● ● *What Islam orders a Muslim to behave in a multicultural community* ● ●
■ *What is the basic belief of Muslims?*
Say, (O Muhammad!): *“The truth is that Allah is One.* Allah is Besought of all, needing none. *He neither begot anyone, nor was he begotten.* And equal to Him has never been any one.”
(Al Quran: 112:1-4)
(நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: *அல்லாஹ் ஒருவன்தான்.*
(அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.)
*அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.* (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை; சந்ததியுமில்லை.)
(தவிர) அவனுக்கு ஒப்பாகவும் (நிகராகவும்) ஒன்றுமில்லை. (அல் குர்ஆன்: 112:1-4)
■ *Muslims cant force Non Muslims to follow the belief of Muslims*
*There is no compulsion in Faith.* The correct way has become distinct from the erroneous. (Al Quran: 2:256)
*(இஸ்லாம்) மார்க்கத்தில் நிர்ப்பந்தமேயில்லை.* ஏனென்றால் வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி (அடைவது எப்படியென) தெளிவாகி விட்டது. (அல் குர்ஆன்: 2:256)
■ *Islam allows freedom of choice*
Say (O Muhammad!): "O disbelievers in Islam! I worship not that which you worship. Nor will you worship that which I worship. And I shall not worship that which you are worshipping. Nor will you worship that which I worship. *To you be your religion, and to me my religion.*" (Al Quran: 109:1-6)
(நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே!
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை. (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர். *உங்களது மார்க்கம் உங்களுக்கு; என்னுடைய மார்க்கம் எனக்கு.*
(அல் குர்ஆன்: 109:1-6)
■ *Islam says not to scold other religions*
*Do not revile those whom they invoke other than Allah*, lest they should revile Allah in transgression without having knowledge. (Al Quran: 6:108)
*(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (தெய்வம் என) அழைக்கிறார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள்.* அதனால், அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். (அல் குர்ஆன்: 6:108)
■ *Islam says to do good, help & support to Non Muslims*
Allah does not forbid you as regards those who did not fight you on account of faith, and did not expel you from your homes, *that you do good to them, and deal justly with them.* Surely Allah loves those who maintain justice. (Al Quran: 60:8)
(நம்பிக்கையாளர்களே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், *நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை.* நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பான். (அல் குர்ஆன்: 60:8)
■ *Islam says not help Non Muslims in sin and aggression*
Help each other in righteousness and piety, and *do not help each other in sin and aggression.* (Al Quran: 5:2)
மேலும், நன்மைக்கும் அல்லாஹ்வுடைய இறையச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். *பாவத்திற்கும் அத்துமீறுவதற்கும் (அநியாயத்திற்கும்) நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம்.* (அல் குர்ஆன்: 5:2)
Islamic Articles and Islamic Health Related Articles...
December 25, 2024
What Islam orders a Muslim to behave in a multicultural community
Subscribe to:
Post Comments (Atom)
-
எட்டாவது பாடம் ஈமான் என்றால் என்ன ? (A) ஈமானுக்கான வரைவிலக்கணம் v ஈமானின் குறிப்பான வரைவிலக்கணம் · ஈமான் = ...
-
அரபு மொழியின் முக்கியத்துவம் உணரப்படாதது சமுதாயத்தின் பெரும் குறையாகும். மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம் இபாதத் ஆகும். ...
-
பதினோறாவது பாடம் ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் எமது வாழ்வில் உண்டாகுவற்கான ஈமானுடைய முதாகராவின் இரண்டாவது படிநிலை - (i) (A) ஸ...
No comments:
Post a Comment