November 03, 2026

ஒரு பாவத்தை விடுவது ஆயிரம் ரக்அத்துக்கள் தஹஜ்ஜுத் தொழுவதை விட மேலானது.تَرْكُ مَعْصِيَةٍ وَاحِدَةٍ أَفْضَلُ مِنْ أَدَاءِ أَلْفِ رَكْعَةٍ مِنْ صَلَاةِ التَّهَجُّدِ Abandoning a single sin is better than performing a thousand rak‘ahs of Tahajjud.

இஸ்மாயில் ஹஜ்ரத் (அக்குரனை) (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"ஒரு பாவத்தை விடுவது ஆயிரம் ரக்அத்துக்கள் தஹஜ்ஜுத் தொழுவதை விட மேலானது"

இதற்கான விளக்கத்தை சற்று விரிவாகப் பார்ப்போம்.

قَالَ إِسْمَاعِيلُ حَضْرَةُ (أَكُورَنَة) رَحِمَهُ اللهُ
تَرْكُ مَعْصِيَةٍ وَاحِدَةٍ أَفْضَلُ مِنْ أَدَاءِ أَلْفِ رَكْعَةٍ مِنْ صَلَاةِ التَّهَجُّدِ
لِنَتَنَاوَلْ شَرْحَ هَذَا الْمَوْضُوعِ بِشَيْءٍ مِنَ التَّفْصِيلِ

Ismail Hazrath (Akurana) (RA) said:

"Abandoning a single sin is better than performing a thousand rak‘ahs of Tahajjud." 

Let us explore the explanation of this topic in a little more detail.

:ذُنُوبٌ تُحَوِّلُ الْحَسَنَاتِ الَّتِي كَالْجِبَالِ إِلَى هَبَاءٍ مَنْثُورٍ

عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللهِ ﷺ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ

لَأَعْلَمَنَّ أَقْوَامًا مِنْ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ بِحَسَنَاتٍ أَمْثَالِ جِبَالِ تِهَامَةَ بِيضًا، فَيَجْعَلُهَا اللَّهُ عَزَّ وَجَلَّ هَبَاءً مَنْثُورًا
قَالَ ثَوْبَانُ: يَا رَسُولَ اللَّهِ، صِفْهُمْ لَنَا، جَلِّهِمْ لَنَا، أَنْ لَا نَكُونَ مِنْهُمْ وَنَحْنُ لَا نَعْلَمُ
قَالَ: أَمَا إِنَّهُمْ إِخْوَانُكُمْ، وَمِنْ جِلْدَتِكُمْ، وَيَأْخُذُونَ مِنَ اللَّيْلِ كَمَا تَأْخُذُونَ، وَلَكِنَّهُمْ أَقْوَامٌ إِذَا خَلَوْا بِمَحَارِمِ اللهِ انْتَهَكُوهَا

رَوَاهُ ابْنُ مَاجَهْ (٤٢٤٥) وَالطَّبَرَانِيُّ فِي الْأَوْسَطِ (٤٦٣٢) وَالرُّويَانِيُّ
فِي مُسْنَدِهِ (٦٥١)
وَصَحَّحَهُ الْأَلْبَانِيُّ وَالْبُوصِيرِيُّ، وَحَسَّنَهُ الْوَادِعِيُّ، وَقَالَ الْمُنْذِرِيُّ وَالْهَيْتَمِيُّ الْمَكِّيُّ: رُوَاتُهُ ثِقَاتٌ

மலைகளைப் போன்ற நன்மைகளையும் சிதறடிக்கப்பட்ட தூசியாக்கிவிடும் பாவங்கள்

தவ்பான் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது, அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

“எனது உம்மத்தில் சிலர் மறுமை நாளில் திஹாமா மலைகளைப் போன்ற வெண்மையான நன்மைகளுடன் வருவார்கள் என்பதை நான் நிச்சயமாக அறிவேன். ஆனால், மகத்துவமும் கண்ணியமும் மிக்க அல்லாஹ் அந்த நன்மைகளைச் சிதறடிக்கப்பட்ட தூசியாக ஆக்கிவிடுவான்.”

