَازَ لَهَا الْعُبُورُ كَالْجُنُبِ
(மாதவிடாய் காலத்தில் ஒரு பெண்) இரத்தம் அதிகமாக வெளியேறுவதாலோ அல்லது அவள் கட்டியிருக்கும் துணி இறுக்கமாக இல்லாததாலோ தரை இரத்தத்தினால் அசுத்தமடைந்து விடும் என்று அஞ்சினால் மஸ்ஜிதைக் கடந்து செல்வதும் ஹராமாகும். அவ்வாறு அசுத்தமாகாது என்று அவள் நம்பினால் 'ஜுனுப்' நிலையில் இருப்பவர் கடந்து செல்வதைப் போலவே, அவளும் மஸ்ஜிதைக் கடந்து செல்வது அனுமதிக்கப் பட்டதாகும்
(وَالصَّوْمُ وَيَجِبَ قَضَاؤُهُ بِخِلَافِ الصَّلَاةِ) فَلَا يَجِبُ قَضَاؤُهَا لِلْمَشَقَّةِ فِيهِ بِكَثْرَتِهَا
நோன்பும் அவளுக்கு தடை; ஆனால் பின்னர் அதை கழா செய்ய வேண்டும். ஆனால் தொழுகையை பின்னர் கழா செய்ய வேண்டியதில்லை, ஏனெனில் அது அதிகம் இருப்பதால் சிரமம் ஏற்படும்
(وَمَا بَيْنَ سُرَّتِهَا وَرُكْبَتِهَا) أَيْ مُبَاشَرَتُهُ بِوَطْءٍ أَوْ غَيْرِهِ
அவளுடைய தொப்புள் மற்றும் முழங்கால் இடையிலான பகுதி - அதனை உடலுறவு அல்லது வேறு விதமான நேரடி தொடுதல் செய்யவும் தடை
(وَقِيلَ لَا يَحْرُمُ غَيْرُ الْوَطْءِ) وَاخْتَارَهُ الْمُصَنِّفُ فِي التَّحْقِيقِ وَغَيْرِهِ، وَسَيَأْتِي فِي كِتَابِ الطَّلَاقِ حُرْمَتُهُ فِي حَيْضِ مَمْسُوسَةٍ لِتَضَرُّرِهَا بِطُولِ الْمُدَّةِ، فَإِنَّ زَمَانَ الْحَيْضِ لَا يُحْسَبُ مِنْ الْعِدَّةِ فَإِنْ كَانَتْ حَامِلًا لَمْ يَحْرُمْ طَلَاقُهَا لِأَنَّ عِدَّتَهَا إنَّمَا تَنْقَضِي بِوَضْعِ الْحَمْلِ
ஒரு கருத்துப்படி உடலுறவு மட்டும் தடை; மற்றவை தடை அல்ல. இந்தக் கருத்தை ஆசிரியர் தனது தஹ்கீக் போன்ற நூல்களில் தேர்வு செய்துள்ளார். மாதவிடாய் நிலையில் உள்ள மனைவியை விவாகரத்து செய்வதும் தடை — ஏனெனில் இதனால் அவளுக்கு காலம் நீண்டு கஷ்டம் ஏற்படும். மாதவிடாய் காலம் இத்தா காலத்தில் கணக்கிடப்படாது. ஆனால் அவள் கர்ப்பிணியாக இருந்தால் அவளை விவாகரத்து செய்வது தடை அல்ல, ஏனெனில் அவளுடைய இத்தா காலம் குழந்தை பிறப்பதுடன் முடிவடைகிறது
(فَإِذَا انْقَطَعَ) أَيْ الْحَيْضُ (لَمْ يَحِلَّ قَبْلَ الْغُسْلِ) مِمَّا حَرُمَ (غَيْرُ الصَّوْمِ وَالطَّلَاقِ) فَيَحِلَّانِ لِانْتِفَاءِ مَانِعِ الْأَوَّلِ، وَالْمَعْنَى الَّذِي حَرُمَ لَهُ الثَّانِي، وَلَفْظَةُ الطَّلَاقِ زَادَهَا عَلَى الْمُحَرَّرِ، وَقَالَ: إنَّهَا زِيَادَةٌ حَسَنَةٌ
மாதவிடாய் நின்று விட்டால், குளிப்புக்கு முன்பு தடை செய்யப்பட்டவற்றில் எதுவும் ஹலால் ஆகாது. ஆனால் நோன்பும் விவாகரத்தும் மட்டும் விதிவிலக்கு; அவை இரண்டும் ஹலால் ஆகும். ஏனெனில் நோன்புக்கு இருந்த தடை இப்போது நீங்கிவிட்டது; மேலும் விவாகரத்து தடை செய்யப் பட்டதற்கான காரணமும் இப்போது இல்லை. “விவாகரத்து” என்ற சொல்லை அவர் அல்-முஹர்ரர் என்ற நூலில் இல்லாத ஒரு கூடுதலாக சேர்த்துள்ளார்; மேலும் இது நல்ல ஒரு சேர்த்தல் என்று அவர் கூறினார்

(وَالِاسْتِحَاضَةُ) وَهِيَ أَنْ يُجَاوِزَ الدَّمُ أَثَرَ الْحَيْضِ وَيَسْتَمِرَّ (حَدَثٌ دَائِمٌ كَالسَّلَسِ) أَيْ سَلَسِ الْبَوْلِ، وَهُوَ أَنْ لَا يَنْقَطِعَ
இஸ்திஹாளா என்பது மாதவிடாயின் அடையாளத்தைத் தாண்டி இரத்தம் தொடர்ந்து வருவதைக் குறிக்கும். இது 'ஸலஸுல் பவ்ல்' (சிறுநீர் கட்டுக்கடங்காமல் வெளியேறுதல்) போன்ற ஒரு தொடர்ச்சியான தொடக்கு ஆகும்; அதாவது அது நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்
(فَلَا تَمْنَعُ الصَّوْمَ وَالصَّلَاةَ) لِلضَّرُورَةِ
எனவே, அவசரத் தேவையின் காரணமாக அது அவளுக்கு நோன்பு நோற்பதையும் தொழுகையையும் தடுக்காது
(فَتَغْسِلُ الْمُسْتَحَاضَةُ فَرْجَهَا وَتَعْصِبُهُ) وُجُوبًا بِأَنْ تَشُدَّهُ بَعْدَ حَشْوِهِ مَثَلًا بِخِرْقَةٍ مَشْقُوقَةِ الطَّرَفَيْنِ تُخْرِجُ أَحَدَهُمَا إلَى بَطْنِهَا، وَالْآخَرَ إلَى صُلْبِهَا، وَتَرْبِطُهُمَا بِخِرْقَةٍ تَشُدُّهَا عَلَى وَسَطِهَا كَالتِّكَّةِ
இஸ்திஹாளா (தொடர் உதிரப்போக்கு) உள்ள பெண், தனது மர்மஸ்தானத்தைக் கழுவி, அதை (காயத்திற்கு கட்டுப்போடுவது போல்) கட்டுவது கடமையாகும். உதாரணமாக, பஞ்சு அல்லது துணி வைத்து அடைத்த பிறகு, இரு முனைகளும் பிளக்கப்பட்ட ஒரு துண்டு துணியைக் கொண்டு பலமாகச் சுற்ற வேண்டும். அந்தத் துணியின் ஒரு முனையை வயிற்றுப் பக்கமாகவும், மறுமுனையை முதுகுப் பக்கமாகவும் கொண்டு வர வேண்டும். பிறகு, இடுப்பில் கயிறு அல்லது அரைஞாண் கயிறு போலக் கட்டப்பட்டிருக்கும் மற்றொரு துணியுடன் இந்த இரு முனைகளையும் இணைத்து முடிச்சிட வேண்டும்
وَإِنْ تَأَذَّتْ بِالشَّدِّ تَرَكَتْهُ، وَإِنْ كَانَ الدَّمُ قَلِيلًا يَنْدَفِعُ بِالْحَشْوِ فَلَا حَاجَةَ لِلشَّدِّ، وَإِنْ كَانَتْ صَائِمَةً تَرَكَتْ الْحَشْوَ نَهَارًا وَاقْتَصَرَتْ عَلَى الشَّدِّ فِيهِ
இவ்வாறு கட்டுவதால் அவளுக்கு துன்பம் ஏற்பட்டால், அதை விட்டுவிடலாம். இரத்தம் குறைவாக இருந்து உள்ளே வைக்கப்பட்ட துணியால் மட்டுமே தடுக்கப் படுமானால், கட்ட வேண்டிய அவசியம் இல்லை. அவள் நோன்பு நோற்றிருந்தால், பகல் நேரத்தில் உள்ளே துணி வைப்பதை விட்டு, கட்டுவதில் மட்டும் போதுமானதாகக் கொள்ள வேண்டும்
(وَتَتَوَضَّأُ وَقْتَ الصَّلَاةِ) كَالْمُتَيَمِّمِ (وَتُبَادِرُ بِهَا) تَقْلِيلًا لِلْحَدَثِ
எனவே, அவ்ரத்தை மறைத்தல், ஜமாஅத்தை எதிர்பார்த்தல் போன்ற தொழுகையின் நலனுக்காக தொழுகையைத் தாமதப் படுத்தினால் அது பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் அவ்வாறில்லாமல் தாமதப் படுத்தினால், சரியான கருத்தின்படி அது பாதிப்பை ஏற்படுத்தும். இரண்டாவது கருத்தின்படி, தயம்மும் செய்பவரைப் போல இதுவும் பாதிப்பை ஏற்படுத்தாது. மேலும், தொடக்கு நீங்காமல் அப்படியே இருப்பதனால் தயம்மும் செய்பவரைப் போல ஒவ்வொரு பர்ழுத் தொழுகைக்கும் (தனியாக) வுழூ செய்வது கடமையாகும்
(وَكَذَا تَجْدِيدُ الْعِصَابَةِ فِي الْأَصَحِّ) وَإِنْ لَمْ تَزُلْ عَنْ مَوْضِعِهَا وَلَا ظَهَرَ الدَّمُ جَوَانِبَهَا قِيَاسًا عَلَى تَجْدِيدِ الْوُضُوءِ
மேலும் சரியான கருத்தின்படி (அசுத்தம் வெளியேறாமல் இருக்கக் கட்டப்பட்ட) கட்டு அல்லது துணியையும் (ஒவ்வொரு கடமையான தொழுகைக்கும்) புதுப்பிப்பது அவசியமாகும். அந்தக் கட்டு அதன் இடத்திலிருந்து விலகாமல் இருந்தாலும், அல்லது அதன் ஓரங்களில் இரத்தம் வெளிப்படாமல் இருந்தாலும் சரியே. இது வுழூவைப் புதுப்பிப்பதோடு ஒப்பிட்டு (கியாஸ் செய்யப்பட்டு) சொல்லப்பட்ட சட்டமாகும்
وَالثَّانِي لَا يَجِبُ تَجْدِيدُهَا إلَّا إذَا زَالَتْ عَنْ مَوْضِعِهَا زَوَالًا لَهُ وَقْعٌ، أَوْ ظَهَرَ الدَّمُ بِجَوَانِبِهَا،
