(B)
ஈமானின் கிளைகள்.
மேற் கூறப்பட்டவாறான (02) ஆம் (03) ஆம் இலக்க ஹதீஸ் - புஹாரி, முஸ்லிம்
மற்றும் பல்வேறு கிரந்தங்களிலே சிறு சிறு மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது
ஈமானின் கிளைகளின் எண்ணிக்கை - சில அறிவுப்புகளில் 64 அல்லது 76 அல்லது 77 என்றும்
காணப் படுகின்றது.
இந்த ஹதீஸுக்கு
விளக்கவுரை எழுதும் போது ஹதீஸ் விரிவுரையாளர்கள் ஈமானின் 70 க்கும் மேற்ட்பட்ட கிளைகளை,
அல் - குர்ஆன் மற்றும் அல் - ஹதீஸிலிருந்து
தேடி எடுத்து பட்டியலிட்டு நமக்குத் தந்துள்ளனர்.
இங்கே 'கிளைகள்" என்பது 'பண்புகள்" அல்லது 'செயல்கள்" அல்லது 'கூறுகள்'" என பொருள்படும்.
ஒவ்வொருவருடைய பட்டியலும்
மற்றவர்களுடைய பட்டியலிலிருந்து சிறுது வித்தியாசப்படுகின்றது. எது
எப்படியிருந்தாலும் ஈமானுடைய இந்தக் கிளைகளின் எண்ணிக்கையும் அதன் விபரங்களும்
அல்லாஹ்வுடைய மற்றும் அவனது தூதருடைய இல்மில் சேர்ந்தவையாகும்.
ஆனால் மேற் கூறப்பட்ட
ஹதீஸிலிருந்து நமக்கு சில விடயங்கள் திட்டமாகத் தெரியவருகின்றன. அவையாவன:
·
ஈமானுடைய
கிளைகளில் அனைத்தையும் விட உயர்ந்தது தௌஹீதுடைய கலிமாவாகிய 'லாஇலாஹ
இல்லல்லாஹ்" ஆகும். இதை விட
படித் தரத்தில் உயர்ந்த
வேறெந்தக் கிளைகளும் இல்லை.
·
மேலும் ஈமானுடைய
கிளைகளில் மிகத் தாழ்ந்தது முஸ்லிம்களுக்கு இடையூறு தரும் கல், முள் போன்ற பொருட்களை
பாதையிலிருந்து அகற்றுவதாகும்.
·
மேலும் வெட்கம்
ஈமானின் ஒரு முக்கிய கிளையாகும்.
ஹதீஸ் விரிவுரையாளர்களின்
ஈமானின் கிளைகள் சமந்தப்பட்ட சிறு சிறு
வித்தியாசங்களுக்குட்பட்ட விபரங்களை ஒன்றாகத் தொகுத்து ஒரு எளிய பட்டியலைத்
தருகிறோம். இங்கே
மொத்தம் 77 (= 27 + 7 + 43) கிளைகள்
தரப்பட்டுள்ளன.
ஈமானின் கிளைகளை அறிஞர்கள்
பிரதானமாக மூன்று பிரிவுகளாகப்
பிரிக்கின்றனர்.
1)
உள்ளம் சார்ந்த
கிளைகள்
2)
சொல் சார்ந்த
கிளைகள்
3)
செயல் சார்ந்த
கிளைகள்
1) உள்ளம் சார்ந்த கிளைகள்
Ø நம்பிக்கை தொடர்பானவை
1.
அல்லாஹ்வை
நம்புதல்
·
ஈமானுடைய
கிளைகளில் அனைத்தையும் விட உயர்ந்தது தௌஹீதுடைய
கலிமாவாகிய 'லாஇலாஹ இல்லல்லாஹ்" ஆகும்.
·
இதை விட படித் தரத்தில் உயர்ந்த
வேறெந்தக் கிளைகளும் இல்லை.
·
அல்லாஹ்வைத் தவிர உள்ள அனைத்தும் அவனால் படைக்கப் பட்டவையே.
அல்லாஹு தஆலா உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் அவனது வல்லமையினால் படைத்தான்.
அதற்கு உரிமையாளனும் அவனே.
·
படைப்புகளுக்கு சுயமாக
இயங்கக் கூடிய சக்தி இல்லை. அல்லாஹ்வின் நாட்டப்படியே அவை இயங்கும்.
2.
மலக்குகளை நம்புதல்
3.
வேதங்களை
நம்புதல் (அல் - குர்ஆனை நம்புவதும் இதில் அடங்கும்.)
4.
ரஸூல்மார்களை
நம்புதல் (நபி முஹம்மத் (ஸல்) அவர்களை நம்புவதும் இதில் அடங்கும்.)