இதைக் கேட்ட தவ்பான் (ரழி) அவர்கள்:

“அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார் என்பதை எங்களுக்கு விவரித்துக் கூறுங்கள். அவர்களைப் பற்றித் தெளிவாக விளக்குங்கள். நாங்கள் அறியாமலேயே அவர்களில் ஒருவராக ஆகிவிடக்கூடாது” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

“அவர்கள் உங்களுடைய சகோதரர்களே; உங்களுடைய இனத்தைச் சேர்ந்தவர்களே. நீங்கள் இரவில் (வணக்க வழிபாடுகளில்) ஈடுபடுவதைப் போன்றே அவர்களும் ஈடுபடுவார்கள். ஆனால், அவர்கள் தனிமையில் இருக்கும் போது அல்லாஹ் தடை செய்தவற்றை மீறக் கூடியவர்களாக இருப்பார்கள்."

நூற்கள்: இப்னு மாஜா, தபரானி, ருயானி.

இமாம் அல்-அல்பானி மற்றும் இமாம் அல்-பூஸீரி ஆகியோர் இந்த ஹதீஸை ஸஹீஹ் எனத் தரப்படுத்தியுள்ளனர். அதேவேளை, இமாம் அல்-வாதிஈ அவர்கள் இதனை ஹஸன் எனத் தரப் படுத்தியுள்ளார்கள். மேலும், இமாம் அல்-முன்திரி மற்றும் இமாம் அல்-ஹைதமீ அல்-மக்கீ ஆகியோர் இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Sins That Turn Good Deeds Like Mountains into Scattered Dust

Thawban (RA) narrated: The Messenger of Allah ﷺ said:

“I certainly know people from my Ummah who will come on the Day of Resurrection with good deeds like the white mountains of Tihamah. Yet Allah, the Almighty and Majestic, will turn those deeds into scattered dust.”

Thawban (RA) asked:

“O Messenger of Allah! Describe them to us and explain their characteristics clearly, so that we do not unknowingly become among them.”

The Prophet ﷺ replied:

“Indeed, they are your brothers and belong to your own people. They perform acts of worship during the night just as you do. However, they are people who, when they are alone and away from others, violate the sacred limits set by Allah.”

Reported by Ibn Majah, Al-Tabarani, Al-Ruyani.

Imam al-Albani and Imam al-Busiri graded the hadith as Sahih, whereas Imam al-Wadi‘i graded it as Hasan. Imam al-Mundhiri and Imam al-Haytami al-Makki further stated that its narrators are trustworthy.

فترك المعاصي مع فعل القليل من النوافل، أفضل من الإكثار من النوافل؛ فإن ترك المعصية حتم واجب، بخلاف النوافل، فهي مستحبة

ஹராமான பாவங்களைத் தவிர்த்துக்கொண்டு, குறைவான நஃபிலான வணக்கங்களைச் செய்வதே, அதிகமான நஃபிலான வணக்கங்களைச் செய்வதைவிடச் சிறந்ததாகும்.

ஏனெனில், பாவங்களைத் தவிர்ப்பது கட்டாயக் கடமையாகும். ஆனால் நஃபிலான வணக்கங்களோ விரும்பத்தக்க (முஸ்தஹப்) செயல்களாகும்.

Abstaining from sins while performing a few voluntary acts of worship is better than performing an abundance of voluntary acts of worship, because abstaining from sins is an obligatory duty, whereas voluntary acts of worship are recommended.

قال الحافظ ابن رجب في جامع العلوم والحكم
قوله صلى الله عليه وسلم

إِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ، وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ
[أخرجه البخاري (٧٢٨٨) ومسلم (١٣٣٧)]

قال بعض العلماء: هذا يؤخذ منه أن النهي أشدّ من الأمر؛ لأن النهي لم يرخّص في ارتكاب شيء منه، والأمر قيّد بحسب الاستطاعة، وروي هذا عن الإمام أحمد

ஹாபிழ் இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் தனது ஜாமிஉல் உலூமி வல் ஹிகம் என்ற நூலில் கூறுகிறார்கள்:
நபி ﷺ அவர்கள் கூறிய,

"நான் உங்களுக்கு ஒரு விஷயத்தைத் தடை செய்தால், அதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஒரு விஷயத்தைச் செய்யுமாறு உங்களுக்குக் கட்டளையிட்டால், உங்களால் இயன்ற அளவு அதைச் செய்யுங்கள்."
(நூற்கள்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

என்ற ஹதீஸிலிருந்து சில அறிஞர்கள் பின்வரும் கருத்தைப் பெற்றுள்ளார்கள்:

"ஒரு விஷயத்தைத் தடை செய்வது, ஒரு விஷயத்தை ஏவுவதைவிடக் கடுமையானதாகும். ஏனெனில், தடுக்கப்பட்ட ஒரு காரியத்தைச் செய்வதற்கு எந்தவிதமான சலுகையும் வழங்கப்படவில்லை. ஆனால் ஏவப்பட்ட ஒரு காரியத்தைச் செய்வது இயலுமையின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது."