மற்றொரு கருத்துப்படி, அதை புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அது தனது இடத்திலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் நகர்ந்தால் அல்லது அதன் ஓரங்களில் இரத்தம் வெளிப்பட்டால் மட்டுமே புதுப்பிக்க வேண்டும்
وَحَيْثُ قِيلَ بِتَجْدِيدِهَا فَتُجَدِّدُ مَا يَتَعَلَّقُ بِهَا مِنْ غَسْلِ الْفَرْجِ وَإِبْدَالِ الْقُطْنَةِ الَّتِي بِفَمِهِ
எப்போதெல்லாம் அந்தக் கட்டைப் புதுப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகின்றதோ, அப்போதெல்லாம் அதனுடன் தொடர்புடைய செயல்களான மறைவிடத்தைக் கழுவுதல் மற்றும் அதன் துவாரத்தில் வைக்கப்பட்டிருக்கும் பஞ்சை மாற்றுதல் என்பவற்றையும் புதுப்பிக்க வேண்டும்
(وَلَوْ انْقَطَعَ دَمُهَا بَعْدَ الْوُضُوءِ وَلَمْ تَعْتَدْ انْقِطَاعَهُ وَعَوْدَهُ أَوْ اعْتَادَتْ) ذَلِكَ (وَوَسِعَ زَمَنُ الِانْقِطَاعِ) بِحَسَبِ الْعَادَةِ (وُضُوءًا وَالصَّلَاةَ) بِأَقَلَّ مَا يُمْكِنُ (وَجَبَ الْوُضُوءُ)
ஒரு பெண் வுழூ செய்த பிறகு அவளது இரத்தப்போக்கு நின்று விட்டால், மேலும் அந்த இரத்தம் நின்று மீண்டும் வருவது அவளது வழக்கமாக இல்லாவிட்டாலும் சரி, அல்லது அது அவளது வழக்கமாக இருந்தாலும் சரி, அவ்வாறு இரத்தம் நின்றிருக்கும் காலம் (வழக்கப்படி) ஒரு வுழூ செய்வதற்கும் மிகக் குறைந்த அளவு தொழுகையை நிறைவேற்றுவதற்கும் போதுமானதாக இருந்தால், அவள் மீண்டும் வுழூ செய்வது கடமையாகும்
أَمَّا فِي الْحَالَةِ الْأُولَى فَلِاحْتِمَالِ الشِّفَاءِ، وَالْأَصْلُ عَدَمُ عَوْدِ الدَّمِ
முதல் நிலையில் (அதாவது இரத்தம் நின்று மீண்டும் வருவது அவளது வழக்கமாக இல்லாத போது), இரத்தம் நின்றது குணமடைந்ததற்கான அடையாளமாக இருக்கலாம் என்பதனாலும், மீண்டும் இரத்தம் வராது என்பதே அடிப்படையான விதி என்பதனாலும் இது அவசியமாகிறது
وَأَمَّا فِي الثَّانِيَةِ فَلِإِمْكَانِ أَدَاءِ الْعِبَادَةِ مِنْ غَيْرِ مُقَارَنَةِ حَدَثٍ
இரண்டாவது நிலையில் (அதாவது இரத்தம் நின்று மீண்டும் வருவது அவளது வழக்கமாக இருக்கும் போது), தொடக்கு இல்லாத நிலையில் இபாதத்தை நிறைவேற்ற முடியுமாக இருப்பதனால் வுழூ செய்வது கடமையாகிறது
فَلَوْ عَادَ الدَّمُ قَبْلَ إمْكَانِ الْوُضُوءِ وَالصَّلَاةِ فِي الْحَالَتَيْنِ فَوَضْؤُهَا بَاقٍ بِحَالِهِ تُصَلِّي بِهِ
இருப்பினும், இரண்டு நிலைகளிலும் (வழக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்), வுழூ செய்து தொழுவதற்குத் தேவையான நேரம் கிடைப்பதற்கு முன்னரே இரத்தம் மீண்டும் வந்துவிட்டால், அவளது முந்தைய வுழூ அப்படியே செல்லும்; அதைக் கொண்டே அவள் தொழலாம்
وَلَوْ لَمْ يَسَعْ زَمَنُ الِانْقِطَاعِ إعَادَةَ الْوُضُوءِ وَالصَّلَاةِ صَلَّتْ بِوُضُوئِهَا، فَلَوْ امْتَدَّ الزَّمَنُ بِحَيْثُ يَسَعُ مَا ذُكِرَ وَقَدْ صَلَّتْ بِوُضُوئِهَا تَبَيَّنَ بُطْلَانُ الْوُضُوءِ وَالصَّلَاةِ
மேலும், இரத்தம் நின்றிருக்கும் நேரம் மீண்டும் வுழூ செய்து தொழுவதற்குப் போதுமானதாக இல்லாவிட்டால், அவள் தனது பழைய வுழூவைக் கொண்டே தொழலாம். மாறாக, இரத்தம் நின்றிருக்கும் நேரம் நீண்டதாக இருந்து, அதில் வுழூ செய்து தொழுவதற்குப் போதுமான அவகாசம் இருந்து, அதற்குள் அவள் தனது முந்தைய வுழூவைக் கொண்டு தொழுது முடித்திருந்தால், அவளது வுழூவும் தொழுகையும் செல்லாததாகி விடும் என்பது தெளிவாகும்

(فَصْلٌ) إذَا (رَأَتْ) دَمًا (لِسِنِّ الْحَيْضِ أَقَلّهُ) فَأَكْثَر (وَلَمْ يَعْبُرْ أَكْثَرهُ) أَيْ لَمْ يُجَاوِزْهُ (فَكُلُّهُ حَيْضٌ) أَسْوَدَ كَانَ أَوْ أَحْمَرَ أَوْ أَشْقَرَ مُبْتَدَأَةً كَانَتْ أَوْ مُعْتَادَةً تَغَيَّرَتْ عَادَتُهَا أَوْ لَا
பகுதி: ஒரு பெண் மாதவிடாய்க்குரிய வயதில் (குறைந்தது 9 வயது), அதன் குறைந்தபட்ச காலமான (ஒரு பகல் ஒரு இரவு) அல்லது அதற்கும் அதிகமான அளவு இரத்தத்தைக் கண்டு, அது அதிகபட்ச காலத்தை (15 நாட்கள்) தாண்டவில்லை என்றால், அது கறுப்பு, சிவப்பு அல்லது மஞ்சள் என எந்த நிறத்தில் இருந்தாலும் அது முழுவதும் மாதவிடாய் ஆகும். அவள் முதன் முதலாக மாதவிடாய் கண்டவளாக இருந்தாலும் சரி, அல்லது ஏற்கனவே வழக்கம் உள்ளவளாக இருந்தாலும் சரி, அவளது வழக்கம் மாறி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதுவே சட்டமாகும்
إلَّا أَنْ يَكُونَ عَلَيْهَا بَقِيَّةُ طُهْرٍ كَأَنْ رَأَتْ ثَلَاثَةَ أَيَّامٍ دَمًا ثُمَّ اثْنَيْ عَشَرَ نَقَاءً ثُمَّ ثَلَاثَةَ أَيَّامٍ دَمًا ثُمَّ انْقَطَعَ، فَالثَّلَاثَةُ الْأَخِيرَةُ دَمُ فَسَادٍ لَا حَيْضٌ ذُكِرَ ذَلِكَ فِي شَرْحِ الْمُهَذَّبِ مُفَرَّقًا
ஆனால், தூய்மைக் காலத்தின் மீதமுள்ள நாட்களில் இரத்தத்தைக் கண்டால் அது மாதவிடாய் ஆகாது. உதாரணமாக: ஒரு பெண் மூன்று நாட்கள் இரத்தம் கண்டு, பிறகு பன்னிரண்டு நாட்கள் தூய்மையாக (இரத்தப் போக்கு இல்லாமல்) இருந்து, மீண்டும் மூன்று நாட்கள் இரத்தத்தைக் கண்டு, பிறகு அது நின்று விட்டால், அந்தப் பிந்தைய மூன்று நாட்கள் கண்ட இரத்தம் 'பஸாத்' (நோய் இரத்தம்) ஆகும்; அது மாதவிடாய் அல்ல. (ஏனெனில் இரண்டு மாதவிடாய்களுக்கு இடைப்பட்ட குறைந்த பட்ச தூய்மைக் காலம் 15 நாட்கள் ஆகும்; இங்கு 12 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளதால், பிந்தைய இரத்தம் தூய்மைக் காலத்திற்குள் வந்து விடுகிறது). இது குறித்து 'ஷர்ஹுல் முஹத்தப்' நூலில் பல்வேறு இடங்களில் தனித் தனியாகக் குறிப்பிடப் பட்டுள்ளது

(وَالصُّفْرَةُ وَالْكُدْرَةُ) أَيْ كُلٌّ مِنْهُمَا (حَيْضٌ فِي الْأَصَحِّ) مُطْلَقًا لِأَنَّهُ الْأَصْلُ فِيمَا تَرَاهُ الْمَرْأَةُ فِي زَمَنِ الْإِمْكَانِ
மஞ்சள் மற்றும் மங்கலான நிறம் ஆகிய ஒவ்வொன்றும் மிகச் சரியான கருத்தின் படி பொதுவாக மாதவிடாயாகும். ஏனெனில், ஒரு பெண் மாதவிடாய் சாத்தியமான காலத்தில் காணக் கூடியதன் அடிப்படைத் தன்மை அதுவேயாகும்
وَالثَّانِي لَا لِأَنَّهُ لَيْسَ عَلَى لَوْنِ الدَّمِ الْمُعْتَادِ إلَّا فِي أَيَّامِ الْعَادَةِ فَهُوَ فِيهَا حَيْضٌ اتِّفَاقًا
இரண்டாவது கருத்து: அது மாதவிடாய் அல்ல; ஏனெனில் அது வழக்கமான இரத்தத்தின் நிறத்தில் இல்லை. ஆனால், வழக்கமான (மாதவிடாய்) நாட்களில் அது தென்பட்டால், அது மாதவிடாய் என்பதில் ஏகோபித்த கருத்து நிலவுகிறது
وَقِيلَ: يُشْتَرَطُ فِي كَوْنِهِ حَيْضًا فِي غَيْرِهَا تَقَدُّمُ دَمٍ قَوِيٍّ مِنْ سَوَادٍ أَوْ حُمْرَةٍ عَلَيْهِ