5.
கழா - கத்ரை
நம்புதல்
6.
மறுமை நாளை
நம்புதல்
·
கbப்ர்
·
bபஃஸ்
(எழுப்புதல்)
·
மஹ்ஷர் (ஒன்று
சேர்த்தல்)
·
ஹிசாப் (விசாரணை)
·
மீzசான் (தராசு)
·
ஸிராத்
·
ஜன்னாஹ் (சுவர்க்கம்)
·
நார் (நரகம்)
·
ஏனையவை
Ø இறையுணர்வுகள் தொடர்பானவை
7. ஹுbப்புல்லாஹ் (அல்லாஹ்வின் மீது நேசம்)
8.
ஹுbப்புர் ரஸூல் (நபியின்
மீது நேசம்)
9.
இஃலாஸ் (மனத்
தூய்மை)
10. தக்வா (இறையச்சம்)
11. தவக்குல் (அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுதல்)
12. ஷுக்ர் (அல்லாஹ்வுக்கு நன்றியுணர்வு)
13. தௌபா (பாவங்களுக்கு
வருந்தி மன்னிப்பு கேட்டல்)
14. அல்லாஹ்வின் விதியை பொருத்திக் கொள்ளுதல்
15. அல்லாஹ்வின் ரஹ்மத்தை ஆதரவு வைத்தல்
16. அல்லாஹ்வின் ரஹ்மதின் மீது நிராசையாகாமை
17. அல்லாஹ்வுக்காகவே ஒருவரை நேசிப்பதும் வெறுப்பதும்
18. zஸுஹ்த் (உலகப் பற்றின்மை)
Ø நற்குணங்கள் தொடர்பானவை
19. ஹயா (வெட்கம்)
·
வெட்கம் ஈமானின் ஒரு
முக்கிய கிளையாகும்.
20. இரக்கம்
21. சbப்ர் (பொறுமை)
22. பணிவு
23. தற்பெருமையின்மை
24. கோபத்தை அடக்குதல்
25. பிறரைப் பற்றி சந்தேகம், தீய எண்ணம் கொள்ளாமையும் நல்லெண்ணம் வைத்தலும்
26. பொறாமை,வஞ்சகம் இன்மை
27. வாக்குறுதி பேணல்
2) சொல் சார்ந்த கிளைகள்
1.
லாஇலாஹ
இல்லல்லாஹ்வைக் கூறுதல்
2.
குர்ஆன் ஓதுதல்
3.
திக்ர், ஸலவாத், மற்றும்
இஸ்திஃபார்
4.
துஆ
(பிரார்த்தனைகள்)
5.
கல்வி கற்றல்
6.
கல்வி கற்பித்தல்
7.
வீண் பேச்சைத்
தவிர்த்தல்
·
பொய்
·
புறம்
·
கோள்
·
குத்திப் பேசுதல்
·
சபித்தல்
·
அறுவறுப்பான பேச்சு
·
தீய பேச்சு
·
ஏனையவை
3) செயல் சார்ந்த கிளைகள்
Ø தன்
சம்பந்தப்பட்டவை
1.
சுத்தம் (உடல்,
உடை, இடம்)
2.
அவ்ரத்தை
மறைத்தல்
3.
தொழுகை
4.
சதகா (தர்மம்)
·
ஸகாத்
·
ஸதக்கதுல் பித்ர்
·
அடிமைகளை உரிமை
விடல்
·
குர்பானி
·
விருந்துபசாரம்
·
அன்பளிப்புகள்
·
ஏனையவை
5.
நோன்பு
6.
ஹஜ், உம்ரா
7.
ஹிஜ்ரத் (தீனைப் பாதுகாப்பதற்காக
வீட்டை விட்டு வெளிக் கிளம்புதல்)
8.
இஃதிகாப்
9.