இந்தக் கருத்து இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப் பட்டுள்ளது.

Al-Hafiz Ibn Rajab (RA) said in Jāmiʿ al-ʿUlūm wa al-Ḥikam:

Regarding the saying of the Prophet ﷺ:

“When I forbid you from something, then avoid it; and when I command you to do something, then do as much of it as you are able.”
(Reported by al-Bukhari and Muslim)

Some scholars said:
“This indicates that prohibitions are more serious than commands, because no concession was given to commit any part of what has been prohibited, whereas commands were restricted according to one's ability."

This was also narrated from Imam Ahmad (RA).

ويشبه هذا قول بعضهم
أعمال البِرّ يعملها البَرّ، والفاجر، وأما المعاصي، فلا يتركها إلا صدّيق

இதைப் போன்றே சில அறிஞர்கள் கூறியுள்ளார்கள்:
நல்லறங்களை நல்லவர்களும் செய்யலாம்; பாவிகளும் செய்யலாம். ஆனால் பாவங்களை விட்டுவிடுவது உண்மையான இறையச்சமுடையவர்களால் மட்டுமே சாத்தியமாகும்.

This resembles the saying of some scholars:

“Acts of righteousness are performed by both the righteous and the wicked; but as for sins, none abstains from them except a ṣiddīq (a person of exceptional truthfulness and sincerity).”

وروي عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال له: اتَّقِ الْمَحَارِمَ تَكُنْ أَعْبَدَ النَّاسِ

[أخرجه الترمذي (٢٣٠٥) وأحمد (٨٠٩٥) وابن ماجه (٤٢١٧)؛ حسنه الحافظ ابن حجر العسقلاني والألباني والأرنؤوط وصححه أحمد شاكر]

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் வழியாக நபி ﷺ அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது:

"ஹராமானவற்றைத் தவிர்த்துக்கொள்; அப்போது மக்களில் மிகச் சிறந்த வணக்கசாலியாக நீ இருப்பாய்."

[நூற்கள்: திர்மிதி, அஹ்மத், இப்னு மாஜா; ஹாஃபிழ் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி, அல்-அல்பானி மற்றும் அல்-அர்னாஊத் ஆகியோர் இதனை ஹஸன் எனத் தரப்படுத்தியுள்ளனர். இமாம் அஹ்மத் ஷாகிர் அவர்கள் இதனை ஸஹீஹ் எனத் தரப்படுத்தியுள்ளார்.]

It was narrated from Abu Hurayrah (RA), that the Prophet ﷺ said to him:

“Avoid the forbidden things, and you will be the most devoted of people in worship.”

[Reported by al-Tirmidhi, Ahmad, and Ibn Majah; It was graded Hasan by al-Hafiz Ibn Hajar al-Asqalani, al-Albani, and al-Arna'ut, and graded Sahih by Ahmad Shakir.]

وقالت عائشة رضي الله عنها
مَنْ سَرَّهُ أَنْ يَسْبِقَ الدَّائِبَ الْمُجْتَهِدَ، فَلْيَكُفَّ عَنِ الذُّنُوبِ [فَإِنَّكُمْ لَنْ تَلْقَوُا اللَّهَ بِشَيْءٍ خَيْرٍ لَكُمْ مِنْ قِلَّةِ الذُّنُوبِ]
[رواه ابن المبارك في الزهد]

وروي عنها مرفوعًا [: مَنْ سَرَّهُ أَنْ يَسْبِقَ الدَّائِبَ الْمُجْتَهِدَ، فَلْيَكُفَّ عَنِ الذُّنُوبِ]
[أخرجه ابن أبي الدنيا وأبو يعلى والخرائطي وضعفه الألباني]

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

"தொடர்ந்து முயற்சி செய்து வணக்கங்களில் ஈடுபடுபவரை முந்திச் செல்ல விரும்புபவர், பாவங்களை விட்டும் தன்னைத் தடுத்துக் கொள்ளட்டும். [ஏனெனில், பாவங்கள் குறைவாக இருப்பதை விட அல்லாஹ்வை சந்திப்பதற்கு உமக்குச் சிறந்ததாக வேறு எதுவும் இருக்க முடியாது.]"