மற்றும் ஒரு கூற்று: வழக்கமான நாட்கள் அல்லாத பிற காலங்களில் அது மாதவிடாயாகக் கருதப்பட, அதற்கு முன்னதாக கருப்பு அல்லது சிவப்பு போன்ற பலமான இரத்தம் வந்திருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்
وَقِيلَ: وَتَأَخُّرُهُ عَنْهُ وَعَلَى هَذَيْنِ يَكْفِي أَيُّ قَدْرٍ مِنْ الْقَوِيِّ
மற்றொரு கூற்று: அதற்குப் பின்னரும் அவ்வாறு வந்திருக்க வேண்டும். இவ்விரு கருத்துகளின்படி, பலமான இரத்தம் எந்த அளவு வந்திருந்தாலும் போதுமானது
وَقِيلَ: لَا بُدَّ مِنْ يَوْمٍ وَلَيْلَةٍ. هَذَا مَا فِي الرَّوْضَةِ وَأَصْلِهَا، وَفِي شَرْحِ الْمُهَذَّبِ لَا فَرْقَ فِي جَرَيَانِ الْخِلَافِ بَيْنَ الْمُبْتَدَأَةِ وَالْمُعْتَادَةِ
மற்றும் ஒரு கூற்று: அது ஒரு பகல் மற்றும் ஒரு இரவு வந்திருக்க வேண்டும். இதுவே 'ரவ்ளா' மற்றும் அதன் மூல நூலில் உள்ளதாகும். 'ஷரஹ் அல்-முஹத்தப்' நூலில், முதன்முறை மாதவிடாய் ஏற்படும் பெண் மற்றும் ஏற்கனவே வழக்கம் உள்ள பெண் ஆகிய இருவருக்கும் இடையில் இந்த கருத்து வேறுபாடுகள் அமைவதில் எவ்வித மாற்றமும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது

وَحِكَايَةُ وَجْهٍ فِي الْوَاقِعِ فِي أَيَّامِ الْعَادَةِ بِاشْتِرَاطِ تَقَدُّمِ دَمٍ أَسْوَدَ أَوْ أَحْمَرَ عَلَيْهِ مُعْتَرِضًا بِذَلِكَ عَلَى الرَّافِعِيِّ وَغَيْرِهِ فِي نَفْيِهِمْ الْخِلَافَ فِيهِ
மாதவிடாய் நாட்களில், அதற்கு முன் கருப்பு அல்லது சிவப்பு இரத்தம் வந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், உண்மையில் ஒரு கருத்து இருப்பதாக கூறப் பட்டுள்ளது; இதனால் அந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு இல்லை என்று மறுத்த ராஃபிஈ மற்றும் மற்றவர்களுக்கு எதிராக இது சொல்லப் பட்டுள்ளது

(فَإِنْ عَبَرَهُ) أَيْ عَبَرَ الدَّمُ أَكْثَرَ الْحَيْضِ أَيْ جَاوَزَهُ (فَإِنْ كَانَتْ) أَيْ مَنْ عَبَرَ دَمُهَا أَكْثَرَ الْحَيْضِ وَهِيَ الْمُسْتَحَاضَةُ (مُبْتَدَأَةً) أَيْ أَوَّلَ مَا ابْتَدَأَهَا الدَّمُ (مُمَيِّزَةً بِأَنْ تَرَى قَوِيًّا وَضَعِيفًا) بِشُرُوطِهِمَا الْآتِيَةِ
மாதவிடாயின் அதிகபட்ச காலத்தை இரத்தம் கடந்துவிட்டால் — அதாவது இரத்தம் அதிகபட்ச ஹைத் காலத்தை மீறினால் — அந்த இரத்தம் அதிகபட்ச ஹைத் காலத்தை கடந்த பெண் இஸ்திஹாளா நிலையிலுள்ளவள் ஆக இருப்பாள். அவள் முதன்முறையாக இரத்தம் காண்பவளாகவும், வலுவான இரத்தத்தையும் பலவீனமான இரத்தத்தையும் வேறுபடுத்தக் கூடியவளாக இருந்தால் - பின் வரும் நிபந்தனைகளுடன்
كَالْأَسْوَدِ وَالْأَحْمَرِ، فَهُوَ ضَعِيفٌ بِالنِّسْبَةِ إلَى الْأَسْوَدِ قَوِيٌّ بِالنِّسْبَةِ إلَى الْأَشْقَرِ وَالْأَشْقَرُ أَقْوَى مِنْ الْأَصْفَرِ، وَمِنْ الْأَكْدَرِ إذَا جُعِلَا حَيْضًا
கருப்பு மற்றும் சிவப்பு இரத்தம் போல - சிவப்பு இரத்தம் கருப்புடன் ஒப்பிடும் போது பலவீனமானது; ஆனால் இளஞ்சிவப்பு நிறத்துடன் ஒப்பிடும்போது வலுவானது. இளஞ்சிவப்பு நிறம் மஞ்சள் நிறத்தையும், மங்கலான நிறத்தையும் விட வலுவானதாகும், அவை ஹைத் என்று கருதப்பட்டால்
وَمَا لَهُ رَائِحَةٌ كَرِيهَةٌ أَقْوَى مِمَّا لَا رَائِحَةَ لَهُ وَالثَّخِينُ أَقْوَى مِنْ الرَّقِيقِ
துர்நாற்றம் உள்ள இரத்தம், நாற்றமில்லாத இரத்தத்தைவிட வலுவானது. கனம் உள்ள இரத்தம், மெல்லிய இரத்தத்தைவிட வலுவானது
فَالْمُنْتِنُ أَوْ الثَّخِينُ مِنْ الْأَسْوَدَيْنِ مَثَلًا أَقْوَاهُمَا، وَالْمُنْتِنُ الثَّخِينُ مِنْهُمَا أَقْوَى مِنْ الْمُنْتِنِ أَوْ الثَّخِينِ
உதாரணமாக இரண்டு கருப்பு இரத்தங்களில், துர்நாற்றமுள்ளதோ அல்லது கனமானதோ அவற்றில் அதிக வலிமையானது. துர்நாற்றமும் கனமும் இரண்டும் உள்ள இரத்தம், துர்நாற்றம் மட்டும் உள்ளதையோ அல்லது கனம் மட்டும் உள்ளதையோ விட இன்னும் வலுவானது
(فَالضَّعِيفُ اسْتِحَاضَةٌ وَالْقَوِيُّ حَيْضٌ إنْ لَمْ يَنْقُصْ (تحفة: الْقَوِيُّ) عَنْ أَقَلِّهِ وَلَا عَبَرَ أَكْثَرُهُ وَلَا نَقَصَ الضَّعِيفُ عَنْ أَقَلِّ الطُّهْرِ)
எனவே, இதில் பலவீனமான இரத்தம் என்பது 'இஸ்திஹாளா' (தொடர் இரத்தப் போக்கு) ஆகும்; வலிமையான இரத்தம் என்பது 'ஹைழ்' (மாதவிடாய்) ஆகும். இது எப்போது செல்லுபடியாகும் என்றால்: வலிமையான இரத்தம் குறைந்தபட்ச மாதவிடாய் காலத்தை விட (ஒரு நாள் ஒரு இரவு) குறையாமலும், அதிகபட்ச மாதவிடாய் காலத்தை (15 நாட்கள்) தாண்டாமலும் இருக்க வேண்டும். அதேபோன்று, பலவீனமான இரத்தம் குறைந்தபட்ச தூய்மை காலத்தை (15 நாட்கள்) விடக் குறையாமல் இருக்க வேண்டும்
بِأَنْ يَكُونَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا مُتَّصِلَةً فَأَكْثَرَ تَقَدَّمَ الْقَوِيُّ عَلَيْهِ أَوْ تَأَخَّرَ أَوْ تَوَسَّطَ
​அதாவது, அந்தப் பலவீனமான இரத்தம் தொடர்ந்து 15 நாட்கள் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். வலிமையான இரத்தம் அதற்கு முன்னால் வந்தாலும், பின்னால் வந்தாலும் அல்லது இடையில் வந்தாலும் சரியே. உதாரணத்திற்கு
كَأَنْ رَأَتْ خَمْسَةَ أَيَّامٍ أَسْوَدَ ثُمَّ أَطْبَقَ الْأَحْمَرُ إلَى آخِرِ الشَّهْرِ أَوْ
​உதாரணம் 1: ஒரு பெண் 5 நாட்கள் கருப்பு நிற இரத்தத்தையும் (வலிமையானது), பிறகு மாதம் முடியும் வரை சிவப்பு நிற இரத்தத்தையும் (பலவீனமானது) கண்டால், முதல் 5 நாட்கள் மட்டும் மாதவிடாய்
خَمْسَةَ عَشَرَ يَوْمًا أَحْمَرَ، ثُمَّ خَمْسَةَ عَشَرَ أَسْوَدَ، أَوْ
​உதாரணம் 2: முதலில் 15 நாட்கள் சிவப்பு நிறம், பிறகு 15 நாட்கள் கருப்பு நிறம் கண்டால், அந்த 15 நாள் கருப்பு நிறம் மாதவிடாய்
خَمْسَةً أَحْمَرَ ثُمَّ خَمْسَةً أَسْوَدَ، ثُمَّ بَاقِيَ الشَّهْرِ أَحْمَرَ بِخِلَافِ مَا لَوْ رَأَتْ يَوْمًا أَسْوَدَ وَيَوْمَيْنِ أَحْمَرَ
​உதாரணம் 3: 5 நாட்கள் சிவப்பு, பிறகு 5 நாட்கள் கருப்பு, பிறகு மீதமுள்ள நாட்கள் சிவப்பு என வந்தால், அந்த நடுவில் வந்த 5 நாள் கருப்பு மட்டும் மாதவிடாய். இதற்கு மாற்றமாக, ஒரு பெண் ஒரு நாள் கருப்பு நிறத்தையும், இரண்டு நாட்கள் சிவப்பு நிறத்தையும் கண்டால் (இங்கு சிவப்பு நிறம் 15 நாட்களுக்கும் குறைவாக இருப்பதால்), இந்த விதி பொருந்தாது
وَهَكَذَا إلَى آخِرِ الشَّهْرِ لِعَدَمِ اتِّصَالِ خَمْسَةَ عَشَرَ مِنْ الضَّعِيفِ فَهِيَ فَاقِدَةٌ شَرْطَ تَمْيِيزٍ، وَسَيَأْتِي حُكْمُهَا
இப்படியே மாதம் முடியும் வரை தொடர்ந்தால், பலவீனமான இரத்தம் (சிவப்பு) தொடர்ந்து 15 நாட்கள் வராத காரணத்தினால், அந்தப் பெண் 'தம்யீஸ்' (பிரித்தறியும் முறை) க்கான நிபந்தனையை இழந்தவள் ஆகிறாள். அவளுடைய சட்டம் இனிமேல் விளக்கப்படும்
