November 21, 2026

தமிழ் முன்தகப் அஹாதீஸ் - இலவச PDF (Tamil Munthakhab Ahadith - Free PDF) PDF مُنْتَخَبُ أَحَادِيث

 

முன்தகப் அஹாதீஸ் புத்தகத்தின் முகப்பு
முன்தகப் அஹாதீஸ் புத்தகத்தின் அறிமுகம்

முன்தகப் அஹாதீஸ் என்பது நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பொன் மொழிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஹதீஸ்களின் தொகுப்பாகும். தஃவத்-தப்லீக் பணியில் வலியுறுத்தப்படும் ஆறு பண்புகளான கலிமா, தொழுகை, இல்மு மற்றும் திக்ர், இக்ராமுல் முஸ்லிமீன், இக்லாஸ் நிய்யத் மற்றும் தஃவத்-தப்லீக் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

இதன் மூல நூலை தஃவத்-தப்லீக்கின் இரண்டாவது அமீரான மௌலானா முஹம்மது யூசுப் காந்தல்வி (ரஹ்) அவர்கள் தொகுத்தார்கள். பின்னர், அவரது பேரனான மௌலானா முஹம்மது ஸஅத் காந்தல்வி (ரஹ்) அவர்கள் அதனை ஒழுங்குபடுத்தி உருது மொழியில் வழங்கினார்கள்.

இந்நூலின் நோக்கம் ஹதீஸ்களை வாசிப்பதோடு நின்றுவிடாமல், அவற்றைப் புரிந்துகொண்டு, சிந்தித்து, வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி, மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பதாகும். ஈமானை வலுப்படுத்துதல், தொழுகையைப் பேணுதல், மார்க்க அறிவையும் திக்ரையும் வளர்த்தல், சக முஸ்லிம்களிடம் அன்பும் மரியாதையும் காட்டுதல், தூய எண்ணத்துடன் செயல்படுதல் மற்றும் மார்க்கத்தை எடுத்துரைத்தல் ஆகியவற்றுக்கு இந்நூல் வழிகாட்டுகிறது.

மேலும், தேவையற்ற பேச்சு மற்றும் செயல்களைத் தவிர்த்து, பயனுள்ளவற்றில் ஈடுபட்டு, உலக வாழ்க்கையில் மறுமையை மறந்துவிடாமல், அல்லாஹ்வின் திருப்தியையும் மறுமையின் வெற்றியையும் இலக்காகக் கொண்டு வாழ்வதற்கு இந்நூல் நம்மை ஊக்குவிக்கிறது.

முன்தகப் அஹாதீஸ் புத்தகத்தின் PDF இனை இலவசமாக Download செய்ய பின்வரும் Link இனை அழுத்தவும்.











No comments:

Post a Comment