[நூல்: இப்னுல் முபாரக் அவர்களின் அஸ்-ஸுஹ்த்]

இது ஆயிஷா (ரழி) அவர்களிடமிருந்து நபி ﷺ அவர்களுக்குத் தொடர்பு படுத்தியும் அறிவிக்கப் பட்டுள்ளது.
[நூற்கள்: இப்னு அபித் துன்யா, அபூ யஃலா மற்றும் அல்-கராயிதீ]

Aishah (RA) said:
“Whoever wishes to surpass the one who constantly strives hard in worship, let him refrain from sins. [For you will never meet Allah with anything better for you than having few sins.]”
[Reported by Ibn al-Mubarak in Al-Zuhd]

It was also narrated from her as a narration attributed to the Prophet ﷺ.
[Reported by Ibn Abi al-Dunya, Abu Ya‘la, and al-Khara’iti]

وقال الحسن
مَا عَبَدَ الْعَابِدُونَ بِشَيْءٍ أَفْضَلَ مِنْ تَرْكِ مَا نَهَاهُمُ اللَّهُ عَنْهُ

ஹஸன் அல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ் தடுத்தவற்றை விட்டுவிடுவதைவிடச் சிறந்த வேறெந்தச் செயலின் மூலமும் வணக்கசாலிகள் அல்லாஹ்வை வணங்கிவிட முடியாது. (அதாவது, பாவங்களை விடுவதே வணக்கங்களிலேயே மிகச் சிறந்ததாகும்)."

Al-Hasan Al Basari (RA) said:
“The worshippers have not worshipped Allah with anything better than abandoning what Allah has forbidden them from.”

والظاهر أن ما ورد من تفضيل ترك المحرمات على فعل الطاعات، إنما أريد به على نوافل الطاعات، وإلا فجنس الأعمال الواجبات أفضل من جنس ترك المحرمات؛ لأن الأعمال مقصودة لذاتها، والمحارم المطلوب عدمها؛ ولذلك لا تحتاج إلى نية، بخلاف الأعمال

ஹராமானவற்றை விட்டுவிடுவது, வணக்கங்களைச் செய்வதைவிடச் சிறந்தது என்று வந்துள்ள கருத்துக்கள், உபரியான வணக்கங்களைப் பொறுத்தவரையில்தான் கூறப்பட்டுள்ளன என்பது வெளிப்படையான கருத்தாகும்.

ஏனெனில், கடமையான செயல்களின் வகை, ஹராமானவற்றை விட்டுவிடுவதைவிடச் சிறந்ததாகும். காரணம், கடமையான செயல்கள் அவற்றைச் செய்வதற்காகவே நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் ஹராமான செயல்கள் செய்யப்படாமல் இருப்பதே நோக்கமாகும்.

அதனால்தான், பாவங்களைத் தவிர்ப்பதற்கு தனியான நிய்யத் அவசியமில்லை. ஆனால் வணக்கங்களைச் செய்வதற்கு நிய்யத் அவசியமாகும்.

Apparently, what has been reported regarding the superiority of abandoning prohibited acts over performing acts of obedience is intended to refer only to voluntary acts of obedience.

Otherwise, the category of obligatory deeds is superior to the category of abstaining from prohibited acts, because deeds are intended in themselves, whereas prohibited acts are things whose absence is sought. Therefore, abstaining from them does not require an intention, unlike performing deeds.

ويشهد لذلك قول ابن عمر رضي الله عنهما
لَرَدُّ دَانِقٍ حَرَامٍ، أَفْضَلُ مِنْ مِائَةِ أَلْفٍ تُنْفَقُ فِي سَبِيلِ اللَّهِ

இதற்கு ஆதாரமாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறிய பின்வரும் கூற்று சுட்டிக்காட்டப்படுகிறது:

"ஹராமான ஒரு (தானிக்) சிறிய நாணயத்தைத் திருப்பிக் கொடுப்பது, அல்லாஹ்வின் பாதையில் ஒரு இலட்சம் பணத்தைச் செலவிடுவதை விடச் சிறந்ததாகும்."

