▪அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்திற்குள் சீர்திருத்தப் பணியிலே பல வகையான ஜமாஅத்துக்கள் ஈடுபட்டு வருகின்றன.
▪அவை ஒவ்வொன்றினதும் சீர்திருத்த வழிமுறைகள் வேறுபட்டிருந்த போதிலும் *வேற்றுமைக்கு மத்தியில் ஒற்றுமை* காண்பது அத்தியவசியமான ஒன்றாகும்.
▪அவற்றில் தனிச் சிறப்பியல்புகள் பலவற்றைக் கொண்ட ஒரு *தனித்துவமான,* உன்னதமான ஜமாஅத் *"தப்லீக் ஜமாஅத்"* ஆகும்.
▪அவற்றை நாம் ஒவ்வொருவரும் விளங்கி, தனது உடல், பொருள், நேரத்தை இந்த ஜமாஅத்திற்காக அர்ப்பணிப்பதுடன், மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும்.
▪அதன் பதின் மூன்று *முக்கிய தனிச் சிறப்பியல்புகளை* நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
▪அவற்றை *நினைவில் வைத்துக் கொள்வதற்கு இலகுவான முறையில்* அந்தப் பதின் மூன்றையும்
> *ஒரே வரியில்...*
> *ஒரே மூச்சில்...*
> *ஒரு பாடலாக...*
தொகுக்கப்பட்டுள்ளது.
▪அவையாவன:
*தலவுலகருத்திருந்தாயூடகறுப் பனேரப் பதஷூரன்ஜமல்*
▪அதாவது:
1. *தல* = ஒரே *"தலை"மைக்கு* கட்டுப்பட்டிருத்தல்.
2. *வுல* = *"உலக"* முழுவதிலும் வியாபித்திருத்தல்.
3. *கருத்* = *"கருத்"து* வேறுபாடுகள் முடிந்த வரை தவிர்க்கப்படுகின்றன.
4. *திருந்* = தான் *"திருந்"துவதே* முதல் நோக்கம்.
5. *தாய்* = ஒவ்வொருவரும் *"தாயி"யே.*
6. *ஊடக்* = *"ஊடக"ம்* இன்றி நேரடியாக காலடிக்கே சென்று தஃவத் கொடுத்தல்.
7. *அறுப்* = முக்கியத்துவம் கூடியவற்றுக்கே முதலிடம்: *"ஆறு"* ஸிபத்துக்களின் அடிப்படையிலேயே தஃவத் கொடுக்கப்படும்.
8. *பனேரப்* = *"பண"ம், "நேர"ம்* ஒதுக்கி தியாகம் செய்தல்.
9. *ப* = *"பள்ளி"யையே* மையமாக வைத்தல்.
10. *த* = *"த"ஷ்கீல்* எனும் சங்கிலித் தொடரான அமல்.
11. *ஷூ* = *ம"ஷூ"ரா,* கார்குசாரி, தர்ஃகீப் போன்ற திட்டமிடல், நெறிப்படுத்தல்.
12. *ர* = ஜோடு, ஜும்மே *"ரா"த்* போன்ற ஒன்றுகூடல்.
13. *அன்ஜமல்* = *"ஐந்து அமல்"* செயல் திட்டம்.
ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ
صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ
நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி.(உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல. ஆமீன்!
Islamic Articles and Islamic Health Related Articles...
Subscribe to:
Post Comments (Atom)
-
எட்டாவது பாடம் ஈமான் என்றால் என்ன ? (A) ஈமானுக்கான வரைவிலக்கணம் v ஈமானின் குறிப்பான வரைவிலக்கணம் · ஈமான் = ...
-
அரபு மொழியின் முக்கியத்துவம் உணரப்படாதது சமுதாயத்தின் பெரும் குறையாகும். மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம் இபாதத் ஆகும். ...
-
பதினோறாவது பாடம் ஈமான் மற்றும் ஸாலிஹான அமல்கள் எமது வாழ்வில் உண்டாகுவற்கான ஈமானுடைய முதாகராவின் இரண்டாவது படிநிலை - (i) (A) ஸ...
No comments:
Post a Comment