நேர்ச்சை
செய்தால் நிறைவேற்றல்
10. சத்தியம் செய்தால் நிறைவேற்றல்
11. குற்றப் பரிகாரங்களை நிறைவேற்றல்
Ø உறவினர் சம்பந்தப்பட்டவை
12. முறையான திருமணம்
13. கணவன்/மனைவி, பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றல்
14. பெற்றோருக்கு அன்பு காட்டி பணிந்து நடத்தல்
15. உறவினர்களை சேர்ந்து வாழ்தல்
16. ஒழுக்கம் கற்பிக்கப்பட்ட முறையான குழந்தை வளர்ப்பு
Ø பொதுமக்கள் சம்பந்தப்பட்டவை
17. அண்டை வீட்டாரின் உரிமைகளைப் பேணல்
18. பெரியோருக்கு மரியாதை செய்தல்
19. சிறியோருக்கு இரக்கம் காட்டல்
20. நீதியாக ஆட்சி செய்தல்
21. பொறுப்புதாரிகளுக்குக் கட்டுப்படல்
22. ஒற்றுமையான சமூக வாழ்வு
23. சமாதானம் செய்து வைத்தல்
24. சலாம் சொல்லுதல்
25. சலாமுக்கு பதில் சொல்லுதல்
26. தும்மிய பின் அல்ஹம்துலில்லாஹ் சொன்னவருக்கு பதில் சொல்லுதல்
27. (விருந்துக்கான) அழைப்பை ஏற்றல்
28. நோயாளிகளை நலம் விசாரித்தல்
29. ஜனாஸாவின் கடமைகளை நிறைவேற்றல்
30. முறையான சம்பாதிப்பு
31. முறையான செலவளிப்பு
·
வீண் விரயம்
இல்லை
·
உலோபித்தனம்
இல்லை
·
நல் வழியில்
செலவளிப்பு
32. தேவையுடையோருக்கு கடன் வழங்கல்
33. கடன் பெற்றால் அதன் உரிமைகளைப் பேணல்
34. அமானிதம் பேணல்
35. குற்றவியல் தண்டனைகளை நிறைவேற்றல்
36. நீதியாக சாட்சி சொல்தல்
37. இஸ்லாத்தைப் பாதுகாக்க ஜிஹாத் (முயற்சி/உழைப்பு) செய்தல்
38. நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல்
39. பிறருக்கு உதவுதல்
40. வீண் விளையாட்டுகளிலிருந்து தவிர்ந்திருத்தல்
41. பிறரை ஏமாற்றாமை
42. யாருக்கும் எந்த விதத் தொல்லையும் தராமை
43. ஈமானுடைய கிளைகளில் மிகத் தாழ்ந்தது - முஸ்லிம்களுக்கு இடையூறு தரும் கல், முள்
போன்ற பொருட்களை பாதையிலிருந்து அகற்றுவது ஆகும்.
(C)
ஈமானுக்கான ஒரு எளிய விளக்கம்.
நமது அன்றாட பேச்சு வழக்கில் "ஈமான்" என்ற சொல்லை அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால்,
அதன் தெளிவைப் புரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
முன்னால் கூறப்பட்டவாறான பரந்த பொருள் கொண்ட ஈமானை, மிகவும் எளிய, இலகுவான நடையில்
விளங்கப்படுத்தலாம். அதாவது,
Ø ஈமான் என்றால் உள்ளத்தில் உதிக்கும் ஒரு ஒளியாகும்.
Ø ஈமானுக்கான உழைப்பு செய்யும் பொழுது அந்த ஒளி அதிகரிக்கும்.
Ø ஈமானுக்கான உழைப்பு செய்யாமல் விடும் பொழுது அந்த ஒளி குறையும்.
v
ஈமான் அதிகரிக்கும்
பொழுது உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்கள்.
1.
உள்ளம்
ஒளிமயமாகிறது.
2.
உள்ளம்
அலங்கரிக்கப் படுகிறது.
3.
உள்ளம்
பரிசுத்தப்படுத்தப் படுகிறது.
4.
உள்ளத்தில் சகீனத்
என்ற அமைதி - நிம்மதி உருவாகிறது.
1. உள்ளம் ஒளிமயமாகிறது.
·
39:22 my;yh`; vtUila
,Ujaj;ij ,];yhj;jpw;fhf tprhykhf;FfpwhNdh mtH jk; ,iwtdpd;
xspapy; ,Uf;fpwhH.
أَفَمَنْ شَرَحَ اللَّهُ صَدْرَهُ لِلْإِسْلَامِ فَهُوَ عَلَىٰ نُورٍ مِنْ رَبِّهِ ۚ فَوَيْلٌ لِلْقَاسِيَةِ قُلُوبُهُمْ مِنْ ذِكْرِ اللَّهِ ۚ أُولَٰئِكَ فِي ضَلَالٍ مُبِينٍ
·
33:43 cq;fis ,UspypUe;J ntspNaw;wp xspapd; ghy; nfhz;L tUtjw;fhf
cq;fs; kPJ mUs; Ghpfpwtd; mtNd.
هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَائِكَتُهُ لِيُخْرِجَكُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ ۚ وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا
·
(முஃமினுன் நுவ்விர கல்புஹு)
''(ஹாரிஸ் பின் மாலிக் எத்தகைய முஃமின்
என்றால்) அவரது உள்ளம் (ஈமானின் ஒளியால்) ஒளிமயமாக்கப்பட்டது'' என ரஸூலுல்லாஹி (ஸல்) கூறினார்கள்.