This is supported by the statement of Ibn Umar (RA):
“Returning a single dāniq (a small unit of money) that is unlawful is better than giving one hundred thousand (units of money) in charity in the cause of Allah.”

وعن بعض السلف قال
تَرْكُ دَانِقٍ مِمَّا يَكْرَهُهُ اللَّهُ، أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ خَمْسِمِائَةِ حَجَّةٍ

சில முன்சென்ற நல்லோர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது:

"அல்லாஹ் வெறுக்கின்ற (ஹராமான) ஒரு (தானிக்) சிறிய நாணயத் தொகையைத் துறப்பது, ஐந்நூறு ஹஜ்ஜுகளை நிறைவேற்றுவதை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்."

And it was narrated from some of the Salaf (early righteous predecessors) that they said:

“Abandoning even a single dāniq (a small unit of money) of something that Allah dislikes is more beloved to Allah than performing five hundred Hajj pilgrimages.”

وقال ميمون بن مهران
ذِكْرُ اللَّهِ بِاللِّسَانِ حَسَنٌ، وَأَفْضَلُ مِنْهُ أَنْ يَذْكُرَ الْعَبْدُ اللَّهَ عِنْدَ الْمَعْصِيَةِ؛ فَيُمْسِكَ عَنْهَا

மைமூன் இப்னு மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"நாவினால் அல்லாஹ்வை நினைவு கூர்வது நல்ல செயலாகும். ஆனால், ஒரு அடியான் பாவத்தில் ஈடுபடக்கூடிய சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து, அந்தப் பாவத்தைச் செய்யாமல் தன்னைத் தடுத்துக்கொள்வது அதைவிடச் சிறந்ததாகும்."

Maymūn ibn Mihrān (RA) said:
“Remembering Allah with the tongue is good, but better than that is for a servant to remember Allah when faced with an opportunity to commit a sin, and therefore refrain from committing it.”

وقال عمر بن عبد العزيز
ليست التقوى قيام الليل، وصيام النهار، والتخليط فيما بين ذلك! ولكن التقوى أداء ما افترض الله، وترك ما حرّم الله، فإن كان مع ذلك عمل؛ فهو خير إلى خير
لَيْسَتِ التَّقْوَى قِيَامَ اللَّيْلِ، وَصِيَامَ النَّهَارِ، وَالتَّخْلِيطُ فِيمَا بَيْنَ ذَلِكَ! وَلَكِنَّ التَّقْوَى أَدَاءُ مَا افْتَرَضَ اللَّهُ، وَتَرْكُ مَا حَرَّمَ اللَّهُ، فَإِنْ كَانَ مَعَ ذَلِكَ عَمَلٌ؛ فَهُوَ خَيْرٌ إِلَى خَيْرٍ

உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"இரவில் நின்று வணங்குவதும், பகலில் நோன்பு நோற்பதும், அவற்றுக்கு இடையில் பல்வேறு செயல்களில் ஈடுபடுவதும் மட்டுமே இறையச்சம் (தக்வா) அல்ல.

மாறாக, அல்லாஹ் கடமையாக்கியவற்றை நிறைவேற்றுவதும், அவன் ஹராமாக்கியவற்றை விட்டு விடுவதுமே இறையச்சமாகும்.

இதனுடன் வேறு நல்லறங்களையும் ஒருவர் செய்தால், அது நன்மைக்கு மேல் நன்மையாகும்."

Umar ibn Abd al-Aziz (RA) said:

“Piety (Taqwa) is not merely standing in prayer during the night, fasting during the day, and engaging in a mixture of deeds in between. Rather, Taqwa is fulfilling what Allah has made obligatory and abandoning what He has forbidden. If, in addition to that, one performs further good deeds, then that is goodness upon goodness.”