وَفِي وَجْهٍ فِي الصُّورَةِ الثَّالِثَةِ أَنَّ خَمْسَةَ الْأَحْمَرِ مَعَ خَمْسَةِ الْأَسْوَدِ حَيْضٌ
​மேலும், ஒரு கருத்துப்படி மூன்றாவது உதாரணமாகச் சொல்லப்பட்ட நிலையில் (5 நாள் சிவப்பு, பிறகு 5 நாள் கருப்பு, பிறகு மீதமுள்ள நாட்கள் சிவப்பு என்று வந்த நிலையில்) அந்த முதல் 5 நாள் சிவப்பு நிறமும், அடுத்த 5 நாள் கருப்பு நிறமும் சேர்ந்து மொத்தம் 10 நாட்களுமே மாதவிடாய் (ஹைழ்) எனக் கருதப்படும்

{(فَإِنْ عَبَرَهُ) أَيْ عَبَرَ الدَّمُ أَكْثَرَ الْحَيْضِ (فَإِنْ كَانَتْ) (مُبْتَدَأَةً) (مُمَيِّزَةً بِأَنْ تَرَى قَوِيًّا وَضَعِيفًا)}
IIII இரத்தம் அதிகபட்ச ஹைத் காலத்தைத் தாண்டினால் — அந்த பெண் ‘முப்ததஅஹ்’ (முதல் முறையாக ஹைத் காணும் பெண்) ஆகவும், மேலும் ‘தம்யீஸ்’ உள்ளவளாகவும் இருந்தால் — அதாவது அவள் பலமான இரத்தத்தையும் பலவீனமான இரத்தத்தையும் காண்பவளாக இருந்தால்: மேலே பார்க்கவும் IIII
(أَوْ مُبْتَدَأَةً لَا مُمَيِّزَةً بِأَنْ رَأَتْهُ بِصِفَةٍ أَوْ) بِصِفَتَيْنِ مَثَلًا لَكِنْ (فَقَدَتْ شَرْطَ تَمْيِيزٍ) مِنْ شُرُوطِهِ السَّابِقَةِ (فَالْأَظْهَرُ أَنَّ حَيْضَهَا يَوْمٌ وَلَيْلَةٌ، وَطُهْرَهَا تِسْعٌ وَعِشْرُونَ) بَقِيَّةُ الشَّهْرِ
அல்லது (அவள்) முதல் முறையாக மாதவிடாய் காண்பவளாக இருந்து, இரத்தத்தைப் பிரித்தறியும் ஆற்றல் அற்றவளாக இருந்தால்; அதாவது அவள் ஒரே நிறத்தில் இரத்தத்தைக் கண்டாலோ அல்லது இரண்டு நிறங்களில் இரத்தத்தைக் கண்டாலும் மேலே கூறப்பட்ட 'பிரித்தறியும் நிபந்தனைகளை' இழந்திருந்தாலோ, அவளுடைய மாதவிடாய் ஒரு பகல் ஒரு இரவு என்றும், மீதமுள்ள மாதத்தின் இருபத்தி ஒன்பது நாட்களும் அவளது தூய்மை காலம் என்றும் கருதுவதே மிகவும் பலமான சட்டக் கருத்தாகும்
{شَرْط تَمْيِيزٍ مِنْ شُرُوطِهِ السَّابِقَةِ: فَالضَّعِيفُ اسْتِحَاضَةٌ وَالْقَوِيُّ حَيْضٌ إنْ لَمْ يَنْقُصْ (الْقَوِيُّ) عَنْ أَقَلِّهِ وَلَا عَبَرَ أَكْثَرُهُ وَلَا نَقَصَ الضَّعِيفُ عَنْ أَقَلِّ الطُّهْرِ}
IIII மேலே கூறப்பட்ட பிரித்தறியும் நிபந்தனைகளாவன: பலவீனமான இரத்தம் என்பது 'இஸ்திஹாளா' ஆகும்; வலிமையான இரத்தம் என்பது 'ஹைழ்' ஆகும். இது எப்போது செல்லுபடியாகும் என்றால்: வலிமையான இரத்தம் குறைந்தபட்ச மாதவிடாய் காலத்தை விட (ஒரு நாள் ஒரு இரவு) குறையாமலும், அதிகபட்ச மாதவிடாய் காலத்தை (15 நாட்கள்) தாண்டாமலும் இருக்க வேண்டும். அதேபோன்று, பலவீனமான இரத்தம் குறைந்தபட்ச தூய்மை காலத்தை (15 நாட்கள்) விடக் குறையாமல் இருக்க வேண்டும் IIII
وَالثَّانِي تُحَيَّضُ غَالِبَ الْحَيْضِ سِتَّةً أَوْ سَبْعَةً، وَقِيلَ: تَتَخَيَّرُ بَيْنَهُمَا
இரண்டாவது கருத்து: அவள் பெண்களின் பொதுவான மாதவிடாய் காலமான ஆறு அல்லது ஏழு நாட்கள் மாதவிடாயாகக் கொள்ள வேண்டும். மற்றொரு கருத்து: இந்த இரண்டிற்கும் இடையில் அவள் தேர்வு செய்யலாம்
وَالْأَصَحُّ النَّظَرُ إلَى عَادَةِ النِّسَاءِ إنْ كَانَتْ سِتَّةً فَسِتَّةٌ أَوْ سَبْعَةً فَسَبْعَةٌ، وَبَقِيَّةُ الشَّهْرِ طُهْرُهَا
ஆனால் மிகவும் சரியான கருத்து: பெண்களின் வழக்கமான பழக்கத்தைப் பார்க்க வேண்டும் — அது ஆறு நாட்கள் என்றால் ஆறு நாட்கள், ஏழு நாட்கள் என்றால் ஏழு நாட்கள் மாதவிடாய் ஆகும்; மாதத்தின் மீதியெல்லாம் தூய்மை காலமாகும்
وَالْعِبْرَةُ بِنِسَاءِ عَشِيرَتِهَا مِنْ الْأَبَوَيْنِ، وَقِيلَ: بِنِسَاءِ عَصَبَاتِهَا خَاصَّةً، وَقِيلَ: بِنِسَاءِ بَلَدِهَا وَنَاحِيَتِهَا، كَذَا فِي الرَّوْضَةِ كَأَصْلِهَا
அவளுடைய தந்தை மற்றும் தாய் வழி உறவினர்களில் உள்ள பெண்களை (அவளின் மாதவிடாய் பழக்கத்தை மதிப்பிடுவதில்) கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு கருத்து: அவளின் ‘அஸபா’ (தந்தை வழி உறவினர்) பெண்களை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும். மற்றொரு கருத்து: அவள் வாழும் நாட்டிலும் அந்த பகுதியிலும் உள்ள பெண்களை கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு ‘அர்-ரவ்தா’ என்ற நூலில் அதன் மூல நூலைப் போலவே கூறப்பட்டுள்ளது
وَمَعْنَى مِنْ الْأَبَوَيْنِ، بِقَرِينَةِ الثَّانِي الْمُعْتَبَرُ فِي مَهْرِ الْمِثْلِ مَا فِي الْكِفَايَةِ أَنَّهُ لَا فَرْقَ بَيْنَ الْأَقَارِبِ مِنْ الْأَبِ أَوْ الْأُمِّ
தந்தை மற்றும் தாய் வழி என்று சொல்வதன் பொருள்: இரண்டாவது கருத்தின் அடிப்படையில், ‘மஹர் அல்-மித்ல்’ (சமமான மஹர்) பற்றிய விஷயத்தில் எடுத்துக் கொள்ளப் படுவது போல - ‘அல்-கிஃபாயா’ நூலில் கூறப்பட்டதாவது: தந்தை வழி உறவினர்களாக இருந்தாலும், தாய் வழி உறவினர்களாக இருந்தாலும் எந்த வித்தியாசமும் இல்லை

{(فَإِنْ عَبَرَهُ) أَيْ عَبَرَ الدَّمُ أَكْثَرَ الْحَيْضِ (فَإِنْ كَانَتْ) (مُبْتَدَأَةً) (مُمَيِّزَةً بِأَنْ تَرَى قَوِيًّا وَضَعِيفًا)}
IIII இரத்தம் அதிகபட்ச ஹைத் காலத்தைத் தாண்டினால் — அந்த பெண் ‘முப்ததஅஹ்’ (முதல் முறையாக ஹைத் காணும் பெண்) ஆகவும், மேலும் ‘தம்யீஸ்’ உள்ளவளாகவும் இருந்தால் — அதாவது அவள் பலமான இரத்தத்தையும் பலவீனமான இரத்தத்தையும் காண்பவளாக இருந்தால்: மேலே பார்க்கவும் IIII
{(أَوْ مُبْتَدَأَةً لَا مُمَيِّزَةً بِأَنْ رَأَتْهُ بِصِفَةٍ أَوْ) (فَقَدَتْ شَرْطَ تَمْيِيزٍ)}
IIII அல்லது அவள் ‘முப்ததஅஹ்’ (முதல் முறையாக ஹைத் காணும் பெண்) ஆக இருந்தும் ‘தம்யீஸ்’ இல்லாதவளாக இருந்தால் — அதாவது ஒரே வகையான பண்பில் மட்டுமே இரத்தத்தை கண்டால் — அல்லது ‘தம்யீஸ்’ இன் நிபந்தனைகளில் ஒன்றை இழந்திருந்தால்: மேலே பார்க்கவும் IIII

(أَوْ مُعْتَادَةٌ بِأَنْ سَبَقَ لَهَا حَيْضٌ وَطُهْرٌ) وَهِيَ غَيْرُ مُمَيِّزَةٍ (فَتُرَدُّ إلَيْهِمَا قَدْرًا وَوَقْتًا) بِأَنْ كَانَتْ حَافِظَةً لِذَلِكَ
அல்லது முன்பே மாதவிடாய் மற்றும் தூய்மை காலம் இருந்த பழக்கம் உடையவள் — ஆனால் இரத்தத்தின் தன்மையால் வேறுபடுத்த முடியாதவள் — அப்படியான நிலையில் அவள் தனது பழக்கத்திற்கே அளவிலும் (நாட்கள்) நேரத்திலும் திருப்பப்படுவாள்; அதாவது அந்த பழக்கத்தை நினைவில் வைத்திருப்பவளாக இருந்தால்
(وَتَثْبُتُ الْعَادَةُ) الْمُرَتَّبُ عَلَيْهَا مَا ذُكِرَ (بِمَرَّةٍ فِي الْأَصَحِّ) لِأَنَّهَا فِي مُقَابَلَةِ الِابْتِدَاءِ
மேலே கூறப்பட்ட சட்டங்கள் எதன் அடிப்படையில் அமைகிறதோ அந்த வழக்கம்: மிகச் சரியான கருத்தின்படி ஒரு முறையிலேயே உறுதிப்படும். ஏனெனில், இது 'ஆரம்பம்' (இப்திதா) என்பதற்கு எதிராக இருப்பதால் (அதாவது ஒருமுறை நடந்தாலே அது பழக்கமாகிவிடும்)
