October 08, 2021

நீண்டகால நோய்களுக்கு ஓர் அற்புத நிவாரணி - ஹிஜாமா!

ஹிஜாமா என்றால் என்ன?


தோலின் குறிப்பிட்ட சில இடங்களில் இலேசாகக் கீறி, வெற்றிடம் உருவாக்கப்பட்ட Cup களை அவ்விடங்களில் வைத்து, இரத்தத்திலும், சிற்றிடைவெளிப் பாய்மத்திலும் தேங்கி உள்ள நச்சுக் கழிவுகளை உறிஞ்சி வெளியேற்றும் சிகிச்சை முறையை "ஹிஜாமா" (Hijamah Therapy) என்று யூனானி மருத்துவத்திலும், "ஈரக் கப்பிங்" (Wet Cupping Therapy) என்று சீன பாரம்பரிய மருத்துவத்திலும் அழைக்கப்படும்.

ஐயாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த இச் சிகிச்சை முறையானது எவ்வாறு ஓர் அற்புத நோய் நிவாரணியாகச் செயற்படுகின்றது என்பதற்கான நிறுவப்பட்ட விஞ்ஞான அடிப்படைகள் உள்ள அதே வேளை, இன்று பல்வேறு நாடுகளில், குறிப்பாக சீனா, யப்பான் போன்ற நாடுகளிலும், இந்தோனேசியா, மலேசியா, மத்திய கிழக்கு உள்ளடங்கிய முஸ்லிம் உலக நாடுகளிலும் பிரதான சிகிச்சை முறைகளுள் ஒன்றாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஹிஜாமா பற்றிய நபிமொழிகள் சில

நபி (ஸல்) அவர்கள் பல தடவைகள் ஹிஜாமாவின் மூலம் சிகிச்சை பெற்றது மாத்திரமன்றி அதன் பிரயோசனங்களைப் பற்றி மக்களுக்கு உபதேசமும் செய்துள்ளார்கள்.

"நிச்சயமாக நீங்கள் செய்யும் சிகிச்சைகளில் மிகவும் சிறந்தது ஹிஜாமாவாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: புகாரி: 5696, முஸ்லிம்: 1577)

"நான் மிஃராஜ் பயணத்தின் போது மலக்குமார்களின் கூட்டங்களைக் கடக்கும் பொழுதெல்லாம் “முஹம்மதே! ஹிஜாமாவைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்லப்படாமல் தவிர கடக்கவில்லை. மற்றொரு அறிவிப்பில் "முஹம்மதே! உமது உம்மத்துக்கு ஹிஜாமாவை ஏவுங்கள்!" என்று சொல்லப்பட்டே அன்றி கடக்கவில்லை" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: திர்மிதீ: 2052-3, இப்னுமாஜா: 3477-9; ஹதீஸின் தரம்: இமாம் திர்மிதீ: ஹசன்; ஷைக் அல்பானீ: ஸஹீஹ்)

நீண்டகால நோய்கள் எவ்வாறு ஏற்படுகின்றன?

நம் சூழலிலுள்ள மாசடைந்த காற்று, கதிர்வீச்சுக்கள், முறைகேடான, இரசாயனங்கள் கலந்த உணவுகள், பானங்கள், மருந்துகள், போதை வஸ்துக்கள், மன அழுத்தம், மனச் சோர்வு, பதட்டம், ஆரோக்கியமற்ற தூக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற இன்னோரன்ன பல காரணங்களினால் எமது இரத்தத்திலும், சிற்றிடைவெளிப் பாய்மத்திலும் நச்சுக் கழிவுகள் தேங்கி, எமது உடலின் இழையங்கள், அங்கங்களை பலவீனமடையச் செய்து, வலிகள், வீக்கம், காய்ச்சல், குமட்டல், வாந்தி, பசியின்மை, சோர்வு, தூக்கக் கோளாறு போன்ற இன்னோரன்ன பல நோயறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன.

இந் நச்சுக் கழிவுகள் எமது உடலிலிருந்து வெளியேற்றப்படாவிட்டால், மென் மேலும் கழிவுகள் பெருகி, அவை காலப் போக்கில் எமது உடலின் இழையங்கள், அங்கங்களை மென் மேலும் பலவீனமடையச் செய்து,