وحاصل كلامهم يدلّ على أن اجتناب المحرّمات ـ وإن قلّت ـ فهي أفضل من الإكثار من نوافل الطاعات؛ فإن ذلك فرض، وهذا نفل. اهـ
مصدر الكتاب: الحافظ ابن رجب في جامع العلوم والحكم
 اُنْظُرْ
https://www.islamweb.net/amp/ar/fatwa/463669/

மேற்கண்ட அறிஞர்களின் கூற்றுக்களின் சாராம்சம் என்னவென்றால்:

ஹராமான செயல்கள் சிறியவையாக இருந்தாலும் அவற்றைத் தவிர்ப்பது, அதிகமான உபரியான வணக்கங்களைச் செய்வதைவிடச் சிறந்ததாகும். ஏனெனில், பாவங்களைத் தவிர்ப்பது கடமையாகும்; உபரியான வணக்கங்களோ விரும்பத்தக்கவையாகும். (இத்துடன் இமாம் இப்னு ரஜப் (ரஹ்) அவர்களின் மேற்கோள் முடிகிறது.)

நூல் ஆதாரம்:
இமாம் இப்னு ரஜப் (ரஹ்) அவர்களின் ஜாமிஉல் உலூமி வல் ஹிகம்.
பார்க்கவும்:
https://www.islamweb.net/amp/ar/fatwa/463669/

The summary of their statements
indicates that avoiding prohibited acts, even if they are few, is better than performing an abundance of voluntary acts of worship, because the former is obligatory, whereas the latter is voluntary. (This concludes the quotation from Imam Ibn Rajab (RA).)

Book source: Al-Hafiz Ibn Rajab, Jāmiʿ al-ʿUlūm wa al-Ḥikam.
Refer to:
https://www.islamweb.net/amp/ar/fatwa/463669/

https://youtu.be/utTK61z0Xr4?si=6E1f-SZCnkCkbdsm (37:27)

November 02, 2026

வாழ்வாதாரம் விசாலமாக்கப்பட்டு, ஆயுட்காலம் நீட்டிக்கப்பட வேண்டுமா?هَلْ تُرِيدُونَ أَنْ يُوَسَّعَ لَكُمْ فِي رِزْقِكُمْ، وَأَنْ يُمَدَّ فِي أَعْمَارِكُمْ؟ Do you wish for your provision to be increased and your lifespan to be extended?

அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

"யாருடைய வாழ்வாதாரம் விசாலமாக்கப்பட வேண்டும் என்றும், அவருடைய ஆயுட்காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறாரோ, அவர் தனது உறவுமுறைகளைப் பேணிக்கொள்ளட்டும்."

நூற்கள்: ஸஹீஹுல் புகாரி – 5986, ஸஹீஹ் முஸ்லிம் – 2557.

عَنْ أنس بن مالك رَضِيَ اللَّهُ عَنْهُ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ
مَن أحَبَّ أنْ يُبْسَطَ له في رِزْقِهِ، ويُنْسَأَ له في أثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ
أخرجه البخاري (٥٩٨٦) ومسلم (٢٥٥٧)

Abu Hurayrah (RA) reported: The Messenger of Allah (SAW) said:

"Whoever wishes to have his provision expanded and his lifespan extended, let him maintain his ties of kinship."

Hadith reference: Sahih al-Bukhari 5986; Sahih Muslim 2557.


அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்தான். அவற்றைப் படைத்து முடித்தபோது, உறவுமுறை (ரஹிம்) எழுந்து, அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வின் இடுப்பைப் பற்றிக்கொண்டது.
அப்போது அல்லாஹ் அதனிடம், "நிறுத்து!" என்று கூறினான்.
அதற்கு அது, "உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருபவனின் நிலை இதுவாகும்" என்று கூறியது.
அதற்கு அல்லாஹ், 'உன்னை எவன் சேர்த்து நடக்கிறானோ அவனை நானும் சேர்த்துக்கொள்வேன் என்பதும், உன்னை எவன் துண்டிக்கிறானோ அவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தி அளிக்கவில்லையா?' என்று கேட்டான்.
அதற்கு அது, 'ஆம், என் இறைவா!' என்றது.
அதற்கு அல்லாஹ், 'அவ்வாறாயின் அது உனக்கே உரியது' என்று கூறினான்."