وَالثَّانِي بِمَرَّتَيْنِ لِأَنَّهَا مِنْ الْعَوْدِ
இரண்டாவது கருத்தின்படி, இரண்டு முறை நடந்தால் மட்டுமே அது வழக்கமாகக் கருதப்படும்; ஏனெனில் 'ஆதா' (வழக்கம்) என்பது 'அவ்த்' (திரும்புதல்) என்ற சொல்லிலிருந்து வந்ததாகும்
فَمَنْ حَاضَتْ خَمْسَةً فِي شَهْرٍ ثُمَّ سِتَّةً فِي آخَرَ، ثُمَّ اُسْتُحِيضَتْ رُدَّتْ إلَى الْخَمْسَةِ عَلَى الثَّانِي لِتَكَرُّرِهَا وَإِلَى السِّتَّةِ عَلَى الْأَوَّلِ
​எனவே, ஒரு பெண்ணுக்கு ஒரு மாதத்தில் ஐந்து நாட்களும், அடுத்த மாதத்தில் ஆறு நாட்களும் மாதவிடாய் ஏற்பட்டு, பின்னர் (மூன்றாவது மாதம் தொடர்ச்சியாக இரத்தம் வெளியேறி) 'இஸ்திஹாளா' ஏற்பட்டால், இரண்டாவது கருத்துப்படி (இரண்டு முறை தேவை என்பதால்) மீண்டும் நிகழ்ந்த 5 நாட்களுக்கே திருப்பப்படுவாள். முதல் (மிகச் சரியான) கருத்தின்படி, அவள் கடைசியாக வந்த ஆறு நாட்களின் பக்கமே திருப்பப்படுவாள்
وَمَنْ حَاضَتْ خَمْسَةً ثُمَّ اُسْتُحِيضَتْ رُدَّتْ إلَيْهَا عَلَى الْأَوَّلِ، وَهِيَ كَمُبْتَدَأَةٍ عَلَى الثَّانِي، ذَكَرَهُ الشَّيْخُ فِي الْمُهَذَّبِ
​மேலும், ஒரு பெண்ணுக்கு (ஒரு முறை மட்டும்) ஐந்து நாட்கள் மாதவிடாய் வந்து, அதன் பிறகு 'இஸ்திஹாளா' ஏற்பட்டால், முதல் கருத்தின்படி, அவள் அந்த ஐந்து நாட்களையே தனது வழக்கமாகக் கொள்ள வேண்டும். இரண்டாவது கருத்தின்படி, அவள் (முதன்முதலில் மாதவிடாய் ஏற்பட்ட) ஆரம்பப் பெண்ணாகவே (முப்ததா) கருதப்படுவாள். இதனை ஷேக் அவர்கள் 'அல்-முஹத்தப்' நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்

{(فَإِنْ عَبَرَهُ) أَيْ عَبَرَ الدَّمُ أَكْثَرَ الْحَيْضِ (فَإِنْ كَانَتْ) (مُبْتَدَأَةً) (مُمَيِّزَةً بِأَنْ تَرَى قَوِيًّا وَضَعِيفًا)}
IIII இரத்தம் அதிகபட்ச ஹைத் காலத்தைத் தாண்டினால் — அந்த பெண் ‘முப்ததஅஹ்’ (முதல் முறையாக ஹைத் காணும் பெண்) ஆகவும், மேலும் ‘தம்யீஸ்’ உள்ளவளாகவும் இருந்தால் — அதாவது அவள் பலமான இரத்தத்தையும் பலவீனமான இரத்தத்தையும் காண்பவளாக இருந்தால்: மேலே பார்க்கவும் IIII
{(أَوْ مُبْتَدَأَةً لَا مُمَيِّزَةً بِأَنْ رَأَتْهُ بِصِفَةٍ أَوْ) (فَقَدَتْ شَرْطَ تَمْيِيزٍ)}
IIII அல்லது அவள் ‘முப்ததஅஹ்’ (முதல் முறையாக ஹைத் காணும் பெண்) ஆக இருந்தும் ‘தம்யீஸ்’ இல்லாதவளாக இருந்தால் — அதாவது ஒரே வகையான பண்பில் மட்டுமே இரத்தத்தை கண்டால் — அல்லது ‘தம்யீஸ்’ இன் நிபந்தனைகளில் ஒன்றை இழந்திருந்தால்: மேலே பார்க்கவும் IIII
{أَوْ مُعْتَادَةٌ بِأَنْ سَبَقَ لَهَا حَيْضٌ وَطُهْرٌ وَهِيَ غَيْرُ مُمَيِّزَةٍ}
IIII அல்லது முன்பே மாதவிடாய் மற்றும் தூய்மை காலம் இருந்த பழக்கம் உடையவள் - ஆனால் இரத்தத்தின் தன்மையால் வேறுபடுத்த முடியாதவள்: மேலே பார்க்கவும் IIII

(وَيُحْكَمُ لِلْمُعْتَادَةِ الْمُمَيِّزَةِ بِالتَّمْيِيزِ لَا الْعَادَةِ) الْمُخَالِفَةِ لَهُ (فِي الْأَصَحِّ) لِأَنَّهُ أَقْوَى مِنْهَا بِظُهُورِهِ، وَالثَّانِي يُحْكَمُ بِالْعَادَةِ
வழக்கமான மாதவிடாய் காலமும், இரத்தத்தின் நிற வேறுபாட்டை அறியும் தன்மையும் கொண்ட ஒரு பெண்ணுக்கு, அவளது வழக்கத்திற்கு மாற்றமாக நிற வேறுபாடு (தம்யீஸ்) ஏற்பட்டால், மிகச் சரியான கருத்தின்படி நிற வேறுபாட்டைக் கொண்டே தீர்ப்பு வழங்கப்படும்; வழக்கத்தைக் கொண்டு அல்ல. ஏனெனில், வெளிப்படையாகத் தெரிவதால் நிற வேறுபாடானது (தம்யீஸ்), வழக்கத்தை விட வலிமையான ஆதாரமாகும். இரண்டாவது கருத்தின்படி, வழக்கத்தைக் கொண்டே தீர்ப்பு வழங்கப்படும்
فَلَوْ كَانَتْ عَادَتُهَا خَمْسَةً مِنْ أَوَّلِ الشَّهْرِ وَبَقِيَّتُهُ طُهْرٌ فَرَأَتْ عَشَرَةً أَسْوَدَ مِنْ أَوَّلِ الشَّهْرِ وَبَقِيَّتَهُ أَحْمَرَ حُكِمَ بِأَنَّ حَيْضَهَا الْعَشَرَةُ عَلَى الْأَوَّلِ، وَالْخَمْسَةُ الْأُولَى مِنْهَا عَلَى الثَّانِي، وَالْبَاقِي عَلَيْهِمَا طُهْرٌ
ஒரு பெண்ணின் வழக்கம் ஒவ்வொரு மாதமும் முதல் 5 நாட்கள் மாதவிடாய், மீதமுள்ள நாட்கள் தூய்மை என்பதாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஒரு மாதத்தில் அவளுக்கு மாதத்தின் ஆரம்பத்திலிருந்து 10 நாட்கள் கருப்பு நிற இரத்தமும், மீதமுள்ள நாட்கள் சிவப்பு நிற இரத்தமும் வந்தால், இப்பொழுது தீர்ப்பு என்னவென்றால், முதல் கருத்தின்படி அந்த 10 நாட்களும் (கருப்பு நிறம் என்பதால்) அவளது மாதவிடாயாகக் கருதப்படும். இரண்டாவது கருத்தின்படி அவளது வழக்கமான ஆரம்ப 5 நாட்கள் மட்டுமே மாதவிடாயாகக் கருதப்படும். மீதமுள்ள இரத்தப்போக்கு உள்ள நாட்கள் இரண்டு கருத்துக்களின் படியும் "இஸ்திஹாளா" (தொடர் இரத்தப்போக்கு) காலமாகவே கருதப்படும்

(أَوْ) كَانَتْ (مُتَحَيِّرَةً بِأَنْ نَسِيَتْ عَادَتَهَا قَدْرًا وَوَقْتًا) وَلَا تَمْيِيزَ (فَفِي قَوْلٍ كَمُبْتَدَأَةٍ) غَيْرِ مُمَيِّزَةٍ فَتُحَيَّضُ يَوْمًا وَلَيْلَةً وَطُهْرُهَا بَقِيَّةُ الشَّهْرِ عَلَى الْأَظْهَرِ السَّابِقِ
(அல்லது) அவள் 'முதஹையிரா' (குழப்பமடைந்தவள்) ஆக இருந்தால் - அதாவது, தனது வழக்கமான மாதவிடாயின் அளவு (நாட்கள்) மற்றும் நேரம் ஆகிய இரண்டையுமே அவள் மறந்துவிட்டாள், மேலும் அவளிடம் (இரத்தத்தின் நிறத்தைக் கொண்டு) பிரித்தறியும் தன்மையும் இல்லையெனில் ஒரு கருத்தின்படி: அவள் (இரத்தத்தின் நிறத்தைக் கொண்டு) பிரித்தறியும் தன்மை அற்ற 'முப்ததா' (முதன் முதலில் மாதவிடாய் ஏற்பட்டவள்) போன்றே கருதப்படுவாள். எனவே, முன்பு கூறப்பட்ட அதிக வலிமையான கருத்தின்படி, அவள் ஒரு பகல் மற்றும் ஓர் இரவை மாதவிடாயாகவும், மாதத்தின் எஞ்சிய நாட்களை சுத்தமான காலமாகவும் கருத வேண்டும்
(وَالْمَشْهُورُ وُجُوبُ الِاحْتِيَاطِ) وَلَيْسَتْ كَالْمُبْتَدَأَةِ لِاحْتِمَالِ كُلِّ زَمَنٍ يَمُرُّ عَلَيْهَا لِلْحَيْضِ وَالطُّهْرِ
பிரபலமான கருத்துப்படி அவளுக்கு எச்சரிக்கையுடன் நடப்பது கட்டாயம் ஆகும். ஏனெனில் அவள் முதன்முறையாக மாதவிடாய் காணும் பெண்ணைப் போன்றவள் அல்ல; ஏனெனில், அவள் கடந்து செல்லும் ஒவ்வொரு நேரமும் மாதவிடாயாகவும் இருக்க வாய்ப்புள்ளது அல்லது சுத்தமான காலமாகவும் இருக்க வாய்ப்புள்ளது
(فَيَحْرُمُ الْوَطْءُ وَمَسُّ الْمُصْحَفِ وَالْقِرَاءَةُ فِي غَيْرِ الصَّلَاةِ) لِاحْتِمَالِ الْحَيْضِ (وَتُصَلِّي الْفَرَائِضَ أَبَدًا) لِاحْتِمَالِ الطُّهْرِ
மாதவிடாயாக இருக்கக்கூடிய சாத்தியம் இருப்பதால், உடலுறவு கொள்வது, குர்ஆனைத் தொடுவது மற்றும் தொழுகைக்கு வெளியேயான நேரங்களில் குர்ஆன் ஓதுவது ஆகியவை ஹராமாகும். அதே சமயம், தூய்மையாக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதால், அவள் கடமையான தொழுகைகளை எப்போதும் தொழுது வர வேண்டும்
