November 02, 2021

ஹிஜாமா பற்றிய நபிமொழிகள் சில:

தொகுப்பு:

Dr. A.A.M. Aasir (Yasir)
MBBS (SL), SLMC Reg. No: 37890
P.A.Diploma in Cupping Therapy
General Practitioner & Cupping Therapist

1. [عن أنس بن مالك:]
إنَّ أفضلَ ما تداويتُم بِه الحجامة.
أخرجه البخاري (٥٦٩٦)، ومسلم (١٥٧٧)

1. "நிச்சயமாக நீங்கள் செய்யும் சிகிச்சைகளில் மிகவும் சிறந்தது ஹிஜாமாவாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

2. ما مررت ليلة أسري بي بملإ من الملائكة إلا كلهم يقول لي "عليك يا محمد بالحجامة" وفي رواية "يا محمد مر أمتك بالحجامة".
أخرجه الترمذي (٢٠٥٢-٢٠٥٣) وحسنه، وابن ماجة (٣٤٧٩-٣٤٧٧)؛ صححه الألباني.

2. "நான் மிஃராஜ் பயணத்தின் பொழுது மலக்குமார்களின் கூட்டங்களைக் கடக்கும் பொழுதெல்லாம் “முஹம்மதே! ஹிஜாமாவைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்லப்பட்டே அன்றி கடக்கவில்லை. மற்றொரு அறிவிப்பில் "முஹம்மதே! உமது உம்மத்துக்கு ஹிஜாமாவை ஏவுங்கள்!" என்று சொல்லப்பட்டே அன்றி கடக்கவில்லை" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூற்கள்: திர்மிதீ, இப்னுமாஜா; ஹதீஸின் தரம்: இமாம் திர்மிதீ: ஹசன்; ஷைக் அல்பானி: ஸஹீஹ்)

3. [عن أبي هريرة:]
من احتجمَ لسبعَ عشرةَ وتسعَ عشرةَ وإحدى وعشرينَ كان شفاءً من كلَِّ داءِ.
أخرجه أبو داود (٣٨٦١)، والطبراني في «المعجم الأوسط» (٦٦٢٢)، والحاكم (٧٤٧٥).
قال النووي (المجموع ٩‏/٦٢): إسناده حسن على شرط مسلم؛ وقال الشوكاني (الدراري المضية ٣٥٤): لا بأس بإسناده؛ وقال الألباني (التعليقات الرضية ١٥٧‏/٣): إسناده حسن، صحيح لغيره.

3. "எவரொருவர் பிறை பதினேழு, பத்தொன்பது, இருபத்தொன்றில் ஹிஜாமா செய்வாரோ அது அவருக்கு எல்லா நோய்களுக்கும் நிவாரணியாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூற்கள்: அபூதாவுத், தபரானி, ஹாகிம்; ஹதீஸின் தரம்: இமாம் நவவி: ஹசன்; இமாம் ஷவ்கானி: ஆதாரபூர்வமானது; ஷைக் அல்பானி: ஸஹீஹ்)

4. [عن أنس بن مالك:]
كان رسولِ اللَّهِ ﷺ يَحْتَجِمُ في الأَخْدَعَيْنِ والكاهِلِ، وكان يَحْتَجِمُ لِسبعَ عشرَةَ، وتِسْعَ عشرَةَ، وإِحْدى وعشرينَ.
السلسلة الصحيحة (٩٠٨): أخرجه أبو داود (٣٨٦٠)، وابن ماجه (٣٤٨٣)، وأحمد (١٢١٩١)، والترمذي (٢٠٥١).
قال الألباني: صحيح على شرط الشيخين.