அறிவிப்பாளர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் விரும்பினால் (அல்குர்ஆனின் பின்வரும் வசனத்தை) ஓதிக்கொள்ளுங்கள்:

(அதிகாரத்திற்கு) வந்துவிட்டால், பூமியில் குழப்பம் விளைவிப்பதற்கும், உங்கள் இரத்த உறவுகளைத் துண்டிப்பதற்கும் முற்படுவீர்களா? [முஹம்மத்: 22]."

மற்றொரு அறிவிப்பில், நபி ﷺ அவர்களே, "நீங்கள் விரும்பினால் இந்த வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்" என்று கூறியதாக வந்துள்ளது.

நூற்கள்: ஸஹீஹுல் புகாரி – 4830, ஸஹீஹ் முஸ்லிம் – 2554.

இந்த ஹதீஸின் முக்கிய படிப்பினை
உறவுகளைப் பேணுவது என்பது வெறும் சமூகப் பழக்கமல்ல; அது அல்லாஹ்வின் அருளையும் பாதுகாப்பையும் பெற்றுத்தரும் ஒரு முக்கியமான வணக்கமாகும்.

உறவுகளைப் பேணுபவருடன் அல்லாஹ் தனது அருளையும் உதவியையும் வழங்குவதாக வாக்களித்துள்ளான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ
خَلَقَ اللَّهُ الخَلْقَ، فَلَمّا فَرَغَ منه قامَتِ الرَّحِمُ، فأخَذَتْ بحَقْوِ الرَّحْمَنِ، فقالَ له: مَهْ، قالَتْ: هذا مَقامُ العائِذِ بكَ مِنَ القَطِيعَةِ، قالَ: ألا تَرْضَيْنَ أنْ أصِلَ مَن وصَلَكِ، وأَقْطَعَ مَن قَطَعَكِ، قالَتْ: بَلى يا رَبِّ، قالَ: فَذاكِ." قالَ أبو هُرَيْرَةَ: اقْرَؤُوا إنْ شِئْتُمْ: ﴿فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحامَكُمْ﴾ [محمد: ٢٢]. [وفي رواية]: قالَ رَسولُ اللَّهِ ﷺ: واقْرَؤُوا إنْ شِئْتُمْ: (فَهَلْ عَسَيْتُمْ)
أخرجه البخاري (٤٨٣٠) ومسلم (٢٥٥٤)

Abu Hurayrah (may Allah be pleased with him) reported: The Messenger of Allah ﷺ said:

"Allah created the creation. When He had finished creating them, the womb (i.e., the ties of kinship) stood up and took hold of the waist of the Most Merciful.
He said to it, "Stop!"
It said, "This is the position of one seeking refuge in You from the cutting off of family ties."
He said, "Are you not satisfied that I should maintain ties with whoever maintains you, and cut off ties with whoever cuts off ties with you?'

It said, "Yes indeed, my Lord."
He said, "Then that is for you."

Abu Hurayrah (رضي الله عنه) then said:
"If you wish, recite this verse:
 (فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُم)
"Would you then, if you were given authority, spread corruption on earth and sever your ties of kinship?"

In another narration: The Messenger of Allah ﷺ himself said, "And recite, if you wish: 'Would you then...?'"

Narrator: Abu Hurayrah (RA)
Sahih al-Bukhari: 4830, Sahih Muslim: 2554


உறவுமுறையைப் பேணுவதன் முக்கியத்துவம். أهمية صِلَةِ الرَّحِمِ The Importance of Maintaining Family Ties.

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்தான். அவற்றைப் படைத்து முடித்தபோது, உறவுமுறை (ரஹிம்) எழுந்து, அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வின் இடுப்பைப் பற்றிக்கொண்டது.

அப்போது அல்லாஹ் அதனிடம், "நிறுத்து!" என்று கூறினான்.
அதற்கு அது, "உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருபவனின் நிலை இதுவாகும்" என்று கூறியது.
அதற்கு அல்லாஹ், 'உன்னை எவன் சேர்த்து நடக்கிறானோ அவனை நானும் சேர்த்துக்கொள்வேன் என்பதும், உன்னை எவன் துண்டிக்கிறானோ அவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தி அளிக்கவில்லையா?' என்று கேட்டான்.
அதற்கு அது, 'ஆம், என் இறைவா!' என்றது.
அதற்கு அல்லாஹ், 'அவ்வாறாயின் அது உனக்கே உரியது' என்று கூறினான்."