(وَكَذَا النَّفَلُ فِي الْأَصَحِّ) اهْتِمَامًا بِهِ وَالثَّانِي يَقُولُ: لَا ضَرُورَةَ إلَيْهِ
அவ்வாறே நபில் தொழுகைகளையும் மிகச் சரியான கருத்தின்படி தொழுது வர வேண்டும். அதன் மீதான முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்காக இவ்வாறு கூறப்படுகிறது. இரண்டாவது கருத்து: அதற்கான அவசியம் இல்லை என்று கூறுகிறது
(وَتَغْتَسِلُ لِكُلِّ فَرْضٍ) بَعْدَ دُخُولِ وَقْتِهِ لِاحْتِمَالِ انْقِطَاعِ الدَّمِ حِينَئِذٍ
ஒவ்வொரு பர்ழு தொழுகைக்கும் அதன் நேரம் நுழைந்த பின் அவள் குளிக்க வேண்டும்; ஏனெனில், அந்த நேரத்தில் இரத்தம் நின்றிருக்க வாய்ப்புள்ளது என்பதனால்
قَالَ فِي شَرْحِ الْمُهَذَّبِ عَنْ الْأَصْحَابِ: فَإِنْ عَلِمَتْ وَقْتَ انْقِطَاعِهِ كَعِنْدَ الْغُرُوبِ لَزِمَهَا الْغُسْلُ كُلَّ يَوْمٍ عَقِبَ الْغُرُوبِ وَتُصَلِّي بِهِ الْمَغْرِبَ، وَتَتَوَضَّأُ لِبَاقِي الصَّلَوَاتِ، لِاحْتِمَالِ الِانْقِطَاعِ عِنْدَ الْغُرُوبِ دُونَ مَا سِوَاهُ
ஷர்ஹுல் முஹத்தப் நூலில் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் ஷாஃபிஈ மத்ஹபு அறிஞர்களைத் தொட்டும் கூறுகிறார்கள்: நிச்சயமாக அவள் தன் இரத்தம் நிற்கும் நேரத்தை அறிந்திருந்தால் - உதாரணமாக சூரியன் மறையும் நேரத்தை அவள் அறிந்திருந்தால் - அவள் ஒவ்வொரு நாளும் சூரியன் மறைந்த பிறகு குளிப்பது கடமையாகும். அதைக் கொண்டு அவள் மக்ரிப் தொழுகையைத் தொழ வேண்டும். பிறகு ஏனைய தொழுகைகளுக்கு அவள் உளூ செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், மற்ற நேரங்களை விட சூரியன் மறையும் நேரத்தில் இரத்தம் நின்றுவிட வாய்ப்பு இருப்பதாலேயே இச்சட்டம் கூறப்படுகிறது

(وَتَصُومُ رَمَضَانَ) لِاحْتِمَالِ أَنْ تَكُونَ طَاهِرَةً جَمِيعَهُ (ثُمَّ شَهْرَيْنِ كَامِلَيْنِ)
(அவள்) தான் தூய்மையாக இருக்கக்கூடும் என்ற சாத்தியத்தினால் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். பிறகு (தொடர்ச்சியாக) இரண்டு முழு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும்
بِأَنْ يَكُونَ رَمَضَانُ ثَلَاثِينَ، وَتَأْتِي بَعْدَهُ بِثَلَاثِينَ يَوْمًا مُتَوَالِيَةً (فَيَحْصُلُ) لَهَا (مِنْ كُلٍّ) مِنْهُمَا (أَرْبَعَةَ عَشَرَ) يَوْمًا
அதாவது ரமழான் முப்பது நாட்களாக இருந்து, அதற்குப் பிறகு தொடர்ச்சியாக முப்பது நாட்கள் அவள் நோன்பு நோற்றால், (அந்த ரமழான் மற்றும் அதற்குப் பிந்தைய முப்பது நாட்கள் ஆகிய) ஒவ்வொன்றிலிருந்தும் அவளுக்கு தலா பதினான்கு நாட்கள் (நோன்பு கணக்கில்) சேரும்
لِاحْتِمَالِ أَنْ تَحِيضَ فِيهِمَا أَكْثَرَ الْحَيْضِ، وَيَطْرَأَ الدَّمُ فِي يَوْمٍ، وَيَنْقَطِعَ فِي آخَرَ فَتَفْسُدَ سِتَّةَ عَشَرَ يَوْمًا مِنْ كُلٍّ مِنْهُمَا، فَإِنْ كَانَ رَمَضَانُ نَاقِصًا حَصَلَ لَهَا مِنْهُ ثَلَاثَةَ عَشَرَ يَوْمًا
ஏனெனில், அந்த இரண்டு காலங்களிலும் அவளுக்கு அதிகபட்ச மாதவிடாய் காலம் (15 நாட்கள்) ஏற்படக்கூடும் என்றும், ஒரு நாளில் இரத்தம் தொடங்கி மற்றொரு நாளில் அது முடிவடையும் என்றும் வைத்தால், ஒவ்வொரு முப்பது நாட்களிலும் பதினாறு நாட்கள் வீணாகிவிடும் (கூடாததாகிவிடும்). ஒருவேளை ரமழான் இருபத்தி ஒன்பது நாட்களாக இருந்தால், அதிலிருந்து அவளுக்கு பதிமூன்று நாட்கள் மட்டுமே கிடைக்கும்
(ثُمَّ تَصُومُ مِنْ ثَمَانِيَةَ عَشَرَ) يَوْمًا (ثَلَاثَةً أَوَّلَهَا وَثَلَاثَةً آخِرَهَا فَيَحْصُلُ الْيَوْمَانِ الْبَاقِيَانِ)
பிறகு, அவள் பதினெட்டு நாட்களில், அதன் ஆரம்பத்தில் மூன்று நாட்கள் மற்றும் இறுதியில் மூன்று நாட்கள் என நோன்பு நோற்பாள். அப்போது அவளுக்கு (ரமழானில் விடுபட்ட) மீதமுள்ள இரண்டு நாட்கள் கிடைத்துவிடும்
لِأَنَّ الْحَيْضَ إنْ طَرَأَ فِي الْيَوْمِ الْأَوَّلِ مِنْ صَوْمِهَا فَغَايَتُهُ أَنْ يَنْقَطِعَ فِي السَّادِسَ عَشَرَ، فَيَصِحَّ لَهَا الْيَوْمَانِ الْأَخِيرَانِ
ஏனெனில், அவளது நோன்பின் முதல் நாளில் மாதவிடாய் தொடங்கினால், அது பதினாறாம் நாள் முடிவடையும்; எனவே கடைசி இரண்டு நாட்கள் அவளுக்குச் சரியாக அமையும்
وَإِنْ طَرَأَ فِي الْيَوْمِ الثَّانِي صَحَّ لَهَا الْأَوَّلَ وَالْأَخِيرَ، أَوْ فِي الثَّالِثِ صَحَّ لَهَا الْأَوَّلَانِ، أَوْ فِي السَّادِسَ عَشَرَ صَحَّ لَهَا الثَّانِي وَالثَّالِثُ، أَوْ فِي السَّابِعَ عَشَرَ صَحَّ السَّادِسَ عَشَرَ وَالثَّالِثَ، أَوْ فِي الثَّامِنَ عَشَرَ صَحَّ السَّادِسَ عَشَرَ وَالسَّابِعَ عَشَرَ
ஒருவேளை இரண்டாம் நாள் தொடங்கினால், முதல் நாளும் கடைசி நாளும் சரியாக அமையும். அல்லது மூன்றாம் நாள் தொடங்கினால் முதல் இரண்டு நாட்கள் சரியாகும். அல்லது பதினாறாம் நாள் தொடங்கினால் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்கள் சரியாகும். அல்லது பதினேழாம் நாள் தொடங்கினால் பதினாறாம் நாளும் மூன்றாம் நாளும் சரியாகும். அல்லது பதினெட்டாம் நாள் தொடங்கினால் பதினாறாம் மற்றும் பதினேழாம் நாட்கள் சரியாக அமையும்
(وَيُمْكِنُ قَضَاءُ يَوْمٍ بِصَوْمِ يَوْمٍ ثُمَّ الثَّالِثِ وَالسَّابِعَ عَشَرَ) مِنْ الْيَوْمِ الْأَوَّلِ
மேலும், ஒரு நாள் நோன்பைக் கழா செய்வதற்கு, ஒரு நாள் நோன்பு நோற்று, பிறகு (அதிலிருந்து கணக்கிட்டு) மூன்றாம் நாளும் பதினேழாம் நாளும் நோன்பு நோற்பதன் மூலம் நிறைவேற்ற முடியும்
لِأَنَّ الْحَيْضَ إنْ طَرَأَ فِي الْيَوْمِ الْأَوَّلِ سَلِمَ السَّابِعَ عَشَرَ أَوْ فِي الثَّالِثِ سَلِمَ الْأَوَّلُ، وَإِنْ كَانَ آخِرُ الْحَيْضِ الْأَوَّلَ سَلِمَ الثَّالِثُ، أَوْ الثَّالِثَ سَلِمَ السَّابِعَ عَشَرَ
ஏனெனில், முதல் நாளில் மாதவிடாய் தொடங்கினால் பதினேழாம் நாள் சரியாக அமையும்; மூன்றாம் நாளில் தொடங்கினால் முதல் நாள் சரியாக அமையும். ஒருவேளை மாதவிடாயின் முடிவு முதல் நாளாக இருந்தால் மூன்றாம் நாள் சரியாக அமையும்; அல்லது மாதவிடாயின் முடிவு மூன்றாம் நாளாக இருந்தால் பதினேழாம் நாள் சரியாக அமையும்

(وَإِنْ حَفِظَتْ شَيْئًا) مِنْ عَادَتِهَا دُونَ شَيْءٍ كَأَنْ حَفِظَتْ الْوَقْتَ دُونَ الْقَدْرِ أَوْ عَكْسَ ذَلِكَ (فَلِلْيَقِينِ) مِنْ حَيْضٍ وَطُهْرٍ
(ஒரு பெண்) தனது வழக்கமான மாதவிடாய் சுழற்சியின் ஒரு பகுதியை மட்டும் நினைவில் வைத்திருந்து, மற்றொன்றை மறந்திருந்தால்—உதாரணமாக, மாதவிடாய் ஏற்படும் நேரத்தை நினைவில் வைத்திருந்து, அதன் அளவை (நாட்களின் எண்ணிக்கையை) மறந்திருந்தால், அல்லது அதற்கு நேர்மாறாக இருந்தால்—அவள் எதில் உறுதியாக இருக்கிறாளோ, அதற்குரிய சட்டமே பொருந்தும். அதாவது, மாதவிடாய் மற்றும் சுத்தமான காலம் ஆகிய இரண்டில் எதைப் பற்றி அவள் உறுதியாக இருக்கிறாளோ, அதற்குரிய சட்டங்கள் அமல்படுத்தப்படும்