(நூல்: முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் - 11/129;
ஹதீஸின் சுருக்கம்; பார்க்க – முன்தகப் அஹாதீஸ்)
2. உள்ளம் அலங்கரிக்கப் படுகிறது.
·
49:7 vdpDk; my;yh`; <khid (ek;gpf;ifia) cq;fSf;Fg;
gphpaKilajhf;fp
cq;fs; ,jaq;fspYk; mjid mofhf;fpAk; itj;jhd;. md;wpAk; F/g;iuAk;
(epuhfhpg;igAk;) ghtj;ijAk;> khWghL nra;tijAk; cq;fSf;F ntWg;ghfTk; Mf;fpdhd;. ,j;jifatHfs; jhk;
NeHtopapy; elg;gtHfs;.
وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ ۚ
لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِنَ الْأَمْرِ لَعَنِتُّمْ وَلَٰكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ ۚ أُولَٰئِكَ هُمُ الرَّاشِدُونَ
·
(அல்லாஹும்ம ஹbப்பிப் இலைனல் ஈமான வzஸய்யின்ஹு fபீ குலூbபினா வகர்ரிஹ் இலல் குfப்ர வல் fபுஸூக வல் இஸ்யான வஜ்அல்னா மினர் ராஷிதீன்.)
யா அல்லாஹ்! எங்களுக்கு ஈமானின் மீது நேசத்தை
உண்டுபண்ணுவாயாக. மேலும், அதனை எங்களுடைய உள்ளங்களிலே அலங்கரித்து விடுவாயாக. மேலும், நிராகரிப்பின் மீதும், பாவத்தின் மீதும், உனக்கு மாறு செய்வதன் மீதும் வெறுப்பை
ஏற்படுத்துவாயாக. மேலும், எங்களை நேர்வழி பெற்றவர்களில் நின்றும்
ஆக்கி வைப்பாயாக.
(நூல்: முஸ்னத் அஹ்மத் - 15431; ஹாகிம் - 1/507)
3. உள்ளம் பரிசுத்தப்படுத்தப் படுகிறது.
·
(அல்லாஹும்ம ஆதி நfப்ஸீ தக்வாஹா வzஸக்கிஹா அன்த க்ஹறு மன் zஸக்காஹா அன்த வலிய்யுஹா வமவ்லாஹா.)
யா அல்லாஹ்! எனது ஆத்மாவுக்கு இறையச்சத்தைத் தருவாயாக. மேலும், அதனைப் பரிசுத்தப் படுத்துவாயாக. நீயே அதனைப் பரிசுத்தப் படுத்துபவர்களில்
மிகவும் சிறந்தவன். இன்னும் நீயே அதன்
நேசனாகவும் எஜமானகவும் உள்ளாய்.
(நூல்: ஸஹீஹ் முஸ்லிம் - 2706)
4. உள்ளத்தில் சகீனத் என்ற அமைதி - நிம்மதி உருவாகிறது.
·
48:4 mtHfSila
<khDld; gpd;Dk; <khid mjpfhpj;Jf; nfhs;tjw;fhf K/kpd;fspd; ,jaq;fspy;>
mtd; jhd; mikjpAk; (MWjYk;) mspj;jhd;.
هُوَ الَّذِي أَنْزَلَ السَّكِينَةَ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ لِيَزْدَادُوا إِيمَانًا مَعَ إِيمَانِهِمْ ۗ وَلِلَّهِ جُنُودُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا
·
13:28 (NeH top ngWk;) mtHfs;
vj;jifNahnud;why;> mtHfs; jhk; (Kw;wpYk;) <khd; nfhz;ltHfs;. NkYk;>
my;yh`;it epidT $Htjhy; mtHfSila ,jaq;fs; mikjp ngWfpd;wd
- my;yh`;it epidT $HtJ nfhz;L jhd; ,jaq;fs; mikjp ngWfpd;wd vd;gij
mwpe;J nfhs;f!
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
v
ஈமான் அதிகரித்ததன்
அடையாளம் என்ன?
Ø இபாதத்தில் ருசி அதிகரிக்கும்.
Ø பாவத்தில் வெறுப்பு அதிகரிக்கும்.
·
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து "ஈமான்
என்றால் என்ன?" என்று வினவினார். ''உமது நற் காரியங்களால் மகிழ்ச்சியும் தீய செயல்களால்
கவலையும் ஏற்படுமானால் நீர் முஃமின் (ஈமான் கொண்டவர்)'' என்று நபி (ஸல்) அவர்கள்
பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி); நூல்: ஹாகிம் - 1/13,14;
ஸஹீஹான ஹதீஸ்; பார்க்க – முன்தகப் அஹாதீஸ்)
No comments:
Post a Comment