*விடைபெறும் பொழுது பிரயாணிக்கு ஓத வேண்டிய துஆ*
أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيمَ عَمَلِكَ
“உமது மார்க்கத்தையும், உம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளையும், உமது செயல்களின் இறுதி நிலையையும் அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன்.”
"I leave your religious commitment in the care of Allah, as well as what you leave behind [of family and wealth], and the last of your deed."
زَوَّدَكَ اللَّهُ التَّقْوَى، وَغَفَرَ ذَنْبَكَ، وَيَسَّرَ لَكَ الْخَيْرَ حَيْثُمَا كُنْتَ
"அல்லாஹ் உமக்கு தக்வாவை பயணத் துணையாக வழங்குவானாக! உமது பாவங்களை மன்னிப்பானாக! நீர் எங்கிருந்தாலும் உமக்கு நன்மையான காரியங்களை எளிதாக்குவானாக!"
"May Allah supply you with piety. may He forgive your sin. May He make good easy for you wherever you may be."
*விடைபெறும் பொழுது பிரயாணி வீட்டிலுள்ளோருக்கு ஓத வேண்டிய துஆ*
أَسْتَوْدِعُكم اللَّهَ الَّذِي لَا تَضِيعُ وَدَائِعُهُ
“எவனிடம் ஒப்படைக்கப்படும் அமானிதங்கள் ஒருபோதும் வீணாகிவிடாதோ அத்தகைய அல்லாஹ்விடம் உங்களை ஒப்படைக்கிறேன்.”
"I leave you in the care of Allah, in Whose care nothing is lost."
*வீடு திரும்பும் பொழுது ஓத வேண்டிய துஆ*
آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ
“நாங்கள் (பயணத்திலிருந்து) திரும்புபவர்களாகவும், பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும், வணக்கத்தில் ஈடுபடுபவர்களாகவும், எங்கள் இறைவனைப் புகழ்பவர்களாகவும் இருக்கிறோம்.”
"We are those who return, repent, worship, and praise our Lord."
الْمَصْدَرُ: حِصْنُ الْمُسْلِمِ
நூல்: ஹிஸ்னுல் முஸ்லிம்
Reference: Hisnul Muslim
No comments:
Post a Comment