அல்லாஹு தஆலா பரிசுத்த குர்ஆனில் கூறுவதாவது:
"(யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம் தூதராக ஆக்கினோம்). அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக் கொள்ள மாட்டோம் என்று எண்ணிக் கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருள்களிலிருந்த அவர் (நம்மை நோக்கி) ‘‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக் காரர்களில் ஒருவனாகி விட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)'' என்று பிரார்த்தனை செய்தார்.
நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (அவருடைய மிக்க துயரமான) சிரமத்திலிருந்தும் அவரை நாம் பாதுகாத்துக் கொண்டோம். இவ்வாறே, (சிரமத்தில் சிக்கி நம்மிடம் பிரார்த்தனை செய்யும்) நம்பிக்கையாளர்களையும் நாம் பாதுகாத்துக் கொள்வோம்."
(அல் குர்ஆன்: 21:87-88)
قَالَ اللَّهُ تَعَالَى فِي الْقُرْآنِ الْكَرِيمِ
وَذَا ٱلنُّونِ إِذ ذَّهَبَ مُغَـٰضِبࣰا فَظَنَّ أَن لَّن نَّقۡدِرَ عَلَیۡهِ فَنَادَىٰ فِی ٱلظُّلُمَـٰتِ أَن لَّاۤ إِلَـٰهَ إِلَّاۤ أَنتَ سُبۡحَـٰنَكَ إِنِّی كُنتُ مِنَ ٱلظَّـٰلِمِینَ○ فَٱسۡتَجَبۡنَا لَهُۥ وَنَجَّیۡنَـٰهُ مِنَ ٱلۡغَمِّۚ وَكَذَ ٰلِكَ نُـۨجِی ٱلۡمُؤۡمِنِینَ○ (سورة الأنبياء: 88-87)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(யூனுஸ் நபியாகிய) துன்னூன் (அலை) அவர்கள் மீனின் வயிற்றில் இருந்த போது செய்த பிரார்த்தனையாவது:
(கருத்து: "(இறைவா!) உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நானோ அநியாயக் காரர்களில் ஒருவனாகி விட்டேன்.")
எந்தவொரு முஸ்லிமான மனிதரும் எந்தவொரு விடயத்திற்காகவும் இந்த துஆவை ஓதிப் பிரார்த்தித்தால், அல்லாஹ் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை."
● அறிவிப்பவர்:
ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரலி)
● ஆதாரம்:
திர்மிதீ (3505)
அஹ்மத் (1462)
ஹாகிம் (1886)
நஸாஈ: ஸுனனுல் குப்ரா (10417)
பைஹகீ: தஅவாதுல் கபீர் (187)
பஸ்ஸார் (1163)
இப்னு அபீ ஸமீன்: தஃப்ஸீருல் குர்ஆன் (3/158)
● ஹதீஸின் தரம்:
இமாம் அல்பானி: ஸஹீஹ்
இமாம் ஷுஐபுல் அர்னஊத்: ஸஹீஹ்
இமாம் ஹாகிம்: ஸஹீஹ்
இமாம் அப்துல் ஹக் இஷ்பீலி: ஸஹீஹ்
இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி: ஹஸன்
"உங்களில் ஒருவருக்கு உலக வாழ்க்கையின் துன்பமோ, பேரிடரோ ஏற்பட்டால், அதை ஓதி அல்லாஹ் அவரது துன்பத்தை நீக்கும் ஒரு விடயத்தை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா?
அதுதான் (யூனுஸ் நபியாகிய) துன்னூன் (அலை) அவர்களின்
"லா இலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினழ் ழாலிமீன்" என்ற துஆவாகும்."
(கருத்து: "(இறைவா!) உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நானோ அநியாயக் காரர்களில் ஒருவனாகி விட்டேன்.")
● அறிவிப்பவர்:
ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரலி)
● ஆதாரம்:
நஸாஈ: ஸுனனுல் குப்ரா (10416)
பைஹகீ: தஅவாதுல் கபீர் (186)
ஹாகிம் (3444)
இப்னு அபித் துன்யா: பரஜ் பஃதஷ் ஷித்தா (33)
● ஹதீஸின் தரம்:
இமாம் அல்பானி: ஸஹீஹ்
இமாம் ஸுயூதி: ஸஹீஹ்
இமாம் அப்துல் ஹக் இஷ்பீலி: ஸஹீஹ்
இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி: ஹஸன்
No comments:
Post a Comment