அறிவிப்பாளர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் விரும்பினால் (அல்குர்ஆனின் பின்வரும் வசனத்தை) ஓதிக்கொள்ளுங்கள்:

(அதிகாரத்திற்கு) வந்துவிட்டால், பூமியில் குழப்பம் விளைவிப்பதற்கும், உங்கள் இரத்த உறவுகளைத் துண்டிப்பதற்கும் முற்படுவீர்களா? [முஹம்மத்: 22]."

மற்றொரு அறிவிப்பில், நபி ﷺ அவர்களே, "நீங்கள் விரும்பினால் இந்த வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்" என்று கூறியதாக வந்துள்ளது.

நூற்கள்: ஸஹீஹுல் புகாரி – 4830, ஸஹீஹ் முஸ்லிம் – 2554.

இந்த ஹதீஸின் முக்கிய படிப்பினை
உறவுகளைப் பேணுவது என்பது வெறும் சமூகப் பழக்கமல்ல; அது அல்லாஹ்வின் அருளையும் பாதுகாப்பையும் பெற்றுத்தரும் ஒரு முக்கியமான வணக்கமாகும்.

உறவுகளைப் பேணுபவருடன் அல்லாஹ் தனது அருளையும் உதவியையும் வழங்குவதாக வாக்களித்துள்ளான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ

خَلَقَ اللَّهُ الخَلْقَ، فَلَمّا فَرَغَ منه قامَتِ الرَّحِمُ، فأخَذَتْ بحَقْوِ الرَّحْمَنِ، فقالَ له: مَهْ، قالَتْ: هذا مَقامُ العائِذِ بكَ مِنَ القَطِيعَةِ، قالَ: ألا تَرْضَيْنَ أنْ أصِلَ مَن وصَلَكِ، وأَقْطَعَ مَن قَطَعَكِ، قالَتْ: بَلى يا رَبِّ، قالَ: فَذاكِ." قالَ أبو هُرَيْرَةَ: اقْرَؤُوا إنْ شِئْتُمْ: ﴿فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحامَكُمْ﴾ [محمد: ٢٢]. [وفي رواية]: قالَ رَسولُ اللَّهِ ﷺ: واقْرَؤُوا إنْ شِئْتُمْ: (فَهَلْ عَسَيْتُمْ....)

أخرجه البخاري (٤٨٣٠) ومسلم (٢٥٥٤)


Abu Hurayrah (may Allah be pleased with him) reported: The Messenger of Allah ﷺ said:

"Allah created the creation. When He had finished creating them, the womb (i.e., the ties of kinship) stood up and took hold of the waist of the Most Merciful.
He said to it, "Stop!"
It said, "This is the position of one seeking refuge in You from the cutting off of family ties."
He said, "Are you not satisfied that I should maintain ties with whoever maintains you, and cut off ties with whoever cuts off ties with you?'

It said, "Yes indeed, my Lord."
He said, "Then that is for you."

Abu Hurayrah (رضي الله عنه) then said:
"If you wish, recite this verse:
(فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ)
"Would you then, if you were given authority, spread corruption on earth and sever your ties of kinship?"

In another narration: The Messenger of Allah ﷺ himself said, "And recite, if you wish: 'Would you then...?'"

Narrator: Abu Hurayrah (RA)
Sahih al-Bukhari: 4830, Sahih Muslim: 2554


அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

"யாருடைய வாழ்வாதாரம் விசாலமாக்கப்பட வேண்டும் என்றும், அவருடைய ஆயுட்காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறாரோ, அவர் தனது உறவுமுறைகளைப் பேணிக்கொள்ளட்டும்."

நூற்கள்: ஸஹீஹுல் புகாரி – 5986, ஸஹீஹ் முஸ்லிம் – 2557.

عَنْ أنس بن مالك رَضِيَ اللَّهُ عَنْهُ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ
مَن أحَبَّ أنْ يُبْسَطَ له في رِزْقِهِ، ويُنْسَأَ له في أثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ
أخرجه البخاري (٥٩٨٦) ومسلم (٢٥٥٧)

Abu Hurayrah (RA) reported: The Messenger of Allah (SAW) said:

"Whoever wishes to have his provision expanded and his lifespan extended, let him maintain his ties of kinship."

Hadith reference: Sahih al-Bukhari 5986; Sahih Muslim 2557.