4. "நபி (ஸல்) அவர்கள் காதின் பின்புறமுள்ள கழுத்தின் இரு பக்கங்களிலும், கழுத்துக்கும் முதுகுக்கும் இடைப்பட்ட பகுதியிலும் ஹிஜாமா செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். மேலும் பிறை பதினேழு, பத்தொன்பது, இருபத்தொன்றில் ஹிஜாமா செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்."
(நூற்கள்: அபூதாவுத், இப்னுமாஜா, அஹ்மத், திர்மிதீ; ஹதீஸின் தரம்: ஷைக் அல்பானி: ஸஹீஹ்)

5. [عن سلمى:]
ما كانَ أحدٌ يَشتَكي إلى رسولِ اللَّهِ ﷺ وجعًا في رأسِهِ إلّا قالَ: احتجِم...
صحيح أبي داود (٣٨٥٨)، حسنه الألباني.

5. "எவரேனும் ஒருவர் தனது தலைவலியைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையீடு செய்யும் பொழுதெல்லாம் அவருக்கு ஹிஜாமா செய்யுமாறே நபி (ஸல்) அவர்கள் ஏவுவார்கள்."
(நூல்: அபூதாவுத்; ஹதீஸின் தரம்: ஷைக் அல்பானி: ஹசன்)

6. [عن عبدالله بن عمر:]
الحِجامةُ على الرِّيقِ فيها شفاءٌ وبركةٌ...
ابن جرير الطبري [مسند ابن عباس (١‏/٥١١)]: إسناده صحيح؛ أخرجه ابن ماجة (٣٤٨٧)، وابن حبان في «المجروحين» (٢/ ١٠٠)، والحاكم (٧٤٨١).

6. "வெறும் வயிற்றில் ஹிஜாமா செய்வதானது நோய் நிவாரணியும், பரகத்தும் ஆகும்...." என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூற்கள்: இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், ஹாகிம்; ஹதீஸின் தரம்: இமாம் இப்னு ஜரீர் அத்தபரீ: ஸஹீஹ்)

7. [عن عبدالله بن عمر:]
الحِجامةُ على الرِّيقِ أمثلُ، وَهيَ تزيدُ في العقلِ، وتزيدُ في الحِفظِ، وتزيدُ الحافِظَ حفظًا...
أخرجه ابن ماجة (٣٤٨٧ )، وابن عدي في «الكامل» (٣/١٤١)، والحاكم (٨٢٥٥)، والبزار (٥٩٦٨)؛ حسنه الألباني.

7. "வெறும் வயிற்றில் ஹிஜாமா செய்வதானது மிகவும் சிறந்ததாகும். அது புத்திகூர்மையையும், மனன சக்தியையும் அதிகரிக்கச் செய்யும். மனனம் செய்யக்கூடிய ஒருவருக்கு அவரது மனன சக்தியை அதிகரிக்கச் செய்யும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூற்கள்: இப்னுமாஜா, இப்னு அதீ, ஹாகிம், பஸ்ஸார்; ஹதீஸின் தரம்: ஷைக் அல்பானி: ஹசன்)

8. [عن عبدالرحمن بن أبي ليلى:]
احتجمَ النَّبيُّ ﷺ على رأسِهِ بقرنٍ حينَ طُبَّ.
أخرجه أبو عبيد في «غريب الحديث» (٢/٤٣)، وأورده ابن حجر في «فتح الباري» (١٠/٢٣٩) عنه، قال ابن حجر: مرسل.

8. நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட பொழுது தலையில் ஹிஜாமா செய்து கொண்டார்கள்.
(நூல்: பத்ஹுல் பாரி)


குறிப்பு:
● ஹிஜாமா பற்றிய மார்க்க ரீதியான மற்றும் மருத்துவ ரீதியான தெளிவுகளைப் பெற விரும்புபவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.

● இச் சிகிச்சையை எமது சிகிச்சை நிலையத்தில் பெற விரும்புபவர்கள் முற்கூட்டியே பதிவு செய்து கொள்ளவும்.

Dr. A.A.M. Aasir (Yasir)
MBBS (SL), SLMC Reg. No: 37890
P.A.Diploma in Cupping Therapy
General Practitioner & Cupping Therapy

Dr.Yasir Clinic Center,
புல்மோட்டை-03.
Mobile: 077 6470252, 071 1255075
2021.11.02