1. மூட்டு வாதம், தசைமூட்டு வாதம் (Rheumatoid/ Osteo/ Gouty Arthritis, Polymyalgia Rheumatica, Fibromyalgia)
2. முதுகு வலி, கழுத்து வலி, இடுப்பு கீழ் வாதம், மணிக்கட்டு வியாதி (Lumbago, Cervical Spondylosis, Sciatica, Carpal Tunnel Syndrome)
3. நரம்பு வலி, விறைப்பு (Herpes Zoster, Trigeminal Neuralgia, Numbness)
4. தலைவலி, மறதி வியாதி, தூக்க வியாதி, நித்திரையின்மை (Headache, Migraine, Dementia, Hypersomnia, Insomnia)
5. மாதவிடாய்ப் பிரட்சினைகள், மலட்டுத் தன்மை (Menstrual Problems, Endometriosis, Subfertility)
6. தோல் வியாதிகள், முகப் பரு, முடி உதிர்தல் (Eczema, Dermatitis, Psoriasis, Cellulitis, Acne, Hair fall, Alopecia)
7. பாத வெடிப்பு, குதிகால் வலி, வரிகோசு நாளம் (Foot Cracks, Plantar Fasciitis, Varicose veins)
8. நீரிழிவு, தாழ்/உயர் இரத்த அழுத்தம், மிகை கொலஸ்ட்ரோல், தைரொய்ட்டு வியாதி

போன்ற இன்னோரன்ன பல நீண்டகால நோய்கள் உருவாக அடிப்படைக் காரணமாக மாறுகின்றன.

ஹிஜாமாவின் மூலம் குணப்படுத்த முடியுமான நோய்கள்

நச்சுக் கழிவுகளை எமது உடலிலிருந்து வெளியேற்றுவதன் மூலம் மேலே குறிப்பிடப்பட்டவை போன்ற அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்த அல்லது கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு நச்சுக் கழிவுகளை எமது உடலிலிருந்து வெளியேற்றுவதில் ஏனைய சிகிச்சைகளை விட ஹிஜாமாவுக்கே தனித்துவமானதும், முதன்மையானதுமான பங்களிப்பு உண்டு. ஹிஜாமாவுடன் ஏனைய சிகிச்சைகளை இணைத்துச் செய்வதானது, ஏனைய சிகிச்சைகளை தனியே செய்வதனை விட வினைத்திறன் மிக்கதாகும் என்பது பல ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்ட விடயமாகும்.

ஹிஜாமாவை நோய்வாய்ப்பட்டவர்கள் மாத்திரமன்றி, நோயற்றவர்கள் கூட மூன்று தொடக்கம் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை செய்து கொள்வது, நோய்த் தடுப்புக்கான மிகச் சிறந்த முன்னேற்பாடாகும்.

ஹிஜாமாவினால் எமது உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்

1. உடலினுள்ளே இருந்து நச்சுக் கழிவுகள், மேலதிக இரத்தம், மேலதிக சூடு என்பன வெளியேற்றப்படும்.
2. இரத்தத் தேக்கத்தைக் குறைத்து, இரத்தோட்டத்தையும், இரத்த உற்பத்தியையும் சீராக்கும்.
3. இழையங்களின் அழற்சியைக் குறைத்து, ஈரல், இதயம், சிறுநீரகம் போன்ற உள்ளங்கங்களின் வினைத்திறனைக் கூட்டும்.
4. சகல விதமான வலிகள் மற்றும் வாதங்களைக் குறைக்கும்.
5. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதோடு, காயங்களை விரைவில் குணமடையவும் செய்யும்.
6. களைப்பைக் குறைத்து, மூளைக்கு உற்சாகத்தை வழங்குவதோடு, ஆரோக்கியமான தூக்கத்துக்கும் வழிவகுக்கும்.
7. புத்தி கூர்மையையும், ஞாபக சக்தியையும் கூட்டும்.
8. சீனி, பிரசர், கொலஸ்ட்ரோல் அளவைக் கட்டுப்படுத்தும்.
9. கண் திருஷ்டி மற்றும் சூனியத்தின் பாதிப்புக்களைக் குணப்படுத்தும்.

நபி (ஸல்) அவர்கள் சூனியத்தினால் பாதிக்கப்பட்ட போது தலையில் ஹிஜாமா செய்து கொண்டார்கள் என்றும் ஹிஜாமாவானது சூனியத்தின் பாதிப்புக்களுக்கான ஒரு சிகிச்சை முறையாகும் என்றும் நபிவழி மருத்துவ மாமேதை இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் ஸாதுல் மஆத் (4/125) என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட தகவல்களுக்கான ஆதாரங்கள் மற்றும் தெளிவுகளைப் பெற விரும்புபவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளலாம். இச் சிகிச்சையை எமது சிகிச்சை நிலையத்தில் பெற விரும்புபவர்கள் முற்கூட்டியே பதிவு செய்து கொள்ளவும்.

Dr. A.A.M.Aasir (Yasir)
MBBS (SL), SLMC Reg. No: 37890
P.A.Diploma in Cupping Therapy
General Practitioner & Cupping Therapist

Dr.Yasir Clinic Center,
பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில்,
பிர்தவ்ஸ் ஹொடலுக்கு எதிராக,
புல்மோட்டை-03.
Mobile: 077 6470252, 071 1255075
2021.10.07