(حُكْمُهُ وَهِيَ فِي الْمُحْتَمَلِ) لِلْحَيْضِ وَالطُّهْرِ (كَحَائِضٍ فِي الْوَطْءِ وَطَاهِرٍ فِي الْعِبَادَةِ وَإِنْ احْتَمَلَ انْقِطَاعًا وَجَبَ الْغُسْلُ لِكُلِّ فَرْضٍ) احْتِيَاطًا
அவள் மாதவிடாயாகவும் இருக்கலாம் அல்லது தூய்மையாகவும் இருக்கலாம் என்ற சந்தேகத்திற்குரிய காலத்தில், உடலுறவு விஷயத்தில் அவள் மாதவிடாய் நிலையில் இருப்பவளாகக் கருதப்படுவாள்; ஆனால் வணக்க வழிபாடுகளில் தூய்மையானவளாகக் கருதப்படுவாள். மேலும், அந்த நேரத்தில் மாதவிடாய் இரத்தம் நின்று போவதற்கான சாத்தியம் இருந்தால், எச்சரிக்கையாக ஒவ்வொரு பர்ழு தொழுகைக்கும் குளிப்பது கட்டாயமாகும்
وَيُسَمَّى مُحْتَمَلُ الِانْقِطَاعِ طُهْرًا مَشْكُوكًا فِيهِ وَاَلَّذِي لَا يَحْتَمِلُهُ حَيْضًا مَشْكُوكًا فِيهِ
இரத்தம் நின்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் காலம் "சந்தேகத்திற்குரிய தூய்மை" என்று அழைக்கப்படும். இரத்தம் நிற்பதற்கு சாத்தியமில்லாத நிலை "சந்தேகத்திற்குரிய மாதவிடாய்" என்று அழைக்கப்படும்
وَالْحَافِظَةُ لِلْوَقْتِ كَأَنْ تَقُولَ كَانَ حَيْضِي يَبْتَدِئُ أَوَّلَ الشَّهْرِ فَيَوْمٌ وَلَيْلَةٌ مِنْهُ حَيْضٌ بِيَقِينٍ، وَنِصْفُهُ الثَّانِي طُهْرٌ بِيَقِينٍ، وَمَا بَيْنَ ذَلِكَ يَحْتَمِلُ الْحَيْضَ وَالطُّهْرَ وَالِانْقِطَاعَ
எனது மாதவிடாய் மாதத்தின் ஆரம்பத்தில் தொடங்கும் - என்பது போல மாதவிடாய் ஆரம்பிக்கும் காலத்தை மட்டும் நினைவில் வைத்திருப்பவருக்கு, மாதத்தின் ஆரம்பத்தில் ஒரு நாள் மற்றும் ஒரு இரவு உறுதியாக மாதவிடாய் ஆகும். மாதத்தின் இரண்டாம் பாதி உறுதியாக தூய்மையான காலமாகும். இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட காலம் மாதவிடாயாகவும் இருக்கலாம், தூய்மையாகவும் இருக்கலாம் அல்லது இரத்தம் நின்ற காலமாகவும் இருக்கலாம்
وَالْحَافِظَةُ لِلْقَدْرِ كَأَنْ تَقُولَ حَيْضِي خَمْسَةٌ فِي الْعَشْرِ الْأُوَلِ مِنْ الشَّهْرِ لَا أَعْلَمُ ابْتِدَاءَهَا وَأَعْلَمُ أَنِّي فِي الْيَوْمِ الْأَوَّلِ طَاهِرٌ، فَالسَّادِسُ حَيْضٌ بِيَقِينٍ وَالْأَوَّلُ طُهْرٌ بِيَقِينٍ كَالْعِشْرِينِ الْأَخِيرِينَ، وَالثَّانِي إلَى آخِرِ الْخَامِسِ مُحْتَمَلٌ لِلْحَيْضِ وَالطُّهْرِ وَالسَّابِعُ إلَى آخِرِ الْعَاشِرِ مُحْتَمَلٌ لِلِانْقِطَاعِ أَيْضًا
எனது மாதவிடாய் மாதத்தின் முதல் பத்து நாட்களில் ஐந்து நாட்கள் வருகிறது; அது எப்போது தொடங்குகிறது என எனக்கு தெரியாது. அதேசமயம் முதல் நாளில் நான் தூய்மையாக இருப்பதை அறிவேன் - என்பது போல மாதவிடாயின் அளவை (நாட்களின் எண்ணிக்கையை) மட்டும் நினைவில் வைத்திருப்பவருக்கு, ஆறாவது நாள் உறுதியாக மாதவிடாய் ஆகும். முதல் நாள் மாதத்தின் பிந்தைய இருபது நாட்களைப் போலவே உறுதியாக தூய்மையான நாளாகும். இரண்டாம் நாள் முதல் ஐந்தாம் நாள் இறுதி வரை மாதவிடாயாகவும் இருக்கலாம், தூய்மையாகவும் இருக்கலாம். ஏழாம் நாள் முதல் பத்தாம் நாள் இறுதி வரை மாதவிடாயாகவும் இருக்கலாம், தூய்மையாகவும் இருக்கலாம் அல்லது இரத்தம் நின்ற காலமாகவும் இருக்கலாம்

(وَالْأَظْهَرُ أَنَّ دَمَ الْحَامِلِ وَالنَّقَاءَ بَيْنَ) دِمَاءِ (أَقَلِّ الْحَيْضِ) فَأَكْثَرَ (حَيْضٌ)
கர்ப்பிணிப் பெண்ணின் இரத்தமும், குறைந்தபட்சம் முதல் அதிகபட்ச மாதவிடாய் நாட்களுக்குள் வரும் இரத்தப்போக்கிற்கு இடையே ஏற்படும் தூய்மையும் மாதவிடாயாகக் கருதப்படும் என்பதே மிகவும் பலமான கருத்தாகும்
أَمَّا فِي الْأُولَى فَلِأَنَّهُ بِصِفَةِ دَمِ الْحَيْضِ، وَمُقَابِلُهُ فِيهَا يَقُولُ: هُوَ دَمُ فَسَادٍ إذْ الْحَمْلُ يَسُدُّ مَخْرَجَ دَمِ الْحَيْضِ
முதலாவது விஷயத்தைப் பொறுத்தவரை (அதாவது கர்ப்பிணிப் பெண்ணின் இரத்தம்), அது மாதவிடாய் இரத்தத்தின் பண்புகளைக் கொண்டிருப்பதாலேயே மாதவிடாயாகக் கருதப்படுகிறது. ஆனால், இதற்கு மாற்றமான கருத்துடையவர்கள், இது ஒரு நோய்க்குரிய (அசாதாரண) இரத்தமாகும் (மாதவிடாய் அல்ல); ஏனெனில், கருப்பையில் உள்ள கருவானது மாதவிடாய் இரத்தம் வெளியேறும் வழியை அடைத்துவிடுகிறது எனக் கூறுகின்றனர்
وَسَوَاءٌ عَلَى الْأَوَّلِ تَخَلَّلَ بَيْنَ انْقِطَاعِ الدَّمِ وَالْوِلَادَةِ خَمْسَةَ عَشَرَ يَوْمًا أَمْ أَقَلُّ، وَقِيلَ، فِي تَخَلُّلِ الْأَقَلِّ لَيْسَ بِحَيْضٍ
முதலாவது கருத்தின்படி (அதாவது கர்ப்பிணிப் பெண்ணின் இரத்தம் மாதவிடாய் என்பதில்), இரத்தம் நிற்பதற்கும் பிரசவத்திற்கும் இடையே பதினைந்து நாட்களோ அல்லது அதைவிடக் குறைவான நாட்களோ இடைவெளி இருந்தாலும் அது மாதவிடாயாகவே கருதப்படும். எனினும், அந்த இடைவெளி பதினைந்து நாட்களை விடக் குறைவாக இருந்தால் அது மாதவிடாய் அல்ல என்று ஒரு கருத்தும் உள்ளது
وَأَمَّا الثَّانِيَةُ وَهِيَ أَنْ تَرَى وَقْتًا دَمًا وَوَقْتًا نَقَاءً وَهَكَذَا، وَلَمْ يُجَاوِزْ ذَلِكَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا، وَلَمْ تَنْقُصْ الدِّمَاءُ عَنْ قَلِّ الْحَيْضِ فَهِيَ حَيْضٌ
இரண்டாவது விஷயத்தைப் பொறுத்தவரை (அதாவது இரத்தப்போக்கிற்கு இடையே ஏற்படும் தூய்மை), ஒரு பெண் ஒரு நேரத்தில் இரத்தத்தையும், மற்றொரு நேரத்தில் தூய்மையையும் (இரத்தம் நிற்கக்கூடிய நிலை) மாறி மாறிப் பார்க்கிறாள்; அது பதினைந்து நாட்களைத் தாண்டாமல் இருந்தாலும், (வெளிப்பட்ட) இரத்தங்களின் மொத்த அளவு குறைந்தபட்ச மாதவிடாயை விடக் குறையாமல் இருந்தாலும் அது மாதவிடாயாகும்
وَالنَّقَاءُ بَيْنَهُمَا حَيْضٌ فِي الْأَظْهَرِ تَبَعًا لَهَا
மேலும், அவ்விரண்டு இரத்தப் போக்குகளுக்கு இடைப்பட்ட தூய்மையான காலமானது, இரத்தப்போக்குக் காலத்தைத் தொடர்ந்து வருவதனால் அதுவும் மாதவிடாயாகவே கணிக்கப் படுகிறது என்பதே மிகவும் பலமான கருத்தாகும்
وَالثَّانِي يَقُولُ: هُوَ طُهْرٌ فِي الصَّوْمِ وَالصَّلَاةِ وَالْغُسْلِ وَنَحْوِهَا دُونَ الْعِدَّةِ وَالطَّلَاقِ
ஆனால், இரண்டாவது (மாற்றுக்) கருத்தோ: அந்தத் (இரத்தப் போக்குகளுக்கு இடைப்பட்ட) தூய்மையான நாட்கள் நோன்பு, தொழுகை, குளிப்பு போன்ற விடயங்களில் 'தூய்மை' என்றே கருதப்படும்; ஆனால் இத்தா மற்றும் தலாக் ஆகிய விடயங்களில் அது அவ்வாறு கருதப்படாது என்கிறது
