அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
"யாருடைய வாழ்வாதாரம் விசாலமாக்கப்பட வேண்டும் என்றும், அவருடைய ஆயுட்காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறாரோ, அவர் தனது உறவுமுறைகளைப் பேணிக்கொள்ளட்டும்."
நூற்கள்: ஸஹீஹுல் புகாரி – 5986, ஸஹீஹ் முஸ்லிம் – 2557.
Abu Hurayrah (RA) reported: The Messenger of Allah (SAW) said:
"Whoever wishes to have his provision expanded and his lifespan extended, let him maintain his ties of kinship."
Hadith reference: Sahih al-Bukhari 5986; Sahih Muslim 2557.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்தான். அவற்றைப் படைத்து முடித்தபோது, உறவுமுறை (ரஹிம்) எழுந்து, அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வின் இடுப்பைப் பற்றிக்கொண்டது.அப்போது அல்லாஹ் அதனிடம், "நிறுத்து!" என்று கூறினான்.
அதற்கு அது, "உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருபவனின் நிலை இதுவாகும்" என்று கூறியது.
அதற்கு அல்லாஹ், 'உன்னை எவன் சேர்த்து நடக்கிறானோ அவனை நானும் சேர்த்துக்கொள்வேன் என்பதும், உன்னை எவன் துண்டிக்கிறானோ அவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தி அளிக்கவில்லையா?' என்று கேட்டான்.
அதற்கு அது, 'ஆம், என் இறைவா!' என்றது.
அதற்கு அல்லாஹ், 'அவ்வாறாயின் அது உனக்கே உரியது' என்று கூறினான்."
அறிவிப்பாளர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் விரும்பினால் (அல்குர்ஆனின் பின்வரும் வசனத்தை) ஓதிக்கொள்ளுங்கள்:
(அதிகாரத்திற்கு) வந்துவிட்டால், பூமியில் குழப்பம் விளைவிப்பதற்கும், உங்கள் இரத்த உறவுகளைத் துண்டிப்பதற்கும் முற்படுவீர்களா? [முஹம்மத்: 22]."
மற்றொரு அறிவிப்பில், நபி ﷺ அவர்களே, "நீங்கள் விரும்பினால் இந்த வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்" என்று கூறியதாக வந்துள்ளது.
நூற்கள்: ஸஹீஹுல் புகாரி – 4830, ஸஹீஹ் முஸ்லிம் – 2554.
இந்த ஹதீஸின் முக்கிய படிப்பினை
உறவுகளைப் பேணுவது என்பது வெறும் சமூகப் பழக்கமல்ல; அது அல்லாஹ்வின் அருளையும் பாதுகாப்பையும் பெற்றுத்தரும் ஒரு முக்கியமான வணக்கமாகும்.
உறவுகளைப் பேணுபவருடன் அல்லாஹ் தனது அருளையும் உதவியையும் வழங்குவதாக வாக்களித்துள்ளான்.
Abu Hurayrah (may Allah be pleased with him) reported: The Messenger of Allah ﷺ said:
"Allah created the creation. When He had finished creating them, the womb (i.e., the ties of kinship) stood up and took hold of the waist of the Most Merciful.
He said to it, "Stop!"
It said, "This is the position of one seeking refuge in You from the cutting off of family ties."
He said, "Are you not satisfied that I should maintain ties with whoever maintains you, and cut off ties with whoever cuts off ties with you?'
It said, "Yes indeed, my Lord."
He said, "Then that is for you."
Abu Hurayrah (رضي الله عنه) then said:
"If you wish, recite this verse:
(فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُم)
"Would you then, if you were given authority, spread corruption on earth and sever your ties of kinship?"
In another narration: The Messenger of Allah ﷺ himself said, "And recite, if you wish: 'Would you then...?'"
Narrator: Abu Hurayrah (RA)
Sahih al-Bukhari: 4830, Sahih Muslim: 2554