وَالنَّقَاءُ بَعْدَ آخِرِ الدِّمَاءِ طُهْرٌ قَطْعًا، وَإِنْ نَقَصَتْ الدِّمَاءُ عَنْ أَقَلِّ الْحَيْضِ فِيهِ دَمُ فَسَادٍ، وَإِنْ زَادَتْ مَعَ النَّقَاءِ بَيْنَهَا عَلَى خَمْسَةَ عَشَرَ يَوْمًا فَهِيَ دَمُ اسْتِحَاضَةٍ
கடைசி இரத்தப்போக்கிற்குப் பிறகு ஏற்படும் தூய்மையானது மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இன்றி சுத்தமான நிலையாகும். ஒருவேளை (வெளிப்பட்ட) இரத்தங்களின் மொத்த அளவு குறைந்தபட்ச மாதவிடாயை விடக் குறைவாக இருந்தால் அது அசாதாரண (நோய்க்குரிய) இரத்தமாகும். அதே போல, இரத்தமும் இடைப்பட்ட தூய்மையும் சேர்ந்து பதினைந்து நாட்களைத் தாண்டினால், அது 'இஸ்திஹாளா' (தொடர் இரத்தப்போக்கு) ஆகும்
(وَأَقَلُّ النِّفَاسِ) أَيْ الدَّمِ الَّذِي أَوَّلُهُ يَعْقُبُ الْوِلَادَةَ (لَحْظَةٌ وَأَكْثَرُهُ سِتُّونَ) يَوْمًا (وَغَالِبُهُ أَرْبَعُونَ) يَوْمًا فِيمَا اسْتَقْرَأَهُ الْإِمَامُ الشَّافِعِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ
நிஃபாஸின் - அதாவது பிரசவத்திற்குப் பிறகு வெளிவரும் இரத்தத்தின் குறைந்தபட்ச அளவு ஒரு கணம் (லஹ்ழா) ஆகும். அதன் அதிகபட்ச அளவு அறுபது நாட்களாகும். பெரும்பாலான அளவு நாற்பது நாட்களாகும். இவை இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்ததன் அடிப்படையில் அமைந்த முடிவுகளாகும்
وَعَبَّرَ بَدَلَ اللَّحْظَةِ فِي التَّحْقِيقِ كَالتَّنْبِيهِ بِالْمَجَّةِ أَيْ الدَّفْعَةِ، وَفِي الرَّوْضَةِ كَالشَّرْحِ بِأَنَّهُ لَا حَدَّ لِأَقَلِّهِ، أَيْ لَا يَتَقَدَّرُ بَلْ مَا وُجِدَ مِنْهُ، وَإِنْ قَلَّ يَكُونُ نِفَاسًا، وَلَا يُوجَدُ أَقَلُّ مِنْ مَجَّةٍ، وَيُعَبَّرُ عَنْ زَمَانِهَا بِاللَّحْظَةِ، فَالْمُرَادُ مِنْ الْعِبَارَاتِ وَاحِدٌ
தஹ்கீக் மற்றும் 'தன்பீஹ்' ஆகிய நூற்களில் 'லஹ்ழா' (கணம்) என்ற சொல்லிற்குப் பதிலாக 'மஜ்ஜஹ்' (ஒரு சொட்டு இரத்தம் கசிதல்) அதாவது 'தஃப்அஹ்' (ஒரே ஒரு முறை வெளிப்படுதல்) என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. 'அல்-ரவ்ழா' மற்றும் 'அல்-ஷர்ஹ்' ஆகிய நூற்களில், அதன் குறைந்தபட்ச அளவிற்கு ஒரு வரம்பு கிடையாது எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. அதாவது, அது இவ்வளவுதான் என்று அளவிடப்பட மாட்டாது. மாறாக, அதிலிருந்து எவ்வளவு வெளிப்பட்டாலும், அது குறைவாக இருந்த போதிலும் அது 'நிஃபாஸ்' (பிரசவ கால இரத்தம்) என்றே கருதப்படும். ஒரே ஒரு முறை வெளிப்படுவதை (மஜ்ஜஹ்) விடக் குறைவான ஒரு நிலை இருக்க முடியாது; அந்த (வெளியேறும்) நேரத்தையே 'லஹ்ழா' (கணம்) என்று குறிப்பிடப்படும். எனவே, இந்த (வெவ்வேறு) வாசகங்கள் அனைத்தும் உணர்த்தும் கருத்து ஒன்றே ஆகும்
(وَيَحْرُمُ بِهِ مَا حَرُمَ بِالْحَيْضِ) قِيَاسًا عَلَيْهِ، وَمِنْ ذَلِكَ حُرْمَةُ الطَّلَاقِ كَمَا صَرَّحَ بِهِ الرَّافِعِيُّ فِي بَابِهِ، وَالْمُصَنِّفُ هُنَا
மாதவிடாயினால் எவையெல்லாம் ஹராமாகுமோ அவை அனைத்தும் இதனாலும் [நிஃபாஸினாலும்] ஹராமாகும். இது மாதவிடாயுடன் ஒப்பிட்டு (கியாஸ் செய்யப்பட்டு) பெறப்பட்ட சட்டமாகும். இமாம் ராஃபிஈ அவர்கள் தலாக் சம்பந்தமான பாடத்திலும், இமாம் நவவீ அவர்கள் இங்கேயும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள படி, தலாக் கூறுவது ஹராம் என்பதும் இதில் அடங்கும்
(وَعُبُورُهُ سِتِّينَ) يَوْمًا (كَعُبُورِهِ) أَيْ الْحَيْضِ (أَكْثَرَهُ) فَيُنْظَرُ أَمُبْتَدَأَةٌ فِي النِّفَاسِ أَمْ مُعْتَادَةٌ، مُمَيِّزَةٌ أَمْ غَيْرُ مُمَيِّزَةٍ وَيُقَاسُ بِمَا تَقَدَّمَ فِي الْحَيْضِ
இரத்தப்போக்கு அறுபது நாட்களைக் கடந்து செல்வது, மாதவிடாயின் அதிகபட்ச காலத்தைக் கடந்து செல்வதைப் போன்றதாகும். அதாவது, நிஃபாஸ் இரத்தப்போக்கு அறுபது நாட்களைத் தாண்டிச் சென்றால், அந்தப் பெண் நிஃபாஸில் 'முப்ததா' (புதிதாக இப் பிரச்சினையை சந்திப்பவர்) அல்லது 'முஃதாதா' (ஏற்கனவே வழமையுள்ளவர்) என்பதும், 'முமய்யிஸா' (இரத்தத்தின் நிறம்/தன்மை கொண்டு வேறுபடுத்தத் தெரிந்தவர்) அல்லது 'கைரு முமய்யிஸா' (வேறுபடுத்தத் தெரியாதவர்) என்பதும் கவனிக்கப்படும். மாதவிடாய் பாடத்தில் முன்பு கூறப்பட்ட சட்டங்களுடன் இது ஒப்பிட்டுப் பார்க்கப்படும்
فَتُرَدُّ الْمُبْتَدَأَةُ الْمُمَيِّزَةُ إلَى التَّمْيِيزِ بِشَرْطِ أَنْ لَا يَزِيدَ الْقَوِيُّ عَلَى سِتِّينَ يَوْمًا، وَلَا ضَبْطَ فِي الضَّعِيفِ
​எனவே, இரத்தத்தை வேறுபடுத்தத் தெரிந்த (முமய்யிஸாவான), புதிதாக இப் பிரச்சினையை சந்திக்கக் கூடிய (முப்ததா), தனது இரத்தத்தின் தன்மையைக் கொண்டே (வலிமையான இரத்தம் எது என்பதை வைத்து) கணக்கிட வேண்டும். இதற்கு நிபந்தனை என்னவென்றால், அந்த வலிமையான இரத்தம் அறுபது நாட்களுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும். அதேசமயம், பலவீனமான இரத்தத்திற்கு (அதிகபட்ச கால அளவு என்பதில்) குறிப்பிட்ட வரம்பு ஏதுமில்லை
وَغَيْرُ الْمُمَيِّزَةِ إلَى لَحْظَةٍ فِي الْأَظْهَرِ، وَالْمُعْتَادَةُ الْمُمَيِّزَةُ إلَى التَّمْيِيزِ لَا الْعَادَةِ فِي الْأَصَحِّ
இரத்தத்தை வேறுபடுத்தி அறியத் தெரியாத (கைரு முமய்யிஸாவான) ஒரு பெண், மிகவும் பலமான கருத்தின்படி, தனது நிஃபாஸ் காலத்தை 'ஒரு கணம்' என்று கணக்கிட்டு மீதமுள்ளவற்றை இஸ்திஹாளாவாகக் கருத வேண்டும். ஏற்கனவே வழக்கமான கால அளவு தெரிந்த, ஆனால் இரத்தத்தை வேறுபடுத்தியும் அறியத் தெரிந்த (முஃதாதா முமய்யிஸாவான) ஒரு பெண், மிகச் சரியான கருத்தின்படி, தனது வழக்கமான நாட்களை விடவும் இரத்தத்தின் வேறுபடுத்தி அறியும் தன்மையையே (தம்யீஸ்) அடிப்படையாகக் கொள்ள வேண்டும்
وَغَيْرُ الْمُمَيِّزَةِ الْحَافِظَةِ إلَى الْعَادَةِ، وَتَثْبُتُ بِمَرَّةٍ فِي الْأَصَحِّ
இரத்தத்தை வேறுபடுத்தத் தெரியாத, ஆனால் தனது வழக்கமான நாட்களை மட்டும் நினைவில் வைத்துள்ள (கைரு முமய்யிஸாவான) ஒரு பெண், தனது வழக்கமான நாட்களையே கணக்கில் கொள்ள வேண்டும். மிகச் சரியான கருத்தின் படி ஒரு முறை அது நிகழ்ந்திருந்தாலும் அதுவே அவளது வழக்கமாக உறுதி செய்யப் படும்
وَالنَّاسِيَةُ إلَى مَرَدِّ الْمُبْتَدَأَةِ فِي قَوْلٍ، وَتَحْتَاطُ فِي الْآخَرِ الْأَظْهَرِ فِي التَّحْقِيقِ. (انتهى الباب)
​தனது வழக்கமான நாட்களை மறந்த பெண், ஒரு (மிகவும் பலமான) கருத்தின்படி புதிதாக இப் பிரச்சினையை சந்திக்கக் கூடிய (முப்ததாவான) ஒரு பெண்ணைப் போல கணக்கிட வேண்டும்; மேலும் 'அல்-தஹ்கீக்' நூலில் கூறப் பட்டுள்ள மிகவும் பலமான கருத்தின் படி, அவள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். (இப் பாடம் இத்துடன் நிறைவடைகிறது.)